Tuesday, October 31, 2017

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய முக்கிய அம்சங்கள்!
=============================================

இன்றைய காலக்கட்டத்்தில் பலர் வேலை, படிப்பின் காரணமாக வெளியூ ரில் வசிப்பவர்கள், சொந்த வீடு வாங்க முடியாதவர்கள், இப்படி பலதரப்ப ட்ட‍ காரணங்களினால்
வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ் நிலையில் தள்ளப்வபடுகிறார்கள். இந்த‌ வாடகைக்கு வீடு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை க வனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

1.வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதற்கு வாட கை ஒப்பந்ாதப் பத்திரத்தை போடுவது முக்கியம். அதில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் ஆகிய இருவரது பெயர்கள், வயது, தந்தை பெயர் ஆகியவை கண்டிப்பாக இருக்க‍ வேண்டு ம். மேலும் வீட்டின்உரிமையாளரது நிரந்தரவீட்டு விலாசம், வாடகை தாரர் தனது நிரந்ரத வீட்டு விலாசத்தையோ (அல்) ஏற்கெனவே குடியிருந்த வீட்டின்விலாசத்தையும் தவறாமல் குறிப்பிட  வேண்டும். அது மட்டுமல்ல, வாடகைவீடு எங்கிருக்கிறதோ அந்த வீட்டின் விலாசத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.

2. மாத வாடகை தொகை எவ்வளவு, முன்தொகை தொகை எவ்வளவு, வாடகை ஒப்பந்வதகாலம் எத்த‍ னை மாதங்கள் அல்லதுள எத்தனை் வருடங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். மாத வாடகையை போல 10 மடங்கு தொ கை மன்தொகை வீட்டு உரிமையாளரால் வசூலிக்க முடியும். மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கிறீர்கள் எனில் ரூ.1 லட்சம் முன்தொகை   கொடுக்கவேண்டியிருக்கும். இந்த தொகைக்கு வட்டி எக்காரணம் கொண்டும் கணக்கிடப்பட மாட்டாது. மேலும்  இந்த முன்தொகை, வீட்டின் உரிமையாளரை பொறுத்துமாறும். பெரும்பா லும் முன்தொகை அதிகமாக இருக்கும். அதை ஒப்பந்றதத்தில்குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் எதாவது பிரச்சனை வரும்போது பணத்தை திரும்ப பெற இது உதவியாக இருக்கும். மேலும் எவ்வளவு நாளைக்கு ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போல தொடர்ந்து வாடகை ஒப்பந்யதத்தை புதுப்பிப்பது அவசியம்.
அல்லதுய குத்தகைதக்குகூட சில வீட்டு உரிமை யளார்கள் விடுகிறார். அதாவது ஒரு பெரிய தொகையை வீட்டுஉரிமையாளர், குத்தகைவதா ரரிடம் வசூலிப்பார். அத்தொகையை வங்கியில் அவரது பெயருக்கு டிபாசிட்செய்து அதில்வரும் வட்டியை வாடகைதொகையாக கருதப்பட்டு வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொள்வார். அதா வது ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு குத்தகை தொகையாக சுமார் 4 முதல் 6லட்சம்வரை இருக்கும்

2 ப டுக்கைய றைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகைு தொகை யாக ரூ.6 to 10 இலட்சம்வரை இருக்கும். 3 படுக் கையறைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகை  தொகையாக ரூ.10 முதல் 15 இலட்சம் வரை இருக்கும். மேலும் வீட்டின் சதுரடியை பொறுத்து குத்தகைு தொகை வீட்டு உரிமையாளர்களால் நிர்ணயி க்கப்தபடும்.

3 .குடியிருக்கும் வீட்டில் டியூசன் எடுக்க கூடாது , வீட்டிலே சின்னதாக எதாவது தொழில்செய்யக்கூடாது, சுவரில்ஆணி அடிக்கக்கூடாது, மாடியில் செடி வைக்கக்கூடாது சில வீட்டு உரிமையாளர்கள்  சொல்வர்கள். இதையும் முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

4.கூடுதலாக எதற்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். வாடகை போர்ஷனுக்கு உண் டான மின் கட்டணகத்தை நேரடியாக மின்வாரிய அலுவலக த்திலேயே செலுத்திக்கொள்ள‍ சில வீட்டு உரிமையாளர்  அனுமதிப்பார்கள். ஆனால்  சில வீடுகளில் வீட்டு உரிமை யாளர்களே மின் வாரிய அனுமதியுடன் சப் மீட்டர்ா பொருத் தியிருப்பர்க அந்த மீட்டர்ர காட்டும் மின்கட்டணம் சில இடங்களில் நியாய மாக இருக்கும் பல இடங்களில் அதிகமாக வசூலிப்பார்கள். அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட  கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5,6 என வசூலிப்பார்கள். மேலும் தண்ணீருக்கு தனியாக, கழிவுநீர் வெளியே எடுப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கேட் பார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

5.வாடகைக்கு வீடு, வாடகைதாரர் எடுக்கும்போது, அந்த வீடு நல்ல நிலையில் இருந்ததோ அதே நிலையில் வீட்டை பராமரித்து வரவேண் டும். மீறிவாடகைக்குபோகும் வீட்டில்உள்ள சிலபொருட்கள் சேதம் அடை  ந்தால் அல்லது பழுதடைந்தால் அதற்கு வாடகை தாரரே முழு பொறுப்பு ஆவார். பழுதை சரிசெய்து அதற்கான தொகையை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரரிடம் இருந்து வசூலிப்பார். அல்லது   அந்த பழுதை  வாடகைதாரரையே சரிசெய்ய சொல் வார். அதாவது தண்ணீர் பைப் உடைவது, ஜன்னல் கண்ணாடி, வீடு தரையில் உள்ள டைல்ஸில் ஏதாவது கீறல் விழும்போது வாடகைதாரரே அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்துகொண்டால், நல்லதுு.   சில வீடுகளில் பேன், ஏசி, லைட் ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரே போட்டு வைத்திருப்பார். இவைகள் பழுதானாலும் அவற்றையும் வாடகைதாரரே சரி செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும்.

6. வாடகைக்கு எடுத்த‍ வீட்டை நீங்கள் காலிசெய்வதாக இருந்தால், அவ் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டைவந்து பார்வையிடுவார். அவ் வீட்டில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ அல்லதுர ஏதேனும் மின் பாக் கி வைத்திருந்தாலோ அல்லதுஏ உடைத்திருந்தாலோ அத் தொகையை வாடகைதார‌ர் கொடுத்த‍ முன்தொகையில் இருந்து கழித்துக்கொண்டு மீதித்தொகையை கொடுப்பார். அதனை வாடகைதாரரான நீங்கள்பெற்றுக் கொள்ள வேண் டும்.

7.நோட்டீஸ் பிரீயட் எவ்வளவு நாட்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். வீடு காலிசெய்வதை எவ்வளவு நாளை க்கு முன் தெரிவிக்க வேண்டும் என்பதையும்,அந்த சமயத்தில் எதாவது கூடுதல் கட்டணம் (வீட்டில் சுண்ணாம்பு அடிப்பதற்கு) உள்ளதா என்பதை  தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

8.வாடகைஒப்பந்தப்பத்திரம் தயாரித்தபிமன் பத்திரத்தை படித்தபி றகு முடிவில் எல்லாப் பக்கங்்களிலும் இடது பக்கம்் வீட்டு உரிமையாளரும், வலது பக்கத்்தில் வீட்டு வாடகைதாரரும் மறக்காமல் கையொப்பம்் இடவேண்டு ம். மேலும் சாட்சிகள் இருவர் கையொப்பம்ப இடவேண்டு ம். முதல் சாட்சி, வீட்டு உரிமையாளரது உறவினரோ அல்லதுச  நண்பர் களோ அல்லதுு தெரிந்தவர்களோ கையொப்பம்் இட வேண்டும். இரண்டாவது சாட்சி வாடகைதாரரது உறவினரோ அல்லதுப நண்பர்களோ அல்லதுத தெரிந் தவர்களோ கையொப்பம்ல இடவேண்டும். சாட்சிகள் கையொப்பம்ள இடும்போது, கையொப்பம்ல, பெயர், வயது மற்றும் வீட்டு விலாசம் ஆகியவற்றை தவறா மல் குறிப்படவேண்டும்.

9. எல்லாவற்றுக்கும் மேலாக வாடகைதாரர், வீட்டு உரிமையாளரை பற்றி அக்கம்்பக்கத்ததில் உள்ளவடர்க ளிடம் விசாரித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள‍ வேண்டும். அதேபோல் வீட்டுஉரிமையாளர், வாட கைதாரர் ஏற்கெனவே குடியிருந்த வீட்டிற்கு சிரமம் பாராமல் சென்று அவரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள‍ வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்தபடும்.

நன்றி- விதை 2 விருட்சம்
(இது பழைய பதிவு - புதிய சட்டப்படி,பெரிய செலவுகளை, உரிமையாளர் செய்து தர வேண்டும், தனி slide கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

Wednesday, October 11, 2017

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு : சென்னை நுகர்வோர் நீதிமன்றம்:

சென்னை,
ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை மற்றும் இழப்பீடாக ரூ.3½ லட்சம் வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் சுந்தரசெல்வன். டென்னிஸ் பயிற்சியாளர். இவர், சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பெற முடியும்.
கடந்த 2014–ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்டேன். இதைதொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 லட்சம் செலவானது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை வழங்க மறுத்துவிட்டது.
காரணம் கேட்டபோது, எனக்கு இருதய பாதிப்பு 15 ஆண்டுகளாக இருந்து வருவதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு முன்பே இருதய நோய் இருந்ததால் காப்பீடு பெற தகுதியில்லை என்றும் கூறியது.
ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனவே, எனக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு ஆகும்.
எனவே, மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Source: dailythanthi. ஜூலை 20, 2017,

காப்பீடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:

Pay emergency claim, district consumer disputes redressal forum to insurance company:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214213152055900
தாமதத்திற்காக இழப்பீட்டை மறுக்கக் கூடாது: காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214180058725876
வாரிசு சான்றிதழில் பெயர் இல்லை எனக்கூறி ஒருவருக்கான விபத்து இழப்பீட்டு தொகையை தர காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213594132117802
கைகளை இழந்த சிறுவனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213549725455576
பாலிசி எடுத்தவர் 23 நாட்களில் உயிரிழப்பு: வாரிசுக்கு, காப்பீட்டு நிறுவனம், ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு :
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1204849702992245
சென்னை: பெண்ணுக்கு மருத்துவ செலவு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1198538986956650
ரூ.2 இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன், காப்பீடு செய்தவருக்கு கிடைக்கத்தக்கது – நீதிமன்றம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1197320830411799
வீட்டில் திருட்டு போன பொருட்களுக்கு ரூ.3.64 லட்சம் இழப்பீடு தர உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196761233801092
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவர் செலுத்திய தொகையை திரும்ப வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196165527193996
ஆயத்த ஆடை கடை உரிமையாளருக்கு ரூ.9.64 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212939015516647
Murder can be accident, forum tells insurer: [மாநில நுகர்வோர் ஆணையம் சென்னை]
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212765032200712
லாரி உரிமையாளருக்கு வாகன இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209999202477295
மினி லாரியின் உரிமையாளருக்கு இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209990939144788
வாகனத்தை பழுதுபார்த்த தொகையை வழங்காததால் வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1207829029360979

வாடகை வீடைச் சொந்தம் கொண்டாட முடியுமா? :

வாடகை வீடைச் சொந்தம் கொண்டாட முடியுமா? : சட்டம் சொல்வது என்ன

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுவது இயற்கைதான். அப்படி பரவலாக எழும் கேள்விகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து வல்லுநர்களிடம் கேட்டறிந்த கருத்துகளை இங்கே தொகுத்துத் தந்துள்ளோம்.

1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

2 .வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?

வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.

வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.

3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன?

உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:
வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்… வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது… அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்… (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).

4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா?

வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.

5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?

சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது – இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?

தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.                                                நன்றி - சட்டம் உன் கையில்

Sunday, July 23, 2017

வைட்டமின் A


நமக்கு இந்தப் பிரச்னை இருப்பதுபோலத் தெரிகிறதே என்று உடனே ஃபார்மசிக்குச் சென்று, வைட்டமின் மாத்திரைகளை வாங்கி, பாதாம் உண்ணுவது போல எடுக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, வைட்டமின் சப்ளிமெண்டுகளை நீங்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
. அப்படி இல்லாமல், நீங்களே சப்ளிமெண்டுகள் எடுப்பது பெரிய ஆபத்து. சரியாகச் சொல்லுவதென்றால், வைட்டமின் குறைவால் விளையும் ஆபத்தைக் காட்டிலும் மிகு வைட்டமின் அதிக ஆபத்து. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை.

வைட்டமின் A
************

வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு சப்ளிமெண்டுகளாக உபயோகப் படுத்துவதற்குப் பல காலம் முன்னரே சில வகையான உணவுகள் சில வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஈரலை உணவாகக் கொடுக்கும்போது மாலைக்கண் நோய் சரியாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஈரலில் இருக்கும் வைட்டமின் A வே இதற்குக் காரணம்.

1912ஆம் ஆண்டு டாக்டர் காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்பவர், நெல் உமியில் உள்ள நுண்சத்துகளைக் கண்டறிந்து அதற்கு Vitamines என்று பெயர் வைத்தார். வைட்டமின் A முதல் முதலாக காட் லிவர் ஆயிலில் இருந்து 1913ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

வைட்டமின் A எனப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின் இரண்டு வகைப்படும். ரெட்டினாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் (Retinoids and Carotenoids). இதில் ரெட்டினாய்ட் வகை, இறைச்சி உணவிலும் கரோடினாய்ட் வகை, காய்கறி உணவிலும் உள்ளது. ரெட்டினாய்ட் வகை வைட்டமின் ஆக்டிவ் வகை என்று அழைக்கப்படும். அதாவது இறைச்சியில் உள்ள வைட்டமின் A உடல் உபயோகிப்பதற்கான வடிவத்தில் இருக்கும்.

ஆனால் காய்கறிகளில் இருக்கும் கரோடினாய்ட் வகை வைட்டமின் A ப்ரொ வைட்டமின் அல்லது பிரீ கர்சர் என்று அழைக்கப்படும். அதாவது இந்த பிரீகர்சர்களை ஈரல் சேமித்து வைத்துக் கொண்டு உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் A வாக மாற்றும். இது மேலும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் காமா கரோட்டின் என்று மூன்று வகைப்படும். இந்த கரொடினாய்டுகள் வைட்டமின் A வாக மாற்றப் பட்டு ஆக்டிவ் வடிவத்துக்கு மாறும். அதிகபட்சமாக உடலானது நான்கு முதல் ஆறு சதவீதம் வரையே கரோடினாய்டுகளை ஆக்டிவ் வைட்டமின் Aவாக மாற்ற முடியும், அதுவும் உடல் நல்ல நலத்துடன் இருந்தால் மட்டுமே. இந்த வைட்டமின் A வகையில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிரீ ராடிகல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தைக் குறைக்க உதவும் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. முக்கியமாக கேன்சர் நோய் வராமல் தடுக்க பெருமளவில் உபயோகமாகிறது.

உடலின் இரண்டாவது மூளை எனப்படும் குடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே கரோடின்களை ஆக்டிவ் வைட்டமின் A வாக மாற்ற முடியும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் இந்த வைட்டமினை கிரகிக்க சரியான அளவில் தேவை. ஆண்டாசிட்டுகள் வைட்டமின் A கிரகிப்பைக் குறைக்கும்.  பித்தப் பையில் சுரக்கும் பித்த நீரும் வைட்டமின் A கிரகிப்புக்கு முக்கியத் தேவை. 

காய்கறி உணவுகளில் பிரீகர்சர் எனப்படும் கரோட்டின்கள் உள்ளன என்று பார்த்தோம். நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம் மற்றும் கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலானது கரோட்டின்களை வைட்டமின் A வாக மாற்றும் சக்தி குறைகிறது.

கொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் A, கொழுப்பில் பயனித்து செல்களுக்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை படைத்தவை. செல்களைச் சுற்றி கொழுப்பு இருப்பதால் தண்ணீரில் கரையும் வைட்டமின்களால் இப்படி செல்களுக்குள் நேரடியாகச் செல்வது இயலாது.

இதன் செயற்கை வடிவங்களாக வைட்டமின் A பால்மிடேட் மற்றும் வைட்டமின் A அசிட்டேட் என்ற இரண்டு வகைகளாக உள்ளது. இந்த செயற்கை வைட்டமின்கள் ரெட்டினாய்ட் போல உடல் உபயோகிக்க ஏற்ற ஆக்டிவ் வடிவத்தில் இருக்கும்.

வைட்டமின் A வின் சிறப்பு வடிவங்களான Trentonoin மற்றும் isotrentinoin முகப்பரு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. மேலும் சில வகையான ரெட்டினாய்டுகள் கேன்சர் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு உபயோகமாகிறது. இந்த வகை ரெட்டினாய்டுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த வடிவங்கள் இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. ஆனால் உணவு மூலம் இவற்றை எடுப்பதில் எந்தத் தடையுமில்லை.

