Tuesday, October 23, 2018

மின்நுகர்வோரின் சந்தேகங்களுக்கு தீர்வு காண

மின்நுகர்வோரின்  சந்தேகங்களுக்கு   தீர்வு காண

1. நான் ஒரு புதிய இணைப்பு பெறுவது எப்படி?
தங்களின் வயரிங்குகளை ஒரு அரசு மின் உரிமம் பெற்ற உரிமையாளர் மூலம் செய்து முடிக்கவும்.பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவி பொறியாளர்/இயக்குதல் & பராமரிப்பு, தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மின்வாரிய இணைய தளத்தில் உள்ளது.மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும்.

2. ஒருமுனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற நான் செய்ய வேண்டியது என்ன?
தங்களிடம் உள்ள அனைத்து "இணைக்கப்பட்ட மின் திறன்களை" மும்முனை இணைப்புகளுக்கு சமமாக பகிர்தளிக்கும் வகையில் (அதன் கூட்டு மின்திறன் 4KW மற்றும் அதற்கும் மேலாக இருக்கும்படி) வயரிங்கை தக்கவாறு செய்து கொள்ள வேண்டும், பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும்.

3. மின்தடை நேரத்தில் நான் யாரிடம் புகார் செய்யவேண்டும்?
தங்களுடைய புகாரை தங்கள் பகுதியில் உள்ள மின்தடை நீக்கும்மையத்திலோ (FOC) (அ) தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் இடத்தில் பதிவு செய்யலாம். அல்லது கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும்மையம் தொலைபேசி எண் 155333 மூலமாகவும் பதிவு செய்யலாம்.

4. மின் இணைப்புக்குரிய பெயர் மாற்றம் செய்ய வேண்டிய முறைகள் என்ன?
மாற்றப்படும் உரிமத்திற்கு உரிய தேவையான ஆவணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி எடுத்துக் கொண்டு தங்களின் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் அவர்களை மற்ற விவரங்களுக்கு அணுகவும்.

5. மின் அளவி (Meter) பதிவில் முரண்பாடு இருப்பின் நான் செய்ய வேண்டியது என்ன?
தாங்கள் சந்தேகிக்கும் வகையில் மீட்டர் பதிவில் அதிகப்டியாகவோ (அ) குறைந்த படியாகவோ நிகழ்வு ஏற்பட்டால், தங்கள் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களிடம் எழுத்து மூலம் முறையிடவும். மேலும் மற்ற விவரங்களுக்கு மேற்சொன்ன அலுவலரை அணுகவும்,அதுபோல்,தங்கள் மீட்டரில் எந்த நுகர்தலின் பதிவு நிகழவில்லையென்றாலும் உடனடியாக அலுவலரிடம் தெரிவிக்கவும்.

6. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

7. எனது மின் மீட்டர் எரிந்து விட்டால் உடனடியாக நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் பாதுகாப்பு விதிகளின்படி தீயை அணைத்துவிட்டு தங்கள் பகுதி உட்பட்ட மின் உதவி பொறியாளரிடம் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து மீட்டருக்கு உண்டான பணத்தை செலுத்தி புதிய மின் மீட்டரை பெறலாம்.

8. நான் மின் கட்டணத்தை முன் பணமாக செலுத்தலாமா? கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

9. வீதப்பட்டி மாற்றம் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?
தங்கள் பகுதியின் பிரிவு அலுவலரை சந்தித்து வீதப்பட்டி மாற்றம் செய்வதற்கான காரணத்தை விண்ணப்பமாக கொடுத்து, அதற்கு உண்டான பணத்தை செலுத்தி, வீதப்பட்டியல் மாற்றம் செய்யலாம்.

10, தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்?
தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும்,

11. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்?
முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

1 comment: