Tuesday, August 11, 2020

உட்கார்ந்தே இருந்தாலும்

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 


 *✍️✍️✍️உட்கார்ந்தே இருந்தாலும் நோய் வருதாமா❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உட்கார்ந்தே இருந்தாலும் நோய் வருதாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.* 
 *சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)* 
 *ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது✍️✍️✍️* .

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் knockoff effect என அழைக்கிரார்கள்.* 
 *டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *🟣⚫🟢நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "Active couch potato" என அழைக்கிறார்கள்.🟢⚫🟣* 


 *🌐🌐பரிந்துரைக்கபடும் வாழ்வு முறை மாற்றங்கள்:🌐🌐* 


 *✍️✍️✍️20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.✍️✍️✍️* 

 *🔴🟡🔵ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்🔵🟡🔴* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *🟠🛑🟤இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிரவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.🟤🛑🟠* 

 *✍️✍️✍️தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.✍️✍️✍️* 


 *🌐🌐🌐உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விசயம் என்பதை நினைவில் கொள்வோம்.🌐🌐🌐* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உட்கார்ந்து பதிவை படித்தவர்கள் எழுந்து ஒரு நிமிடம் நடந்துவிட்டு வந்து கமெண்ட், லைக் போடவும் ; மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எது கெடும்

_*எது கெடும்*_

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத  கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

.....கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!!!.

Whatsapp

Sunday, August 9, 2020

அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று

*ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.*

*பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.* 

*பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.*

1.
எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

2.
அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். 

அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.

3.
எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

4.
நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். 

பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். 

5.
பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. 

அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.

6.
இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது. 

7.
ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.

8.
எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள். 

9.
நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.

 அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.

10.
நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.

11.
உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.

12.
சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். 

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும். 

13.
அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, 

கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.

14.
நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள்.

 15.
’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம். 

16.
அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. 

அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டிருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.

17.
இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.

18.
*அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.* 

19.
ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். 

வீட்டுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.

பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். 

ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.

வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் 

அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். 

இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.

விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். 

20.
ஏணி/ சல்லடை என்பன ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும். 

21.
பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.

22.
மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். 

இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு. 

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. 

உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு கால்கள் இருந்ததால். 

23.
தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். 

விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. 

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள். 

24.
அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.

திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். 

25.
சமையல் விறகு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. 

26.
அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.

27.
கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நார்த்தனமாடியது. 

28.
பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும். 

29.
இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.

30.
கிராமங்களில் 

30.1
யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.

30.2
எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.

30.3
ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம். 

30.4
அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. 

30.5
வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.

30.6.
கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. 

30.7.
குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொள்வதில்லை. 

இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது. 

31.
வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. 

31.1
அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். 

31.2
அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். 

31.3
ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.

31.4.
வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. 

31.5.
வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.

31.6.
வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

32.
இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.

32.1
அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும். 
இல்லாவிட்டால் தகராறு.

32.2.
அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். 

32.3.
அழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள், 

32.4.
முருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,

32.5.
பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. 

ஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை !
------------------------------------
ஆனால் அத்தனையும் நினைத்து பார்த்தால் பெருமூச்சு மட்டுமே வருகிறது நமக்கு 

நன்றி!! நன்றி  !!! நன்றி!! 

Whatsapp fwd

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஹீமோகுளோபின்_🩸அளவு_🩸அதிகரிக்க

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்து💊💊💊* 


🌰🥕🍒🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕


 *🩸🩸🩸#ஹீமோகுளோபின்_🩸அளவு_🩸அதிகரிக்க...🩸🩸🩸* 


🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰


 *✍️✍️✍️🌰அருகம் புல்லை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். வாரம் ஒரு முறை எடுத்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.🥕✍️✍️✍️* 


 *🍇🍇🍇உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், ஹீமோகுளோபின் பிரச்சனைகள் தீரும். அத்துடன், ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை வீதம் 9 நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவு கூடும்.🍇🍇🍇* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🌰அதே போல் ஒவ்வொரு நாளும்  நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் இதய நோய் தீரும்.🥕🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 
 

 *🌰🌰🌰புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். தொடர் இருமல் தொண்டை வலி போன்றவையும்  குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். 🥕🥕🥕* 
 

 *🍀🌿☘️கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக்  கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம்  உற்பத்தியாகும்🍀🌿☘️.* 

 
 *🌰🌰🌰ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.🌰🌰🌰* 
 

 *🧅🧅🧅மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்.🧅🧅🧅* 

 
 *✍️✍️✍️🌰இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். 🥕✍️✍️✍️* 
 
 *🍋🍋🍋எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும்.🍋🍋🍋* 


🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕🌰🥕


 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கேழ்வரகு

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 


 *🧶கேழ்வரகு🧶... ஒர்🧶 பார்வை....🧶கண்டிப்பாக🧶 முழுவதுமாக🧶 படியுங்கள்.🧶.* 


 *✍️✍️✍️அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான். அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️✍️இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது✍️✍️✍️,* 


 *🌐சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது.🌐..* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


'' *⚫⚫கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு⚫⚫* 


 *✍️✍️✍️இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக் கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன✍️✍️✍️* . 


 *🟣🟣ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது🟣🟣* ''.


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *🟢🟢ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.🟢🟢* 

 *✍️✍️குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும்✍️✍️.* 

 *🛑🛑🛑ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள - மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு - இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.🛑🛑🛑* 

'' *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *🟡🟡🟡சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?🟡🟡🟡* 


 *🌰🌰🌰இந்த கேழ்வரகு என்ற ராகியில் உள்ள சத்துக்கள்🌰🌰🌰* 


 *✍️✍️✍️புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70✍️✍️✍️.* 

 *🟤அரிசியில்🟤 உள்ள 🟤சத்துக்கள்🟤* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *🔵🔵🔵ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது🔵🔵🔵.* 


 *✍️✍️✍️மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன.✍️✍️✍️* 


 *🟠🟠🟠சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்🟠🟠🟠* . 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .


 *🔴🔴🔴இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன🔴🔴🔴* 
.

 *✍️✍️✍️இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன.✍️✍️✍️*
 

 *🌐இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.🌐* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️*
 

 *🍋🍋🍋இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.🍋🍋🍋* 


 *✍️✍️✍️இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.✍️✍️✍️* 


 *⚫⚫⚫உடலுக்கு வலிமை தரும் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.⚫⚫⚫* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🧶🧶🧶கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவாக எடுக்கும்.🧶🧶🧶* 


 *🌰🌰உஷ்ணத்தை குறைக்கும்🌰🌰* 


 *✍️✍️✍️ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது.✍️✍️✍️* 


 *🟣🟣🟣இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்🟣🟣🟣* 


 *🌰🌰🌰கேழ்வரகின் மருத்துவ பயன்கள்🌰🌰🌰* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 
.

 *🟢🟢கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .உடல் சூட்டை தனிக்கும் .🟢🟢* 


 *✍️✍️✍️குழந்தைகளுக்கு கேழ்வரகு டன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இதனால் குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது . தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் ✍️✍️✍️.* 


 *🟡🟡🟡மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் . கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது 🟡🟡🟡.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .கூழாக குடிக்கும் போது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *🔴🔴🔴கொலஸ்டிராலை குறைக்கும் .இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .🔴🔴🔴* 


 *✍️✍️✍️பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர்.✍️✍️✍️* 


 *🔵🔵🔵கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும் .🔵🔵🔵* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நிலங்களிலும் ,வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது .உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🟤🟤🟤கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது .கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன.🟤🟤🟤* 


 *✍️✍️✍️இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.✍️✍️✍️* 


 *🟠🟠🟠இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.இயற்கையாய் இயற்கையோடு வாழ..!🟠🟠🟠* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *🛑🛑🛑கோதுமைக்கு இணையான சத்துக்கள் கொண்ட ராகியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.🛑🛑🛑* 


 *✍️✍️✍️பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்✍️✍️✍️* . 


 *🟣🟣🟣கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக்களை கொடுக்கிறது🟣🟣🟣* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *⚫⚫⚫இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.⚫⚫⚫* 

 *♻️தேவையான பொருட்கள்♻️:* 

 *கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு.* 

 *✍️✍️✍️கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.✍️✍️✍️* 


 *🧘‍♀️🧘‍♂️🧘‍♀️குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வரகு பால் கஞ்சி🧘‍♂️🧘‍♀️🧘‍♂️:* 

 *தேவையான பொருட்கள்:* 

 *கேழ்வரகு (முளைக்கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுக்கவும். அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* . 

 *🟢🟢🟢அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கெட்ட கொழுப்புகளை வெளித்தள்ளி, நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது.🟢🟢🟢* 


 *♻️♻️உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை:*♻️♻️ 


 *தேவையான பொருட்கள்:* 

 *கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.* 

 *✍️✍️✍️கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடாமல் பொடித்து கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து  பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும்✍️✍️✍️.*
 

 *🟡🟡🟡இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.🟡🟡🟡* 


 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தடுப்பூசி_என்பது_என்ன

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 

 *💉💉💉#தடுப்பூசி_என்பது_என்ன❓*  *#செயல்படும்_விதம்…❓❗* 
*#சோதனை_செய்யும்_முறை…❓💉💉💉* 



  *💉💉💉நம் வீட்டுக் குழந்தைகளுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசிகள்…  இந்த கொரோனா காலத்தில் பெரியவர்களுக்கும் கூட தேவைப்படுகிறது.💉💉💉** 


 *💉💉💉கொரோனா வைரஸுக்கு எதிராகத்  தடுப்பூசி கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் போராடுகின்றன💉💉💉.* 


 *💉💉💉பெரும் பொருட்செலவிலும், தீவிர ஆராய்ச்சியாலும் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிகள் நம் உடலில் என்ன வேலை செய்கின்றன❓எப்படி செய்கின்றன❓💉💉💉* 


 *💉#தடுப்பூசிகள்💉* 


 *▶ ஒரு குறிப்பிட்ட நோய்க்காகப் போடும் தடுப்பூசி, அந்த நோயை அடையாளம் காணவும் அதனை எதிர்த்துப் போராடவும் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் பயிற்சி கொடுக்கிறது. ◀* 


 *▶ அதாவது ஒரு போர் நடப்பதற்கு முன்பு இராணுவத்தை ஆயத்தப்படுத்தும் பயிற்சி வகுப்பு போன்றது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், போர் தொடங்கும் வரை காத்திருக்காமல் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு முன்பே எதிரிகளைக் கண்டுபிடித்து உடல் வெளியேற்றக் கற்றுக்கொடுக்கிறது.◀* 


 *💉💉💉இதனால் நோயின் அறிகுறிகள் கூட வெளிப்படாது. கேட்பதற்கு எளிமையானதாகத் தெரியும் இந்த வழிமுறை உண்மையில் எளிதானது கிடையாது. உடலின் இயற்கையான பாதுகாப்பு அம்சங்களால் நடைபெறும் மிகவும் சிக்கலான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி.💉💉💉* 


 *💉💉💉தனக்கு எதிரான ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கத் தூண்டும் எந்த ஒரு பொருளும் ஆன்டிஜென் தான்❗💉💉💉* 


 *⭕⭕⭕ நோய் எதிர்ப்பு மண்டலம்⭕⭕⭕* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியாபோன்ற நோய்க் கிருமிகள் நமது உடலில் நுழைந்து விட்டால், அது உடனே நம் உடலைத் தாக்கி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் அவை எண்ணிக்கையில் பெருகிப் பரவ ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் தான் பெரும்பாலும் நமக்கு நோய் ஏற்படுகிறது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️மனித உடலில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உடலில் பல நிலைகள் உள்ளன. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகள், புதிதாக நுழைந்தவற்றிடம் இருந்து, உடனடியாக உடலைப் பாதுகாக்க ஆரம்பிக்கும் அல்லது அவற்றைத் தாக்க ஆரம்பிக்கும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இத்தாலியில் தடுப்பூசிக்கு எதிராக பல ஆண்டுகளாக பல இயக்கங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தடுப்பூசிகளை பல ஆண்டுகளாக மக்கள் புறக்கணித்து வந்திருக்கிறார்கள். கொரோனா உயிரிழப்பு அங்கு அதிகம் ஏற்பட இதுவும் ஒரு காரணம்❗🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️உதாரணமாக, நமது தோல். இது மனித உடலில் இருக்கும், கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பாகும். நமது தோலே நம் உடலில் எந்தவொரு தொற்றும் நுழையாதபடி பாதுகாக்கிறது. ஆனால் தோலில் ஏதாவது சிராய்ப்புகள் அல்லது வெட்டுக்கள் இருந்தால் கிருமிகளுக்கு அதுவே போதும். உடலில் நுழைய ஆரம்பித்துவிடும். அதையும் தாண்டி மூக்கு, வாய் போன்ற திறப்புகள் வழியாகவும் உள் நுழையும்✍️✍️✍️.* 


 *⭕⭕⭕காய்ச்சல்⭕⭕⭕* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சரி… அப்படி கிருமிகள் உள்ளே போய்விட்டால் அடுத்த கட்டமாக வாயில் சுரக்கும் உமிழ்நீர் அல்லது வயிற்றில் உள்ள இரைப்பை சாறுகள் போன்ற வேதிப்பொருட்கள் கிருமிகளை உடைக்கவோ அல்லது கொல்லவோ முயற்சிக்கும். மேலும் குளிரான சூழலில் மட்டுமே உயிர்வாழும் கிருமிகளைக் கொல்ல அல்லது பலவீனப்படுத்த உடல் வெப்பநிலையை உயர்த்தும். இதனால் தான் நமக்குக் காய்ச்சல் ஏற்பட்டு உடல் சுடுகிறது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 



 *🔴 🔴🔴உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 10 வழிகள் போதும்❗🟢🟢🟢* 


 *✍️✍️அடுத்து நமது நோய் எதிர்ப்பு செல்கள் பல்வேறு வகையான இரத்த வெள்ளை அணுக்களையும், ஆன்டிபாடிகளை உருவாக்கி கிருமிக்கு எதிராக எதிர் வினையாற்றத் தொடங்கும்✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆன்டிபாடிகள் என்பவை Y வடிவ புரதங்கள். இவை குறிப்பிட்ட ஆன்டிஜென்களை தேடி அவற்றை அழிக்க ஆரம்பிக்கும். கூடவே அவை மேற்கொண்டு பெருகாமலும் தடுக்கும். ஆன்டிஜென் என்பது ஒரு நோய்க்கிருமியின் ஒரு துண்டு அல்லது ஒரு துணை தயாரிப்பு. அதாவது ஒரு வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு புரதத்தைப் போன்றது. தனக்கு எதிரான ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கத் தூண்டும் எந்த ஒரு பொருளும் ஆன்டிஜென் தான். நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு ஆரோக்கியமான நபரால் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும் என்பதால் பெரும்பாலும் நமது உடலே பல நோய்க் கிருமிகளை எளிதாக அழித்துவிடும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *💉💉💉👉 எந்த கிருமி நோயை ஏற்படுத்துமோ அதன் பலவீனமான பதிப்பு (Version) தான் தடுப்பூசி❗💉💉💉* 


 *🔯 💉💉💉தடுப்பூசியின் முக்கியத்துவம்💉💉💉* 


 *✍️✍️✍️துரதிர்ஷ்டவசமாக, நமது உடல் புதிதாக சில வகை கிருமிகளை எதிர்கொள்ளும்போது, ஆன்டிபாடி மூலம் எதிர்வினை நடக்கப் பல நாட்கள் ஆகலாம். எடுத்துக்காட்டாக அம்மை வைரஸ் போன்ற மோசமான ஆன்டிஜென்களுக்கு, இந்த சில நாள் காத்திருப்பே மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆன்டிபாடிகள் வேலை செய்ய ஆரம்பிப்பதற்குள் இறப்பு கூட நேரிடலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.✍️✍️✍️* 


 *💉💉💉செயல்படும் விதம்💉💉💉* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தடுப்பூசிகள் இறந்த அல்லது பலவீனமான ஆன்டிஜென்களால் தயாரிக்கப்படுகின்றன. அதாவது எது நோயை ஏற்படுத்துமோ அதன் பலவீனமான வெர்ஷன். அதனால் அவற்றால் நோயை ஏற்படுத்த முடியாது. அதே சமயம் அது என்னதான் பலவீனமானதாக இருந்தாலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பொறுத்தவரை எதிரி எப்படி இருந்தாலும் எதிரி தான்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென்களே அவை அவற்றைத் தேடி அழிக்கத் தேவைப்படும் ஒரே மாதிரியான வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாக்கும் படி நம் உடலை தூண்டும்.அதனால் நம் உடலும் அவற்றை அழிக்கும் ஆன்டிபாடிகளை வேகமாக உருவாக்கி அழித்து விடும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒருவேளை உடல் எதிர்வினையாற்ற நேரமானால் கூட அதுவரை பலவீனமான கிருமியால் நமக்குப் பாதிப்பு இருக்காது.* *நோய்க் கிருமிகள் அழிந்தவுடன், பல ஆன்டிபாடிகள் உடைந்து விடும், ஆனால் இந்த தரவுகள் இருக்கும் #நினைவக_செல்கள்* 
 *எனப்படும் #Memory_Cells உடலில் அப்படியே இருக்கும். ஒருவேளை மீண்டும் அந்த ஆன்டிஜென் உடலுக்குள் வந்தால் நினைவக செல்கள்* *ஆன்டிபாடிகளை வேகமாக உருவாக்கி உடனே கிருமிகளைத் தாக்கி நோய் ஏற்படாமல் காப்பாற்றும். இது தான் தடுப்பூசியின் தத்துவம🙋‍♂️🙋‍♂️🙋‍♂️*


 *💉💉💉👉 தடுப்பூசி கண்டுபிடிக்க தாமதமாக என்ன காரணம்❓💉💉💉* 


 *✍️✍️✍️நமது நோய் எதிர்ப்பு அமைப்பு என்ன ஆன்டிஜென்களைக் கண்டறிந்து பதிலளிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான் ஒரு பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கான முக்கியமான விஷயமாகும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தடுப்பூசிகள், நம் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மோசமான கிருமிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து, எப்படிப்பட்ட கொள்ளை நோயையும் இல்லாமல் செய்துவிடுகின்றன❗🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️இதற்கு பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  எலி மற்றும் குரங்குகளின் சோதித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது. சில தடுப்பூசிகள் விலங்குகளில் வேலை செய்யும். மனிதர்களில் பலனளிக்காமல் போகலாம். சில தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தலாம். இப்படி செயல்படும் விதமே தடுப்பூசியை கண்டுபிடிக்க தாமதத்திற்கும் காரணம்✍️✍️✍️.* 


 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Wednesday, July 1, 2020

உயில் என்றால் என்ன

வணக்கம் நண்பர்களே...!

1. உயில் என்றால் என்ன...? 

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2. எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்...? 

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3. உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா...? 

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4. உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா...? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5. கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா...? 

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6. உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா...? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7. உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன...? 

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8. உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா...? 

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9. உயிலை ரத்து செய்ய முடியுமா...? 

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10. உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன...?யாரிடம் சொத்து இருக்கும்...? 

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11. உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா...?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை. 

12. கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம்...?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13. கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா...?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்...?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்...?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16. எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா...?

முடியும்.

17. உயிலை முத்திரைதாளில்தான் எழுத 
வேண்டுமா...?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது, பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம்...?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம். 

19.உயிலை probate செய்ய வேண்டுமா...?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்துக்கொண்டால் செல்லுமா...?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன நடைமுறை...?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1% கட்டணம் அதிகபட்சம் 500 ரூபாய்

 22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா...?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

நன்றி....!