Friday, May 9, 2014

ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? :

ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி?

ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி?
அரசின் பல்வேறு சலுகைகளை பெறவும், பொது வினியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்களை பெறவும், குடும்ப அட்டை மிகவும் அவசியம். தமிழக அரசு, குடும்ப அட்டை பெறுவதற்கு பல்வேறு தகுதிகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து, சென்னையில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், மற்ற மாவட்ட பகுதிகளில் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

60 நாள் : விண்ணப்பங்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும். 60 நாட்களுக்கு மேல், காலதாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் துறை அதிகாரியை சந்தித்து, கால தாமதத்துக்கான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள், மேல்முறையீடு மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் தெற்கு ஆகியோரிடம் முறையிடலாம். பிற மாவட்ட பகுதிகளில், மாவட்ட வழங்கல் அலுவலரை அணுகலாம்.

புகார் எங்கே?: புகார் செய்ய விரும்பினால், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தை 044- 28592255, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment