Thursday, February 8, 2018

அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள்,

அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள், மிகுந்த கவனத்துடன் படித்துணர வேண்டிய‌ விழிப்புணர்வு பதிவு இது!
=======================================

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாக மனை வாங்கி, வீடு கட்டு வது என்பதெல்லாம்
கொஞ்சம் கஷ்டம் தான். இவர்களின் விருப்பத்தேர்வு, அடுக்கு மாடி வீடுகள் எனப்படும் ஃப்ளாட்தான். அடுக்கு மாடி வீடுதான் என முடிவு செய்துவிட்டால், பல விஷயங் களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆவணங்க ளை ஆராயவேண்டும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது என்னென்ன விஷயங்களில்கவனமாக இருக்கவேண்டும் ?

மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல்  பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக்கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற் கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.

மின்கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார்பெயரில் இருக்கிறது, நீங் கள் வீடுவாங்கும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதை கவனியுங்கள். அதை உங்கள் பெயரி ல் மாற்றிக் கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு பில்டர் அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல் தான் மிச்சமாகும்.

அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப் படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதை பொறியாளர்களைக்கொண்டு மதிப்பீடுசெய்வதே நல்லது. பில்டர் சொல்வதைக்கேட்டு அப்படியே விட்டுவிட் டால், 20, 25 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொ ருவரிடம் விற்க எல்லா ப்ளாட் உரிமையாளர்கள் முடிவு  செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் யுடிஎஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும். பில்டர் சொல்வதை அப்படி யே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனதில் போட்டுக்கொள்வது நல்லது.

அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்  பட்டிருக்கிறதா என ஆவணங்களைச் சரிபார்த்து உறுதி ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமய ங்கள் 2 (அல்) 3மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப் பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடு வார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப் பிட ப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் ஃப்ளாட்டில் உள்ளன என்று பாருங்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையல றைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷய ங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்குமுன்பாக அந்தச்சொத்து சம்பந்தப்ப ட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா என பார்க்கவேண்டும். சிலர் அசல் பத்திரத் தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்க ள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத் தைக் கண்ணால் பார்த்தபிறகு முடிவு எடுங்கள்.

அசல்பத்திரம் தொலைந்துவிட்டது என கூறினால் அது தொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டு பாருங்கள்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத் திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயு ங்கள்.

ஒருவர் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செய ல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருட ன் இருக்கிறரா? இல்லையா என்பதை கவனிக்கத் தவறா தீர்கள்.

சிலநேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து  செய்திருக்க லாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல் வார்கள். அச்சொத்தில் கட்டப்பட்டு வாங்கப் படும் அடுக்குமாடிவீடுகளுக்கு பின்னர் சிக்கல் கள் வர வாய்ப்பு உண்டு. இது போன்ற பித்த லாட்டத்தைத் தவிர்க்க தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல்அதிகாரப் பத் திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஆராய்வது அவசி யம்.

அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பில்டர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதை யும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் பில்டர்கள் கட்டுமானச்  சான்றிதழ் வாங்கித் தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும்கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு பில் டர் கட்டுமான நிறைவு சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றா ல், கட்டிய வீட்டில் விதிமுறைமீறல் இருக்கலாம் என்று அர்த்தம்  கொள்வது கட்டுமானத்துறையில் வழக்கம்.

எனவே கட்டு மான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையி ல் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்க ப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத்தவறவேண்டாம்.

நன்றி =>தி. இந்து

பழைய வண்டியை வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

நாம் ஒரு புது வண்டியை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி,  அதன் டீலர் பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் நமக்குக் செய்து கொடுத்து விடுகிறார். நாமும் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம்.

ஆனால், ஒரு பழைய வண்டியை  வாங்கும் போது  என்ன செய்ய  வேண்டும்? அதன் உரிமையை நமது பெயருக்கு   எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆர்.சி. புத்தகம் இல்லாத வண்டியை வாங்கலாமா?
**************************************************************************
  RC புக் என்று (Registration Certificate Book) சொல்லக் கூடிய வாகன பதிவுச் சான்றிதழ் புத்தகம் இல்லாமல் ஒரு வண்டியை வாங்குவது மிக ஆபத்தானது ஆகும்.
அது திருட்டு வண்டியாகக் கூட இருக்கலாம்.

வண்டியை விற்பவர் என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************
ஒரு வீட்டையோ அல்லது காலி மனையையோ விற்கும் நபர், அதனை வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு் நேரில்  சென்று  விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது.

ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை.

அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது வண்டியை  பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருக்கும் ஒரு நபருக்கு  விற்பனை செய்திருந்தால்,விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, வண்டியை விற்பனை செய்த நாளில் இருந்து  14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்திற்கு ஒப்புதல் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க  வேண்டும். அதன் நகலை அவரிடமிருந்து வண்டியை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமையாகும்.

வெளி மாநில நபருக்கு விற்பனை செய்திருந்தால்?
**************************************************************************
வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வண்டியை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்தவர் விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு  தகவல் தரவேண்டும்.

அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) பெற வேண்டும். மேற்கண்ட தகவல் கடிதத்துடன் இதன் நகலையும் வைத்து அனுப்ப வேண்டும்.  ஒரு வேளை N.O.C. கிடைக்கவில்லை என்றால், தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களின் நகல்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வண்டி வாங்கியவர் என்ன செய்ய வேண்டும்?
********************************************************************
வண்டியை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்தப் பகுதிக்கு உட்பட்ட (Regional Transport Office -  R.T.O)  மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வண்டி வாங்கிய ஊர் வெளி மாநிலத்தில் இருந்தால் தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதனைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
******************************************************************
1) இப்படி வண்டியை வாங்குபவரோ அல்லது வண்டியை விற்பவரோ தங்களது கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

2) வண்டியை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் காலகட்டத்தில்  ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

3) பழைய வாகனத்தை உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யாமல் ஏதாவது சட்டவிரோதமான செயல்களுக்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்தி  வரும்போது, சோதனையிம் அந்த வாகனம் பிடிபட்டால் காவ்ல்துறை  வண்டி யார் பெயரில் இருக்கிறதோ அவர்மீதும்  நடவடிக்கை எடுக்கும். வண்டியை விற்றவர் அதனை விற்றதை நிரூபிக்க  வீண் அலைச்சல் அலைய நேரிடும்.

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்?
*****************************************************************
வண்டியை வாங்கிய 45 + 30 + = 75  நாட்களுக்குள் புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும், அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது!

வேறு பதிவு எண் வாங்க  முடியுமா?
*************************************************
ஒருமுறை வண்டியை பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து, வேறு  புதிய எண் பெற முடியாது. அந்த வண்டியின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும்.

எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான் இருக்கும். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான்.

இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்றால்?************************************************************
செகண்ட் ஹேண்ட் வாகன சந்தை பெருகிவிட்டதால், நிறைய செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்ய வருகின்றன. இருவர் செகண்ட் ஹேண்ட் காரோ அல்லது டூ வீலரோ வாங்கும் போது அந்த வண்டிக்கு ஏற்கனவே முறையாக பாலிசி எடுக்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் தொகை செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதித்துப் பார்த்து அது சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வண்டியை வாங்க வேண்டும். சரியாக இல்லாத பட்சத்தில்  அந்த வண்டியை கண்டிப்பாக வாங்கக் கூடாது.

வேறு மாநிலத்தில் தொடர்ந்து ஓட்ட முடியுமா?
***********************************************************************
நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வண்டியை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் அதாவது ஒருவருடம் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்தக் கூடாது. . அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

உதாரணமாக, நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு  அந்த மாநிலத்தி்ல் பயன்படுத்தும் போது, அந்த வண்டியின் உரிமையாளர்  கர்நாடக மாநிலத்தின் பதிவாக               (Re registration)  மறு பதிவு கட்டாயம் செய்ய வேண்டும்

எந்த சூழ்நிலையில் வண்டி பதிவு செய்ய மறுக்கப்படும்? ********************************************************************************
ஒரு வண்டி திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலோ,

வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலோ,

மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகளுக்குள் அந்த வண்டியின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலோ,

பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலோ,

தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலோ

அல்லது அது  வேறு மாநில வண்டியாக இருந்து, அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலோ

பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம்.

அப்படி மறுக்கும்போது அந்த அதிகாரி அவ்வாறு மறுப்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு  உத்தரவு கடிதத்தின் நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

வண்டியின் உரிமையாளர் இறந்துவிட்டால்...
******************************************************************
ஒரு வண்டியின்  உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் அவரது வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் வண்டியின் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அந்த வண்டியை தான் பயன்படுத்தப் போவது பற்றியும் எழுத்து மூலமாக தெரிவித்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை  உபயோகப் படுத்தலாம்.

இந்தக் காலகட்டத்துக்குள் அந்த வண்டியின் ஆர்.சி.புத்தகம், இன்ஷூரன்ஸ், வண்டியின் உரிமையாளர் இறப்புச் சான்று ஆகியவற்றின் நகலுடன்   அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும் குறிப்பிட்டு, தற்போது பயன்படுத்துபவரது பெயர், விலாசம் மற்றும் உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

39.முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

*(y)✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
.
★ அனைத்து செய்திகளையும் படிக்க: www.tamilvoice.com
★ வீடியோக்களைப் பார்த்து மகிழ்ந்திட: www.tamiltv.com
# Facebook

Wednesday, February 7, 2018

காடை முட்டை மருத்துவம்.....!

