Thursday, January 7, 2021

நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.

நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.
*******************************************

குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்றாகத் திகழ்வது நாட்டுக்கோழி வளர்ப்பு. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழிலில் உள்ள சவாலான பணி எதுவென்றால். 

கோழிக்குஞ்சுகளைப் பராமரிப்பதுதான் கடினம். அவ்வாறு பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். 
கோழிக்குஞ்சுகளுக்கு மஞ்சள் சீரக மருந்து  கொடுக்க வேண்டும்.

1- ( 7ம் -10ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு மஞ்சல், சீரக மருந்து தயாரிக்கும் முறை.

சீரகம் - 10g, மஞ்சள் - 5g, தண்ணீர்  1½ லிட்டர் கொதிக்க வைத்து 1 லிட்டராக்க வேண்டும்.

2- ( 14ம் - 20ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு
வேப்பிலை, முருங்கைலை அறைத்து ஆகியவற்றையும் கொடுக்கலாம். 1 மாதத்திற்கு பிறகு வாரம் 1 முறை கொடுக்கவும்.

3- ( குடற்புழு நீக்கம் Deworming )
( 45ம் - 90ம் ) நாட்களான கோழிகுஞ்சிற்கு
 2 லிட்டர் தண்ணீரில் 250g கற்றாழையைக் கலந்து கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றையும் மாதம் இரு முறை இதனைக் கடைப்பிடித்தால் எளிதில் நோய்த்தன்மை, குடற்புழு நீக்கம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment