Thursday, October 30, 2014

காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும் !!!!

காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும் !!!!
உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.
கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய் என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் `ஏ', `சி'.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
அவரைக்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
பீர்க்கங்காய் என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக் கூடாது. தலையில் நீர்க் கோத்துக்கொள்ளும்.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
புடலங்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், விட்டமின் `ஏ', சுண் ணாம்புச்சத்து, கந்தகச்சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய் என்ன இருக்கு: பாலிபெப்டு டைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய் என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீத ளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய் என்ன இருக்கு: புரதம், கொழுப்பு யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூச ணியே நல்லது.
கொத்தவரைக்காய் என்ன இருக்கு: நார்ச்சத்து
யாருக்கு நல்லது: நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் `இ'.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
பீன்ஸ் என்ன இருக்கு: புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது: ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம்: குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பள பளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
பீட்ரூட் என்ன இருக்கு: க்ளூ கோஸ்
யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும். சுறுசுறுப்பை அளிக் கும். மேனி நிறம் பெறும்.
முள்ளங்கி (வெள்ளை) என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: அதிகம் குளிர்ச் சியை தரும். வாயுவை வெளியேற்றும்.
காலிஃபிளவர் என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ் பரஸ், மெக்னீசியம், விட்ட மின் ஏ, இ.
யாருக்கு நல்லது: புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ் என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம்: பனி காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது !!!!!

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது !!!!!
தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது... பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரி்நதவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை. தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...வறட்டு இருமல்... வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும். இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.தேனீ கொட்டிடுத்தா... தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.காது வலிக்குதா ... அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே. அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் இதைப் பரி்ந்துரைக்கிறது.பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா.. பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது. விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.வெயில் புண்ணால் அவதியா... கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினீகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம். அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினீகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில். ஓட்மீல் பேஸ்ட்டும் கூட நல்ல பலனைக் கொடுக்குமாம்.பூச்சி கடித்தால் நெய்ல் பாலிஷ்... பூச்சி கடித்தால் உடனே பயப்படாமல் வீட்டில் இருக்கும் நெய்ல்பாலிஷ், சுடச் சுட நீரை வைத்து அதை பூச்சி கடித்த இடத்தில் தடவலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் நெய்ல் பாலிஷ் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தடவினால் உடனடியாக வலியும், எரிச்சலும் குறையுமாம். இருப்பினும் வெட்டுக் காயம் போன்றவை ஏற்படும்போது இதைத் தவிர்ப்பது நலம்.தலை முடி பிசுபிசுப்புக்கு... பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம். சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும். இதெல்லாம் வெறும் அனுபவத்தால் மட்டும் கூறப்பட்ட மருத்துவம் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஆய்வகங்கள், பல்கலைக்கழக ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவை. முயற்சித்துப் பாருங்களேன் ... SOURCE:http://thatstamil.oneindia.in
Engr.Sulthan
Posted by Engr Sulthan

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!
ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.
எப்படி உபயோகிக்க வேண்டும்?
நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.
எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.
தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
http://vijayastreasure.blogspot.in/

ஏலக்காய்..ஏங்க வைக்கும் காய்

ஏலக்காய்..ஏங்க வைக்கும் காய்
ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: எலெட்டாரியா (Elettaria), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

ஏலக்காயின் பயன்கள்:
உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
சமையலின் நறுமணமாக
ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
மருத்துவக் குணங்கள்:
பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி.
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர்.
நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.
இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.
நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
இணையத்திலிருந்து
Engr.Sulthan @ http://kulasaivaralaru.blogspot.in/

கொலஸ்ட்ரால்......!!!!!!

கொலஸ்ட்ரால் பற்றிய மேலும் சில துளிகள்.கொலஸ்ட்ரால் வருவது எப்படி?

கொலஸ்ட்ரால் - நாம் சாப்பிடும் சில உணவு வகைகள், மன அழுத்தம், பழக்க வழக் கங்களால் ஏற்படும் கொழுப்பு இது. ரத்தத்தில் ஓரளவு வரை கொழுப்பு சேரலாம்; ஆனால், அளவு மிஞ்சினால் ஆபத்து தான். அப்போது தான் அது இதயம் வரை லொள்ளு செய்ய ஆரம்பித்து விடுகிறது. ரத்தத் தில் சேரும் கொழுப்பு, சிறிது சிறிதாக அதிகமாகி, இதய ரத்தக்குழாயில் உள்ள சுவருடன் ஒட்டி, அதை தடிமனாக் குகிறது. அப்போது ரத்தம் சீராக போக முடியாமல் போகிறது. அதனால், ரத்தம் கட்டி விடுகிறது. அப்படி கட்டிவிடும் போது, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டால், இதய பாதிப்பு வருகிறது; மாரடைப்பு ஏற்படுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட் ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.
இரு வகை கொழுப்பு
எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்' என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.
எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்' என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.
ட்ரைகிளிசரைட்ஸ்:
இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.
உணவால் தான்...
கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்புஉணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.
200க்கு மேல் உஷார்
*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.
*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.
*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.
*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.
பக்கவாதம் எப்படி?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.
1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.
1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது.
மாரடைப்பு வருவது எப்படி?
இதயத்துக்கு ரத்தக்குழாய் மூலம் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் சீராக செல்வது தடைபடும்; ஆக்சிஜன், சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும். இதயத்தை எந்நேரமும் இயங்க செய்யும் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அது செயலிழக்கும் போது, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது. அதன் அளவு சீராக இல்லாமல் போகிறது. இப்படி எல்லாம் தடைபடும் போது, மாரடைப்பு வருகிறது.
-------------------கொழுப்பை குறைக்கும் பப்பாளி-----------------------------------------
எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.
இந்த பழத்தில் கிடைக்கும் சில பயன்கள்:
1. இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.
2. பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
3. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.
4. அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
5. பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
6. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
7. பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
8. கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
9. சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். ( HDL) கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.
நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!
காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக விழிப்புடன் ஒருவர் பணி புரியவேண்டும் என்றால், அவர் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறையும்போது உடல் பலவீனம் அடையும். இரும்புச் சத்துதான் ஆக்ஸிஜனை சுமந்து சென்று எல்லா உறுப்புகளுக்கும் விநியோகித்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. முக்கியமாக மூளையில் டோப்பாமைன் என்ற இரசாயனப் பொருள் சுரந்தால், மனதும் உடலும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இதற்கும் இரும்புச் சத்துதான் தேவை.
மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
சோர்வை அகற்றும் பழம் எது?
நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது.
இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
மேலும் சில துளிகள்.
1. வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.
2. இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
3. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
நன்றி கே.எஸ். சுப்ரமணியம்.
நன்றி தமிழ்வணன்.காம்
--------------------------------------------------------------------------------------------------------
பூண்டின் மருத்துவ குணங்கள்
இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
1. உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
2. இதய அடைப்பை நீக்கி இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
3. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
4. நாள்பட்ட சளித் தொல்லையையும், தொண்டை சதையை நீக்கும்.
5. மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் சக்தி இதற்க்கு உண்டு.
6. தாய்மார்கள் இதை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். எல்லா பெண்களுக்கும் மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
7. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
8. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
9. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது.
10. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம்,மலச்சிக்கல் போன்ற வற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும்.
11. பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் உள்ளதாம்.
12. வெண் குஷ்டம், குடல் வாயு, கொழுப்பு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.
13. பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் !

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் !

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.
சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.
*
பழங்கள் ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
*
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.
*
ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.
*
ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
100 கிராம் எடை கொண்ட பழத்தில்
நீர்ச்சத்து - 88.0 கிராம்
புரதம் - 0.6 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
தாதுப் பொருள் - 0.3 கிராம்
பாஸ்பரஸ் - 18.0 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து - 24.0 மி.கிராம்
கரோட்டின் - 1100 மி.கிராம்
சக்தி - 53.0 கலோரி
இரும்புச் சத்து - 0.2 மி.கிராம்
வைட்டமின் ஏ - 99.0 மி.கிராம்
வைட்டமின் பி - 40.0 மி.கிராம்
வைட்டமின் பி2 - 18.0 மி.கிராம்
வைட்டமின் சி - 80 மி.கிராம்
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
*
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். ஆரஞ்சில் மொத்தம் 170 கடதூtணிணதtணூடிஞுணtண் மற்றும் 60 ஊடூச்திணிணணிடிஞீஞுண் உள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஃடிட்ணிணணிடிஞீண் என்ற ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
*
ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் ஆஞுtச்-ஞிணூதூணீtணிதுச்ணtடடிண இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
***
மருத்துவ குணங்கள் :
குழந்தை வளர்ச்சிக்கு
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
**
தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து
சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.
**
மெலிந்த உடல் பலமடைய
பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.
இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
**
மேனிக்கு அழகூட்ட
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
**
பெண்களுக்கு
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்
**
பல் உறுதிபட
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
***
ஆரஞ்சுச் சாறு:
1. தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.
*
2. பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.
*
3. டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.
*
4. தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.
*
5. டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.
*
6. பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.
*
7. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.
*
8. ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.
*
9. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.
*
10. ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.
*
11. ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
*
12. மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.
http://azhkadalkalangiyam.blogspot.in/

தேநீர் A to Z

மாற்றம் செய்த நேரம்:3/27/2014 4:07:50 PMThe people will not be silent about this. Weight reduction, starting with the youngest said to help to look things up,

கிரீன் டீ...


