Monday, August 6, 2018

தினம் ஒரு சட்னி

தினம் ஒரு சட்னி😀😀😀😀

எல்லா பெண்களுக்கும் காலையில் காபி குடித்ததும் இட்லிக்கு இன்று என்ன சட்னி வைக்கலாம் என்ற குழப்பம் வந்து விடும், நான் எனக்கு தெரிந்த 4 சட்னி வகைகளை தொகுப்பாக கொடுக்கிறேன்.நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்க. இன்னும் எனக்கு தெரிந்த சட்னி வகைகளை ஷேர் பண்ணுகிறேன்.

வெங்காய சட்னி -

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்த வெங்காய சட்னி டேஸ்ட் செமயா இருந்தது

பெரிய வெங்காயம் - 1/2 கப்,சின்ன வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 1, மிளகாய் வத்தல், 2 இஞ்சி - சிறிது, பூண்டு பற்கள் - 2, பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி எல்லாவற்றையும் வதக்கி உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். அருமையான வெங்காய சட்னி ரெடி.

உளுந்து சட்னி -

தேவையான பொருள்கள் -

தேங்காய் துருவல் - 3/4 கப்,
தோல் உளுந்து - 1/4 கப்.
புளி - சிறிய கோலி அளவு
பச்சை மிளகாய் - 2
பூண்டுப்பற்கள் - 3,
உப்பு - தேவையான அளவு

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எல்லா பொருள்களையும் தனித்தனியாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்

தோல் உளுந்துக்கு பதில் வெள்ளை உளுந்தும் பயன்படுத்தலாம். தோல் உளுந்து நல்ல ருசியை கொடுக்கும்.

தேங்காய் தக்காளி சட்னி -

தேங்காய் துருவல் - 3/4 கப்,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு தேவையான அளவு

தாளிக்க -
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான தேங்காய் தக்காளி சட்னி ரெடி.
  
சிறிது வித்தியாசமான தேங்காய் சட்னி

தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 2
முந்திரிப்பருப்பு - 6
புளி - சிறிய கோலி அளவு
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை -

அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும்.

No comments:

Post a Comment