Friday, November 30, 2018

How_to_wtite_petition_to #District_collector_IAS ?

#How_to_wtite_petition_to
#District_collector_IAS ?

#மாவட்ட_ஆட்சியருக்கு_ஆன்லைன்
#மூலமாக_மனு_அனுப்புவது_எப்படி ?

*You tube URL*

https://youtu.be/AAMXDnUj3Jw

*URL For petition logging*
*மனு அனுப்புவதற்கான லிங்க்*

http://gdp.tn.gov.in

*URL for Petition status*
*PM மனு நிலை அறிய*

http://gdp.tn.gov.in/index.php

*PDF print App link*

https://play.google.com/store/apps/details?id=util.tools.print.pdfprint.pdfprint

By
*Johnson G* 9500194395

Saturday, November 10, 2018

கீரைகளின் நற்குணம

*நாட்டு⚖ நடப்பு*

*💗Mr.Health & Natural Life*💗

*பதிவு நாள்:10/ 11/ 2018*

*🌱கீரைகளின் நற்குணம்*

சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினும் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

👉🏻வெந்தயக்கீரை
👉🏻முருங்கைக்கீரை
👉🏻அரைக்கீரை

*💗கீரைகளின் மருத்துவ குணங்கள்:*😘

*🌱வெந்தயக்கீரை:*
👉🏻வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
👉🏻இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

*🌱முருங்கைக்கீரை:*
👉🏻இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.
👉🏻இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
👉🏻மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

*🌱அரைக்கீரை:*
👉🏻அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
👉🏻இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

*🌱சிறுகீரை:*
👉🏻உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும்.
👉🏻இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.

*🌱அகத்திக்கீரை:*
👉🏻இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.
👉🏻இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும் விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும்.
👉🏻அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். அளவாக சாப்பிட்டு வளம் பெறுவோம்.

*🌱மணத்தக்காளி கீரை:*
👉🏻இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.
👉🏻இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.

*🌱பாலக்கீரை:*
👉🏻இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.
👉🏻இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.

*🌱புளிச்சக்கீரை:*
👉🏻இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

*🌱பசலைக்கீரை:*
👉🏻இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
👉🏻இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.
கீரைகளின் மருத்துவ குணங்களை அறிந்து சரியான முறையில் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.😘

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் என்றும் அக்கறையுடன்

*💗Mr.Health & Natural Life*💗

Thursday, November 1, 2018