Friday, May 4, 2018

கம்பு கூழ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

1/2 கப் கம்பு

4 கப் மோர்

10 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்

உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் கம்பை சேர்த்து கொள்ளவும். பின் ரவைப்போல் பொடித்துக் கொள்ளவும்.

பின் சிறிய குக்கரில் நேரடியாக பொடித்து வைத்துள்ள கம்பை‌ சேர்க்கவும். பின் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பின் மூடி போட்டு 2 முதல் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். நன்கு ஆறவிடவும். நீங்கள் முதல் நாள் இரவே வேகவைத்து கொண்டால் காலையில் சுலபமாக கூழ் செய்து விடலாம்.

அவை நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின் மோரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பரிமாறும் போது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் தூவி  பரிமாறவும். ஊறுகாய், துவையல், மோர் மிளகாய் வைத்து பரிமாறவும்

+++++++++++++++++++++++++++++

கம்பு எங்கு கிடைக்கும்? அதை மிஷினில் அரைக்க வேண்டுமா?

எல்லா மளிகை கடையில் கிடைக்கும் மிக்ஸியில் போட்டு சில சுற்று மட்டும் விட்டு எடுக்கவும்

±++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment