Thursday, September 19, 2019

சின்ன சீரகத்தின

*சின்ன சீரகத்தின் மருத்துவ குணங்கள்*

*சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.*

*அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.*

*நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.*

*சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.*

*மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.*

*சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.*

*சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.*

*ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.*

*சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.*

*சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.*

*சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.*

*சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.*

*ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.*

*கருஞ்சீரகத்திநறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.*

*கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.*

*தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.*

*கருஞ்சீரகத்தில் தைமோகியோனின்"ருேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.*

*தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.*

*புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.*

*சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.*

*பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.*

*கருஞ்சீரகத்த வெந்நீர் விட்டு அரைச்சு தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சா பூசி வந்தா சரியாகும். இந்த பொடிய காடி (நீராகாரம்) விட்டு அரைச்சு படை இருக்குற இடத்துல பூசலாம். அதோட, கரப்பான், சிரங்கு மாதிரி பிரச்சன இருக்குறவங்களுக்கு நல்லெண்ணெயில கருஞ்சீரக பொடிய சேத்து குழச்சு பூச குணமாகும். பசுவோட கோமியம் விட்டு அரைச்சு வீக்கம் உள்ள இடத்துல பூசுனா வீக்கம் குறையும். இந்த பொடிய தேன் விட்டு அரைச்சு பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வர்ற வலி குணமாகும். கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து தேன் கூட சேத்தோ இல்லேன்னா நீர் சேத்தோ கலந்து குடுத்தா மூச்சு முட்டல் பிரச்சன உள்ளவங்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.*

*கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து மோர் கூட கலந்து தொடர்ந்து குடிச்சு வந்தா விடாமல் வர்ற விக்கல் பிரச்சனை குணமாகும்.*

*1 கிராம் பொடிய எடுத்து* *நீராகாரத்தோட குடிச்சு வந்தா குடல்ல உள்ள புழுக்கள்லாம் வெளியேறிடும்*

*சளி, இருமலை போக்க கூடியதும்,* *தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,* *மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.*
*பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.*

*கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.*

*கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர  வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.*

*கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்*

இனிய நற்காலை நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment