Friday, May 30, 2014

நீங்க கலர் ஃபிஷ் வளக்குறீங்களா?

நீங்க கலர் ஃபிஷ் வளக்குறீங்களா? இதோ உங்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்

* நீங்கள் வளர்க்கும் மீன்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்க வேண்டும். இதற்காக மின் கடைகளின் பிரத்யே கமாக விற்கப்படும் வாம்ஸ், பெல்லட்ஸ் போன்ற உணவுகளை கொடுப்பது நல்லது.

* அலங்கார மீன்களை தொற்று நோய்கள் சில எளிதில் தாக்ககூடும், அவற்றை தடுக்க அதற்கான மருந்தை பயன்படுத்த வேண்டும்.

* உங்களின் தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உருவத்துக்கு ஏற்றவாறு அதற்கான ஆக்சிஜன் மோட்டார் களை பயன்படுத்த வேண்டும்.

* நீங்கள் வாங்கும் மீன்களை வீட்டுக்கு கொண்டு சென்றவுடன் உடனடியாக மீன்களை தொட்டிக்குள் விடக்கூடாது. ஏனென்றால் உங்கள் வீட்டில் உள்ள தொட்டியின் தட்பவெட்ப நிலையும், வெளியில் இருக்கும் தட்பவெட்ப நிலையும் ஒன்றாக இருக்காது. இது மீன்களை பாதிக்கக்கூடும்

* மீன்கள் இருக்கும் பாக்கெட்டை தொட்டியில் சிறிது நேரம் மிதக்க விட்டு அதன் பின் தொட்டியில் விட வேண்டும்.

* 6 மீன் தொட்டியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, டிடர்ஜென்ட் பவுடர் போட்டு சுத்தம் செய்ய கூடாது. டாய்லெட் டுக்கு பயன்படுத்தும் சாதாரண ஆசிட்டை கொண்டு ஊற்றி சுத்தம் செய்தாலே போதுமானது.

* சிலர் மீன்களை மெட்ரொ வாட்டரில் வளர்க்க தயங்குவார்கள் அப்படி இல்லை மெட்ரோ வாட்டரிலும் மீன்கள் வளர்க்கலாம் ஆனால் மெட்ரோ வாட்டரை பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு முன்பே பிடித்து வைக்க வேண்டும். அப்போது தான் அவற்றில் நீரில் உள்ள குளோரின் காற்றில் கரையும்.

* மீன் தொட்டியில் அன்டர் கேர்வல் பில்டர் என்ற கருவியை பயன்படுத்தலாம். இந்த கருவி தொட்டியில் இருக்கும் கழிவுகளை உட் கிரகிக்கும் தன்மை கொண்டது. சிப் வகை கற்களை தொட்டியில் வைக்கலாம். இந்த கற்கள் அதிகளவில் அழுக்குகளை தங்கவிடாது.

* பில்டர் இருக்கும் தொட்டியை 3 மாதங்களுக்கு ஒரு முறை கழுவினால் போதும். பில்டர் இல்லாத தொட்டியை 15 நாட்களுக்குள் ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment