Wednesday, January 17, 2018

சாப்பிடவேண்டிய உணவுகள்

தினமும் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்

நம்முடைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டுமென்று பால், முட்டை, கீரை போன்ற கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் பொட்டாசியம், மக்னீசியம், ஜிங்க் போன்றவற்றைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

ஆனால் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை நம்முடைய உடலுக்கு அவசியம் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் ஆகும். அவை நிறைந்துள்ள உணவுகளை நம்முடைய தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. அப்படி என்னென்ன உணவுகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எவற்றை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

🔘 பழங்களிலேயே வேறு எந்த பழத்துக்கும் இல்லாத சிறப்பு வாழைப்பழத்துக்கு உண்டு. ஆம் வாழைப்பழம் மட்டும் தான் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. அதோடு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் இருந்து மட்டுமே நமக்கு 422 மில்லிகிராம் வரையிலும் பொட்டாசியம் கிடைக்கிறது.

🔘 சர்க்கரை வள்ளிக்கிழங்கை பொதுவாக எல்லோருமே விரும்பிச் சாப்பிடுவதுண்டு. ஆனால் அடிக்கடி சாப்பிடுவதில்லை. அதற்கு இன்னொரு காரணம் அதுவும் சில சீசன்களில் மட்டுமே கிடைக்கும். நாம் வெறும் சுவைக்காக மட்டுமே சாப்பிடுகிற சர்க்கரை வள்ளிக்கிழங்கில் முழுக்க முழுக்க புரதமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. ஒரேயொரு சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மட்டுமே நமக்கு 542 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.

🔘 பட்டர் ஃபுரூட்டை நமக்குக் கிடைத்த அதிசயப் பழம் என்று கூட சொல்லலாம். நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம் என அத்தனை சத்துக்களும் இதில் உள்ளன. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்து டயட்டில் இருப்பவர்கள் தினமும் தாராளமாக பட்டர் ஃபுரூட்டை நிறையவே எடுத்துக் கொள்ளலாம். பாதி பழத்திலேயே நமக்கு 487 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது.

🔘 பீன்ஸ் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, வெள்ளை நிற பீன்ஸ் விதைகளில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. அரை கப் வெள்ளை பீன்ஸில் கிட்டதட்ட 502 மில்லிகிராம் பொட்டாசியம்  நமக்குக் கிடைக்கிறது. 

🔘 தயிர் மிகச்சிறந்த, ஆரோக்கியமான சிற்றுண்டிகளுள் ஒன்று. சாதாரண தயிரைவிடவும் சிறந்த உணவு இருக்க முடியாது. அதனால் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நம்முடைய உணவோடு தாராளமாக தயிரைச் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் 8 அவுன்ஸ் தயிருக்குள்ளேயே நமக்கு 579 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது. தயிரில் பொட்டாசியம் மட்டுமல்லாது புரதம், கால்சியம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

🔘 கீரையில் வெறுமனே வைட்டமின் ஏ மட்டும் இருக்கிறதென நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கீரையில் தாராளமாக பொட்டாசியம் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக, ஸ்பின்னாக்கில் மற்ற எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத அளவுக்கு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. ஒரு கப் ஸ்பின்னாக் கீரையிலிருந்து மட்டுமே நமக்கு 839 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது.

அதனால் இந்த உணவுகளை நாம் நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment