Friday, December 6, 2019

பழ_மரங்கள்_நடக்கூடிய_மண்வகைகள்

#பழ_மரங்கள்_நடக்கூடிய_மண்வகைகள்
🌳🌳🌿🌿🥀🥀🌾🌾🌳🌳🌽🌽🌿🌿🌴🌴

இப்போது மழை காலம் ஆகையால் பழுதில்லாமல் அனைத்து விதைகளும் முளைத்துவிடும்

உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில் அனைத்து மரக்கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்

🍑#மா 
பல்வேறு மண்ணிலும் வளரும்,
களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. 
அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.
மண்கண்டம் ஆழம் வேண்டும். 
ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.

🍑#கொய்யா
களர் நிலத்திலும் அதிகமாக வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்களில் வறட்சியைத் தாங்கும். 
ஆயினும் பாசன நிலங்களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.

🍑#சப்போட்டா
இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தாங்கி வளரும்.
வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.

🍑#எலுமிச்சை
மண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். 
இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும். 
வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

🍑#மாதுளை
களர் ஈரப்பதத்தையும் தாங்கி வளரும்.
ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்

🍑#பப்பாளி
வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. 
வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும்.

சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.

🍑#சீத்தா
மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. 
வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும் 
ஆடுமாடு கடிக்காது. 

🍑#பலா
ஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை. 
காற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை. 
வடிகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல

🍑#சீமை இலந்தை
ஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும்.
வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.

🍑#நெல்லி 
குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும், 
கார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். 
காற்றிலே ஈரப்பதமான சூழ்நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.

🍑#தென்னை 
ஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.

No comments:

Post a Comment