Wednesday, October 11, 2017

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு : சென்னை நுகர்வோர் நீதிமன்றம்:

சென்னை,
ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை மற்றும் இழப்பீடாக ரூ.3½ லட்சம் வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் சுந்தரசெல்வன். டென்னிஸ் பயிற்சியாளர். இவர், சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பெற முடியும்.
கடந்த 2014–ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்டேன். இதைதொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 லட்சம் செலவானது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை வழங்க மறுத்துவிட்டது.
காரணம் கேட்டபோது, எனக்கு இருதய பாதிப்பு 15 ஆண்டுகளாக இருந்து வருவதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு முன்பே இருதய நோய் இருந்ததால் காப்பீடு பெற தகுதியில்லை என்றும் கூறியது.
ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனவே, எனக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு ஆகும்.
எனவே, மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Source: dailythanthi. ஜூலை 20, 2017,

காப்பீடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:

Pay emergency claim, district consumer disputes redressal forum to insurance company:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214213152055900
தாமதத்திற்காக இழப்பீட்டை மறுக்கக் கூடாது: காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214180058725876
வாரிசு சான்றிதழில் பெயர் இல்லை எனக்கூறி ஒருவருக்கான விபத்து இழப்பீட்டு தொகையை தர காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213594132117802
கைகளை இழந்த சிறுவனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213549725455576
பாலிசி எடுத்தவர் 23 நாட்களில் உயிரிழப்பு: வாரிசுக்கு, காப்பீட்டு நிறுவனம், ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு :
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1204849702992245
சென்னை: பெண்ணுக்கு மருத்துவ செலவு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1198538986956650
ரூ.2 இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன், காப்பீடு செய்தவருக்கு கிடைக்கத்தக்கது – நீதிமன்றம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1197320830411799
வீட்டில் திருட்டு போன பொருட்களுக்கு ரூ.3.64 லட்சம் இழப்பீடு தர உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196761233801092
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவர் செலுத்திய தொகையை திரும்ப வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196165527193996
ஆயத்த ஆடை கடை உரிமையாளருக்கு ரூ.9.64 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212939015516647
Murder can be accident, forum tells insurer: [மாநில நுகர்வோர் ஆணையம் சென்னை]
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212765032200712
லாரி உரிமையாளருக்கு வாகன இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209999202477295
மினி லாரியின் உரிமையாளருக்கு இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209990939144788
வாகனத்தை பழுதுபார்த்த தொகையை வழங்காததால் வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1207829029360979

No comments:

Post a Comment