இதைப் பற்றிப் பேசாத மக்களே இருக்க மாட்டார்கள். எடைக் குறைப்பில் தொடங்கி, இளமையான தோற்றம் வரை சகலத்துக்கும் உதவுவதாக  சொல்லப்படுகிற, நம்பப்படுகிற கிரீன் டீ உண்மையிலேயே நல்லதுதானா? வழக்கமான டீயில் இல்லாதது அப்படி என்னதான் இருக்கிறது இதில்?விளக்கமாகப் பேசுகிறார் பொது மருத்துவர் ஈஸ்வரன்...

ஆக்சிஜன் நல்லது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஆக்சிஜன் இரும்பில் பட்டால் துருப்பிடிக்கிறதல்லவா? ஆக்சிடேஷன் எனப்படுகிற இதே  விஷயம் மனித உடலிலும் நடக்கும். நமது உடலில் உள்ள செல்களிலும் ஆக்சிடேஷன் நடக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும், வெயில்,  சுற்றுச்சூழல் மாசின் பாதிப்புகளாலும், புகை, குடிப்பழக்கம், துரித உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் உடலின் செல்களில் ஆக்சிடேஷன் அதிகமாகும்.  அதை ‘ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்கிறோம். அதன் விளைவாக ‘ரியாக்டிவ் ஆக்சிடேஷன் ஸ்பீசிஸ்’ என்கிற ஒரு ரசாயனம் சுரக்கும். அது  மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. 

நீரிழிவையும் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்துவதுடன் சீக்கிரமே முதுமையையும் கொடுத்துவிடும். இவ்வளவு மோசமான  விளைவு களைக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை அவசியம்.  பிலிருபின், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் டி,  தாமிரம், செலினியம், துத்தநாகம், ஆல்ஃபா லினோலிக் அமிலம் போன்ற எல்லாம் நம் உடலுக்குள்ளேயே இருந்து, இந்த பாதிப்புகளில் இருந்து  காக்கக்கூடியவை. ஆனாலும், நீரிழிவு, கொலஸ்ட் ரால், சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகளுக்கு உள்ளானவர்களுக்கு இதன் அளவு குறைந்து, பாதிப்புகளின்  தீவிரம் இன்னும் அதிகமாகும். ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை பழங்கள், காய்கறிகள், தாவர எண்ணெய், காபி, டீ, சோயா, சாக்லெட், ஆலிவ் ஆயில்,  முட்டை போன்றவற்றிலிருந்தே நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கக்கூடியவைதான். 

ஆனால், இவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு, மருத்துவர்கள் சமீப காலமாக கிரீன் டீ சேர்த்துத் தயாரிக்கப்பட்ட  மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். கிரீன் டீயில் உள்ள catechins என்கிற பொருளானது கொலஸ்ட்ராலை குறைத்து, எடைக் குறைப்புக்கு  உதவுகிறது. ஃபாஸ்ட் ஃபுட் ப்ரியர்களுக்கு, அத்தகைய உணவுகளில் சேர்க்கப்படுகிற பலவிதமான செயற்கையான பொருட்களால் புற்றுநோய்க்குக்  காரணமான செல்கள் உற்பத்தியாகிற அபாயம் ஆரம்பமாகும். கிரீன் டீ குடிப்பதன் மூலம், புற்றுநோய் செல்களின் சங்கிலிப் பிணைப்பு  தடுக்கப்படுகிறது. 

வாய் துர்நாற்றத்துக்குக் காரணமான மால்டோஸ் அதிகமாவதையும் கிரீன் டீ தடுக்கிறது. வாய்ப்புண் குணமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு  புண்களால் உண்டாகிற ரணத்தை ஆற்றுகிறது. பாக்டீரியா தொற்றைத் தவிர்க்கிறது. பார்க்கின்சன் மற்றும் அல்சீமர் நோய்களுக்கு எதிராகவும்  செயல்படுகிறது. தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்களுக்கு கேட்டராக்ட் பிரச்னைகூட தவிர்க்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக  முக்கியமாக இளமையைத் தக்க வைக்கிறது. கெட்ட செல்களை அழித்து, நல்ல செல்களின் உருவாக்கத்துக்கு உதவுகிறது. கலப்படமில்லாத, தரமான  கிரீன் டீயில் இந்த அத்தனை நல்ல அம்சங்களும் இருக்கும். 

காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்தின் தொடக்கமாக அமையும். கூடவே மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் உண்மையிலேயே தேவை இருப்போர், கிரீன் டீ மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிற  மருத்துவரின் வார்த்தைகள், பலரையும் சாதாரண டீயிலிருந்து, கிரீன் டீ பழக்கத்துக்கு மாற்றப் போவது உறுதி!அரிசி, எண்ணெய் மாதிரியே குறிப்பிட்ட மக்களைக் குறி வைத்துக் களமிறங்கும் டீ வகைகள் சமீப காலமாகப் பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன.நீரிழிவுக்காரர்களுக்கு, பருமனானவர்களுக்கு,  சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு... இப்படி தேவைக்கேற்ப தனிப்பட்ட முறையில் பலன் தருவதாக உத்தரவாதம் அளிக்கிற தேயிலைகளுக்கு மேல்  தட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பு இருக்கிறது. 

அழகு முதல் ஆரோக்கியம் வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான டீ உதவும் என்பதை உறுதியாகச் சொல்கிறார் கோயம்புத்தூர் லதா அருண்  ஆர்கானிக்ஸ் நிறுவன உரிமையாளர் அருண். ஊட்டியில் மூலிகைப் பண்ணைத் தொழிலில் பரபரப்பாக இருந்த இவர், இன்று முன்னணி டீ  ஏற்றுமதியாளர்களில் ஒருவர்.‘‘மூலிகைப் பண்ணை வச்சிருந்தப்ப ரோஸ்மெர்ரி, செலரி மாதிரியான அபூர்வமான மூலிகைகள் பத்தியும் அதோட  மருத்துவ குணங்கள் பத்தியும் நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. தேயிலைக்குப் பேர் போன இடம் ஊட்டி. இந்த ரெண்டையும் இணைச்சு,  ஆரோக்கியமான டீ தயாரிப்பு முயற்சி பண்ணலாமானு யோசிச்சேன். மூலிகைகள் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லலாம். ஆனா, அதைக் கஷாயமா  கொடுத்தா யாரும் குடிக்க மாட்டாங்க. 

அதையே டீயோட கலந்து கொடுக்கிற என் முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்ப நீரிழிவுக்கு, கொலஸ்ட்ராலுக்கு, சருமப் பளபளப்புக்கு,  மாதவிலக்குப் பிரச்னைகளுக்கு, வயசானவங்க ஆரோக்கியத்துக்கு, சளி, இருமல் பிரச்னை உள்ளவங்களுக்கு, மன அழுத்தம் உள்ளவங் களுக்குன்னு  ஒவ்வொருத்தருக்கும் உதவற மாதிரி காம்பினேஷன்ல தயாரிக்கிறேன். சித்த மருத்துவர்களோட ஆலோசனை மற்றும் வழிகாட்டு தலின் பேர்ல  செம்பருத்தி, மகிழம்பூ, சீரகம், ஆவாரம்பூ, தனியா, கிராம்புனு பலவித பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கிற இதுல 30 சதவிகிதம் டீயும், 70 சதவிகிதம்  மூலிகைக் கலவையும் இருக்கும். 

சில ஏமாற்று விளம்பரங்களைப் போல, டீ குடிச்சா கொழுப்பு குறையும்னு சொல்லிட்டு, ஒரு நாளைக்கு பத்து டீ குடிக்கணும்னு நாங்க சொல்லலை.  வழக்கமான டீக்கு பதிலா காலையில ஒண்ணு, மாலை ஒண்ணு குடிச்சாலே போதும். அவங்கவங்க விருப்பப்படி பால் சேர்த்தோ, சேர்க்காமலோ  குடிக்கலாம். உபயோகிக்க எளிதா டீ பேக் வடிவத்துல, எல்லா மக்களும் வாங்கக் கூடிய விலையில கொடுக்கறோம்’’என்கிற அருண், அடுத்தகட்ட  முயற்சியாக வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களை முறைப்படுத்தும் டீ வகைகளையும் அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.  சுவையான, மணமான  தேயிலைத் தகவல்கள் அடுத்த இதழிலும்!

நன்றி குங்குமம்தோழி