Sunday, August 23, 2015

நடைபயிற்சி 4 விஷயங்கள்


நடைபயிற்சி 4 விஷயங்கள்

1. யார் செய்யலாம்?

எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சி இது. 

முக்கியமாக நாற்பது வயதுக்கு மேலானவர்கள் அவசியம் தினம் நடந்தால் உடல் பிரச்னைகள் எதுவும் வரும் முன் தற்காத்துக் கொள்ளலாம்.

2. என்ன நடக்கிறது?

நடக்கும் போது நம் உடலில் உள்ள அனைத்து தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம்.

இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

3. எவ்வளவு தூரம் நடக்கலாம்?

அவரவர் வயது, உடல் தகுதிக்கு ஏற்றபடி நடக்கலாம்.

இவ்வளவு தூரம் தான் நடக்க வேண்டும் என்ற வரையறை இல்லை

(அதுக்குன்னு அடுத்தத் தெரு வரைக்கும் வாக்கிங் போனேன்னு பெருமிதப் படக்கூடாது)

தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை நடப்பது நல்லது என்கிறார்கள் ரெகுலர் வாக்கர்ஸ்.

4. பலன்கள்

சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்கும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கி, நுரையீரல் சுவாசத்தை சீராகும்.

மூட்டுகள் பலப்படும்

இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்கும்

மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

உடல் பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கும்.

சோர்வு நீங்கும்; எடை குறையும்.

ரெகுலராக செய்து வர மன அமைதி கிடைக்கும்.

No comments:

Post a Comment