Thursday, May 7, 2020

கடல் பாசி

கடல் பாசி

இஸ்லாமியர்கள் விரும்பி உண்ணும் ஓர் ஊட்டச்சத்து மிக்க உணவு !!!

இஸ்லாமியர்களின் பண்டிகையில் பரிமாறப்படும் ஓரு முக்கிய உணவு !!!

பூமியில் வளரும் பல தாவரங்கள், மூலிகைகளாக பயன் படுகின்றன. அது போல், கடல் தாவரமான கடல் பாசியும், மருந்தாக பயன் படுகின்றன. சிவப்பு பாசி, பச்சை பாசிகளில் “கராகினன்” என்ற மருத்துவ பொருள் இருக்கிறது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. “க்ப்னியா நிடிபிகா” என்ற கடல்பாசி , பலவகையான வயிற்று தொல்லைகளுக்கு மருந்தாகிறது. 

“துர்வில்லியா”என்ற கடல் பாசி, சர்ம வியாதிகளை குணப்படுத்துகிறது. பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ’அகர் அகர்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.

கடல் பாசி என்பது இயற்கையின் வரப்பிரசாதம். 500 மில்லி கிராம் கடல் பாசி ஒரு கிலோ காய்கறிக்கு சமம். கடல் பாசியினை மாத்திரையாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கிராம் கொண்ட இரண்டு மாத்திரையும், சிறியவர்கள் அரை கிராம் கொண்ட ஒரு மாத்திரையும் சாப்பிடலாம். 

புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். 

கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. 

விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்,. 

இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகில் சுமார் 25 ஆயிரம் வகை பாசிகள் இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. 

ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம். 

எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு நோயாளிகட்குத் தேவையான சக்தியை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பாசியில் இருக்கும் கொழுப்பில் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கின்ற “காமலினோளிக்‘
அமிலம் உள்ளது.
இந்த பாசியில் இருந்து பிஸ்கெட், சாக்லேட், முறுக்கு, சேமியா, அப்பளம், லட்டு, குளிர்பானம் எனப் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்து இயற்கை உணவகங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் பாசி - சில மருத்துவ பயன்கள்

1. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது.
2. உடல் சூட்டை தணிக்கும்.
3. இதில் வைட்டமின், மினரல் மற்றும் ப்ரோடீன் நிறைந்து இருக்கிறது.

 கடல் பாசி என்பது China grass என்று ஆங்கிலத்தில் கூறப்படும் 
இங்கே கொடுக்கப்பட்டுள்ள கடல்பாசி இனிப்பு செய்முறை மிகவும் எளிதானது. இதனையே பல்வேறு முறைகளில் இஸ்லாமியர்கள் செய்வார்கள்.

இளநீர் கடல்பாசி தயாரிக்கும் முறை :-

 • கடல் பாசி - 10 கிராம்
 • 
 • தண்ணீர் - இரண்டு டம்ளர்
 • 
 • இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை (அ) முக்கால் டம்ளர்
 • 
 • சர்க்கரை - தேவையான அளவு
 • 
 • இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய்
 • 
 • பாதா‌ம் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி 
(பொடியாக‌ அரிந்த‌து தேவைப்ப‌ட்டால்)

செய்முறை :

* ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொண்டே கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

* இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். 

* சதுரமாக உள்ள பாத்திரத்தில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து கலந்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். 

* அடுத்து அதன் மேல் பாதாமை தூவவும்.

* சூடு ஆறியதும் லேசாக கெட்டி ஆகும். அப்போது அந்த பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைக்கவும்.

* கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும். 

தகவல் :-மரபு வழி சித்த வைத்தியர் மாலிக்
வைத்தியர் ஹெர்பல்ஸ்
8220320197

No comments:

Post a Comment