Wednesday, April 22, 2020

பள்ளிவாசலில் செய்வது போல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே செய்வது எப்படி?

22/04/2020
பள்ளிவாசலில் செய்வது போல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே செய்வது எப்படி?
புனித ரமலான் மாதம் வந்துவிட்டது ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சியாகும் 

ஆனால் இந்த வருடம் கொரேனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த  ஊரடங்கு உத்தரவு உள்ளதால் பள்ளிவாசல்களில்  பொதுவாக வைத்து  அனைவருக்கும் வழங்கும் சூழ்நிலை இல்லாததால், அவரவர் வீடுகளில் செய்ய வேண்டி உள்ளது. சிலருக்கு நேன்பு கஞ்சி எப்படி வைப்பது என தெரியாத எதார்த்த நிலையும் உள்ளது நோன்பு காஞ்சி வைக்கும் முறைகளில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறைகள் மற்றும் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மாறுபட்டு இருக்கும் ஆனால்  அடிப்படையான கஞ்சி வைக்கும் முறை இது

நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.



 

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி = 500 கிராம் 

பூண்டு = 1 முழு பூண்டு 

கடலைப்பருப்பு = 50 கிராம் 

வெந்தயம் = 2 தேக்கரண்டி 

இஞ்சி = இருவிரல் அளவு 

சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன் 

மிளகாய்பொடி = அரை டீஸ்பூன் 

உப்பு = தேவையான அளவு 

பெரிய வெங்காயம் = 2 

கேரட் = பாதி 

தக்காளி = 2 

சமையல் எண்ணை = 50 மில்லி 

பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது) 

புதினா+மல்லி = தலா ஒரு கொத்து 

எலுமிச்சம் பழம் = 1 

தேங்காய்ப் பால் = 300 மில்லி 

அசைவமாக இருந்தால் மட்டன் கைமா கறி = 100 கிராம் 


சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை: 

சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி ஊற வைத்துது கொள்ளவும்

தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி நீரில் அலசி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் வைத்து கொள்ளவும்.  

இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 


செய்முறை: 

கஞ்சி செய்யும் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும். 

பொன்நிறத்தில் நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.

அசைவ கஞ்சியாக இருந்தால் கறியை சேர்த்து  வதக்கவும்.

நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் 

வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியினை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். 

மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும். 

கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும். 

தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிபிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும். 

அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும். 

புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார். 

இது போன்று செய்யும் போது சில நேரம் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அசைவமாகவும் செய்து கொள்ளலாம்

நல்ல சூடான சுவையான நோன்பு கஞ்சி தயார்.......

Tuesday, April 21, 2020

காய்கறிகள் பயிரிட வேண்டும்?

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

ஜனவரி: (மார்கழி - தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.

பிப்ரவரி: (தை - மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.

மார்ச்: (மாசி - பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.

மே: (சித்திரை - வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி - ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.

நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.

Monday, April 20, 2020

எந்த மரம் எதற்கு உகந்தது என்பதை தெரிந்து கொள்வோம்

எந்த மரம் எதற்கு உகந்தது என்பதை தெரிந்து கொள்வோம்

1.கோடை நிழலுக்கு
வேம்பு
தூங்குமூஞ்சி
புங்கன் 
பூவரசு
மலைப்பூவரசு
காட்டு அத்தி
வாத மரம்.

2.பசுந்தழை உரத்திற்கு
புங்கம்
வாகை இனங்கள் 
கிளைரிசிடியா 
வாதநாராயணன் 
ஒதியன்
கல்யாண முருங்கை 
காயா
சூபாபுல்
பூவரசு.

3.கால்நடைத் தீவனத்திற்கு
ஆச்சா
சூபாபுல்
வாகை
ஒதியன்
தூங்குமூஞ்சி
கருவேல்
வெள்வேல்.

4.விறகிற்கு 
சீமைக்கருவேல் 
வேலமரம்
யூகலிப்டஸ்
சவுக்கு
குருத்தி
நங்கு
பூவரசு
சூபாபுல்.

5.கட்டுமான பொருட்கள் 
கருவேல்
பனை
தேக்கு
தோதகத்தி
கருமருது
உசில்
மூங்கில்
விருட்சம்
வேம்பு
சந்தனவேங்கை 
கரும்பூவரசு 
வாகை 
பிள்ளமருது
வேங்கை
விடத்தி

