Friday, February 19, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) -

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1.தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2.திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
இன்னும் கல்யாணம் ஆகலயா?
குழந்தைகள் இல்லையா?
இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?
ஏன் இன்னும் Car வாங்கவில்லை?
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5.தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7.மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும்  பயன்தரும் என்றால் பகிரவும். 
❤️❤️❤️❤️

Thursday, January 7, 2021

நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.

நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.
*******************************************

குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்றாகத் திகழ்வது நாட்டுக்கோழி வளர்ப்பு. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழிலில் உள்ள சவாலான பணி எதுவென்றால். 

கோழிக்குஞ்சுகளைப் பராமரிப்பதுதான் கடினம். அவ்வாறு பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். 
கோழிக்குஞ்சுகளுக்கு மஞ்சள் சீரக மருந்து  கொடுக்க வேண்டும்.

1- ( 7ம் -10ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு மஞ்சல், சீரக மருந்து தயாரிக்கும் முறை.

சீரகம் - 10g, மஞ்சள் - 5g, தண்ணீர்  1½ லிட்டர் கொதிக்க வைத்து 1 லிட்டராக்க வேண்டும்.

2- ( 14ம் - 20ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு
வேப்பிலை, முருங்கைலை அறைத்து ஆகியவற்றையும் கொடுக்கலாம். 1 மாதத்திற்கு பிறகு வாரம் 1 முறை கொடுக்கவும்.

3- ( குடற்புழு நீக்கம் Deworming )
( 45ம் - 90ம் ) நாட்களான கோழிகுஞ்சிற்கு
 2 லிட்டர் தண்ணீரில் 250g கற்றாழையைக் கலந்து கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றையும் மாதம் இரு முறை இதனைக் கடைப்பிடித்தால் எளிதில் நோய்த்தன்மை, குடற்புழு நீக்கம் செய்ய முடியும்.

Saturday, January 2, 2021

அழுத்தமான பதிவு

ஆழமான, அழுத்தமான பதிவு. 
படித்து சுதாரித்து கொள்ளுங்கள்!

💘 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

💟 வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.

💗 நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

💌 மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

💓 பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்,
குணம் இருந்தால் நீ குப்பை, நடித்தால் நீ நல்லவன். உண்மை பேசினால் கோமாளி
அன்பு காட்டினால் ஏமாளி என்று நினைப்பவரிடம் விலகி இருப்பதே நல்லது.

💖 நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும், சில வலிகள் இல்லாமல் தவிர்க்க...

💝 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள். அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படு, இதுவும் கடந்து போகும்.

💞 நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.

💔 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை. 
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால், எல்லோரும் உன் தவறை மட்டும் கவனிப்பார்கள்!