Saturday, November 14, 2020

சமூக விழிப்புணர்வு பற்றியது

சமூக விழிப்புணர்வு பற்றியது 
---------------------------------------------------

#மகள்களை_பெற்ற_அப்பாக்களுக்கு
காலம் மிகவும் கெட்டுக் கிடக்கு! 
நாம் தான் இன்னும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

பெண் பிள்ளைகளுக்கு
 #பேட்_டச் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொடுக்காமல், 
அந்த பேட் டச்சுகான சமிக்ஞைகள் எவ்வாறு இருக்கும், சில செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் ஆபத்திலிருந்து முன்கூட்டியே எவ்வாறு நம்மை சுதாரித்து தற்காத்து கொள்ள முடியும் என்பதை முதலில் பெண் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்

காரணம் வலிமை நிறைந்த தேகம் உண்ணும் 
#மனித&மிருகங்களிடம் பிஞ்சுகள் மாட்டிக்கொண்ட பின் தப்பிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல

முதலில்,

1. எவர் மடியிலும் அமரக் கூடாது

2. எவரையும் தொட்டு பேசக்கூடாது

3. எவரையும் தன்னை தொட்டு பேசவும் அனுமதிக்க கூடாது

4. யாருடனும் தனியே செல்லக் கூடாது

5. அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

6. அழகை அடிக்கடி வர்ணிப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

7. பணத்திற்க்கு அதிகமான தின்பண்டங்களை கொடுக்கும் கடைக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

8. அடுத்தவருக்கு கைக் கொடுக்கும் போது அவர்களின் விரல்களின் தடுவுதல், உராய்வுகளை உணர வேண்டும்.

9. அடுத்தவரிடம் பேசும் போதும், விளையாடும் போது ஆடைகள் அங்கத்தில் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

10. கால்களை அகட்டி அமரக்கூடாது, உள்ளாடையின்றி யார் முன்பும் அமரக்கூடாது.

11. அக்கம் பக்கம் வீட்டாருக்கு பலகாரங்கள் கொண்டு போகும் போது உடன் அழைத்தவர்களுடன் அறைக்குள் உடனே செல்லக் கூடாது.

12. அனைவரையும் மாமா என்று அழைக்க கூடாது.

13. ஜ லவ் யூ என்ற வார்த்தையை எவரிடமும் உபயோகிக்க கூடாது.

14. காரணமின்றி எவருடனும் இரண்டு சக்கர வாகனத்தின் முன்பு அமர்ந்து செல்லக் கூடாது.

15. அடிக்கடி விளையாடுவது போல் கண் அடிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

16. இவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்படும் பட்சத்தில், எந்த தயக்கமும் இல்லாமல், கூச்சமும் இல்லாமல் உடனே அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ அந்த நபரின் செய்கைகளையும், எந்த நபர் என்பதை பற்றியும் சொல்ல உடனே வேண்டும்.

#குறிப்பு

குறிப்பிட்டுள்ள இந்த அத்துனை சமிக்ஞைகளையும் அப்பாக்கள் மட்டுமே பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்,

காரணம் பெண் பிள்ளைகள் அம்மாவை காட்டிலும் அப்பாவின் அன்புக்கரசிகள் என்பதால் அப்பாவின் வார்த்தைகள் பசு மரத்து ஆனி போல் பெண் பிள்ளைகள் மனதில் நன்கு பதியும், கூடவே அவற்றை கையாலும் தைரியமும் பிறக்கும்,

பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எவரை அனுமதிக்க வேண்டும்,? 

பெண் பிள்ளைகள் எவர் வீட்டுக்கு சென்று வர வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் கண்கொத்தி பாம்புகளாக கவனித்து முடிவெடுக்க வேண்டும்,
பதிவுக்கு நன்றி:
Fiyas Mohamed

No comments:

Post a Comment