6.மருந்து பொருட்களுக்கு 
கடுக்காய்
தானிக்காய்
எட்டிக்காய்

7.எண்ணெய்க்காக 
வேம்பு
பின்னை
புங்கம்
இலுப்பை
இலுவம்

8.காகிதம் தயாரிக்க 
ஆனைப்புளி
மூங்கில்
யூகலிப்டஸ்
சூபாபுல் 

9. பஞ்சிற்கு 
காட்டிலவு 
முள்ளிலவு
சிங்கப்பூர் இலவு

10.தீப்பெட்டித் தொழிலுக்கு 
பீமரம்பெருமரம் 
எழிலைப்பாலை 
முள்ளிலவு

11.தோல்பதனிடவும் மை தயாரிக்கவும்
வாட்டில்
கடுக்காய்
திவி – திவி
தானிக்காய்

12.நார் எடுக்க
பனை
ஆனைப்புளி

13.பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த
வேம்பு
புங்கம்
ராம்சீதா
தங்க அரளி

14.கோயில்களில் நட 
வேம்பு
வில்வம்
நாகலிங்கம்
தங்க அரளி
மஞ்சளரளி
நொச்சி
அரசு

15.குளக்கரையில் நட 
மருது
புளி
ஆல்
அரசு
நாவல்
அத்தி
ஆவி
இலுப்பை

16.பள்ளிகளில் வளர்க்க 
நெல்லி
அருநெல்லி
களா
விருசம்
விளா
வாதம்
கொடுக்காப்புளி
நாவல்

17.மேய்ச்சல் நிலங்களில் நட
வெள்வேல்
ஓடைவேல், 
 தூங்குமூஞ்சி

18.சாலை ஓரங்களில் நட
புளி
வாகை
செம்மரம்
ஆல்
அத்தி
அரசு
மாவிலங்கு

19.அரக்கு தயாரிக்க
குசும்
புரசு
ஆல்

20.நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட 
நீர்மருது
நீர்க்கடம்பு
மூங்கில்
நாவல்
தைல மரம்
ராஜஸ்தான் தேக்கு
புங்கன்
இலுப்பை

Saturday, April 18, 2020

சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்: பச்சரிசி = 500 கிராம் பூண்டு = 1 முழு பூண்டு கடலைப்பருப்பு = 50 கிராம் வெந்தயம் = 2 தேக்கரண்டி இஞ்சி = இருவிரல் அளவு சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன் மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன் உப்பு = தேவையான அளவு பெரிய வெங்காயம் = 2 கேரட் = பாதி தக்காளி = 2 சமையல் எண்ணை = 50 மில்லி பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது) புதினா+மல்லி = தலா ஒரு கொத்து எலுமிச்சம் பழம் = 1 தேங்காய்ப் பால் = 300 மில்லி மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்

 சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:

 1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும். 2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும். 3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 

4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

செய்முறை: 

 சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும். 8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும். 

9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். 10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும். 11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். 12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும். 14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும். 16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும். 17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும். 18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார்

வீட்டிலேயே சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?*

☪🕋☪🕋☪🕋☪
*🏡வீட்டிலேயே சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?*

*📑தேவையான பொருட்கள்:*

*🍚பச்சரிசி - 500 கிராம்*
*🧄பூண்டு - முழு பூண்டு-1*
*🥜கடலைப்பருப்பு -50 கிராம்*
*🧂வெந்தயம் - 2 தேக்கரண்டி*
*🥐இஞ்சி - இருவிரல் அளவு*
*🧂சீரகப்பொடி - 2-3 தேக்கரண்டி*
*🥫மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன்*
*🌶மிளகாய்பொடி - அரை டீ ஸ்பூன்*
*🧂உப்பு - தேவையான அளவு*
பெரிய வெங்காயம் - 2 
*🥕கேரட் - பாதி*
*🍅தக்காளி - 2*
*🥫சமையல் எண்ணை - 50 மில்லி*
*🌶பச்சை மிளகாய் - 2-3 (காம்பு நீக்கியது)*
*🥬புதினா+மல்லி -தலா ஒரு கொத்து*
*🍋எலுமிச்சம் பழம் - 1*
*🥥தேங்காய்ப் பால் - 300 மில்லி*
*🐐மட்டன் எலும்பு/கறி - 100 கிராம்*

*👨🏻‍🍳சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:*

*🌐1. சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், சிறு பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.*

*🌐2. ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.*

*🌐3. தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.*

*🌐4. புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.*

*🌐5. கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.*

*🌐6. எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.*

*👩🏻‍🍳செய்முறை:*

*🔮1. சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.*

*🔮2. நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.*

*🔮3. ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.*

*🔮4. நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.*

*🔮5. வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.*

*🔮6. மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.*

*🔮7. அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1க்கு 3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.*

*🔮8. கொதி வந்த பிறகு அரிசியை  மெல்லமாக போட்டு 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.*

*🔮9. கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.*

*🔮10. தேவையான அளவு உப்பு கலந்து சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.*

*🔮11. அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.*

*🔮12. புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார்*

*💻மேலும் இஸ்லாம் மற்றும் சமுதாய செய்திகளை தெறிந்துகொள்ள நமது பக்கத்தை லைக் செய்யவும்:*

*📲ISLAM AND SOCIAL MESSAGE*