காடை முட்டை மருத்துவம்.....!

புற்று நோய்,  அல்சர், இரத்த சோகை, காசநோய்,ஆஸ்த்மா, சுவாச நோய், ஞாபக சக்தி, அலர்ஜி, உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் "காடை முட்டை"

புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் காடை முட்டை.

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும்.

காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள்.

காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.

சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது.

சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

காடை முட்டை

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.

ஞாபக சக்தி

காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

புற்று நோய்

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

வயிற்று அல்சர்

அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றிவிடும்.

இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.
உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

இதர நோய்கள்

காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.

குழந்தைகளுக்கு நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்..

Tuesday, February 6, 2018

கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

* குலோப்ஜாமூன் மாவை உருட்டியவுடன் அதன் முனையில் ஒரு சிறு துளை போட்டு பொரித்தால் நன்றாக வேகும். சர்க்கரைப்பாகில் ஊறும்போது பாகை ஜாமூன் நன்றாக உறிஞ்சி விடும்.
* பகாளாபாத் தயாரிக்கும்போது சாதம் குழைய வெந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் சாதம் வேகவைக்கும் போதே ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு டீஸ்பூன் வீதம் அவலை சேர்த்து வேகவைத்தால் சாதம் நன்றாக குழைந்திருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

* சமைக்கும் எண்ணெயில் இரண்டு, மூன்று மிளகாய் வற்றலை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.
* ரசம் தயாரிக்கும் போது தேங்காய் தண்ணீரை கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் ரசம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* பஜ்ஜி செய்வதற்காக நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளில் மிளகாய்ப்பொடி, உப்பு இரண்டையும் சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் கழித்து இவ்வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்ய, காரமாய் சுவையாய் இருப்பதோடு உள்ளிருக்கும் காயும், உப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.
* குளிர்காலத்தில் பாலில் மோர் ஊற்றியதும் கொஞ்சம் புளியை உருண்டையாக உருட்டி அதில் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ, காரமோ அதிகமாகி விட்டால் ரஸ்க்கையோ அல்லது பிரெட் தூளையோ கலந்து விட்டால் அது சகஜ நிலைக்கு வந்து விடும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

* பச்சை வேர்க்கடலையை கீரையுடன் சேர்த்து வேகவைத்து கடைந்தால் குழம்பு சுவையாக இருக்கும். அரிசியுடன் பச்சை வேர்க்கடலையை 2க்கு 1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து தோசை செய்தால் நன்றாக இருக்கும்.
* கொள்ளுவை வறுத்து உடைத்து அந்தப் பருப்புடன் தக்காளி, பூண்டு, சின்னவெங்காயம், மிளகாய் சேர்த்து சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

* எத்தனை பிசைந்தாலும் மாவை இட்டு தோசைக்கல்லில் போட்டால் சப்பாத்தி விறைப்பாகச் சுட்ட அப்பளமாக வருகிறதா? வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து மாவுடன் கலந்து இட்டு பாருங்கள். சப்பாத்தி பூப்போல் மிருதுவாய் வரும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* வேகவைத்த வெள்ளை மூக்கடலையை பாகற்காய் பிட்ளையில் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் பிட்ளை தனி மணத்துடன் இருக்கும்.
- என்.பர்வதவர்த்தினி, பம்மல்.

* உளுந்து கலந்த போண்டா அரைக்கும்போது சிறிது தனியே எடுத்து பேரீச்சைப்பழத்தையும் போட்டு அரைத்து விடுங்கள். இனிப்பு கலந்த போண்டா பழ வாசனையுடன் புஸு புஸு என்று நன்றாக இருக்கும்.
* பொரியல் செய்யும்போது காய்கறிகளை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்த பிறகு கடுகு தாளிக்கும் போதே துருவிய தேங்காயைப் போட்டு சிவக்க வதக்கி விட்டு வேகவைத்திருக்கும் காய்கறிகளை கொட்டி கிளறி இறக்கி வைத்தால் பசுமையாகவும், நிறம் மாறாமல் சுவையாகவும் இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* தோசை வார்க்க வராமல் கிண்டிப் போனால், புழுங்கலரிசியோடு 1 கை பச்சரிசி, 1 கரண்டி உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்கு நைசாக அரைத்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்க்கவும். தோசை பட்டு பட்டாக ருசியாக இருக்கும். தோசைக்கல்லில் இருந்து  நன்றாக எடுக்க வரும்.
- ஆர்.சகுந்தலா, சென்னை.