உடலின் கீழ்க்கண்ட செயல்களுக்கு வைட்டமின் A தேவை:

.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களைப் பெருகச் செய்து நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.

.  தோல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

.  சுற்றுச் சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

.  கேன்சர் எனப்படும் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது.

. கண் பார்வைக்கு வைட்டமின் A அவசியமான ஒன்றாகும்.

.  எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இந்த வைட்டமின் A ஆண்டி ஆக்சிடண்டுகளில் ஒன்றாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மூன்றாம் டிரைமெஸ்டர் என்று சொல்லப்படும் 7 மாதங்களுக்கு மேலான நிலையில் வைட்டமின் A வின் தேவை அதிகரிக்கும். அந்த வேளையில் வைட்டமின் A உள்ள உணவுகளையோ சப்ளிமெண்டுகளையோ எடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும்.

நம்ம போலீஸ் ஆஃபீஸர் கோகுல் சாரோட மகன் அபிஷேக்குக்கு சில நாளாகவே சாயங்காலமானா கண் பார்வை சரியா தெரியாம இருந்தது. பார்வை மங்கலாக இருந்ததால சாயங்காலம் கூடப் படிக்கற பசங்களோட விளையாட முடியாம சீக்கிரமா வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். மாதக்கணக்கில் இது நீடிக்கவே, கோகுல்நாத் சார் அவனைக் கூட்டிட்டுப் போய் மருத்துவரைப் பார்த்தார். இது ஒரு நிகழ்வு.

இன்னொரு நிகழ்வாக, நம்ம கோகிலா டீச்சரோட பையன் ரமேஷுக்கு, அடிக்கடி காய்ச்சலும் இன்ஃபெக்‌ஷனும் வந்துட்டே இருந்தது. சின்னதா ரெண்டு துளி மழை தலைல பட்டாக்கூட காய்ச்சல், உடனே காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டுட்டு இருந்தான். இது இன்னொரு நிகழ்வு.

மேலே சொன்ன ரெண்டு பேரும் மருத்துவரைச் சந்தித்ததில், இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் வைட்டமின் A குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்தார். அவர்களுக்குத் தேவையான வைட்டமின் A உள்ள உணவுகளைப் பரிந்துரைத்தும் வைட்டமின் A சப்ளிமெண்டுகளைக் கொடுத்தும் இந்தக் குறைகளைச் சரி செய்தார்.

உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?  முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

.  கண்கள் வறண்டு போவது
.  அடிக்கடி சோர்வுடன் தலை சுற்றல் வருவது
.  ஹைப்போ தைராய்டிசம்
.  அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது
.  பெண்களுக்கு அடிக்கடி யீஸ்ட் இன்ஃபெக்‌ஷன் வருவது
.  மாலைக் கண் நோய்
.  பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல்
.  காயங்கள் ஆற அதிக காலம் எடுப்பது
.  தோல் வறண்டு போய் செதிள் செதிளாக ஆகுதல்

மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் வைட்டமின் A சப்ளிமெண்டுகளையோ அல்லது வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகளையோ எடுக்க வேண்டும். குறைபாடு இருக்கும் போது 25000 IU வரை ஒரு நாளுக்கு எடுக்கலாம். 50000 IU அளவுகளில் இதை தினமும்
எடுப்பது நச்சுத் தன்மையை உருவாக்கும்.

ஆண்டிபயாடிக்குகள், செரிமானக் கோளாறுகள், கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் A குறைபாட்டை உருவாக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வைட்டமின் A அளவை அறியலாம்.

மேலே சொன்ன உதாரணத்தில் கோகிலா டீச்சர் இந்த வைட்டமின் A ரொம்ப நல்லது போல இருக்கேன்னு, வைட்டமின் சப்ளிமெண்ட்டை தொடர்ச்சியாக, டாக்டர் ரெகமண்ட் செய்த அளவை விட அதிகமான டோஸை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவனுக்கு பசி குறைய ஆரம்பித்தது. முடி உதிர ஆரம்பித்தது. விரல்கள் பின்னிக் கொண்டன.  வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை.

ஒரு நாள் மிகவும் முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவனுடைய ஈரலும் மண்ணீரலும் வீங்கியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கோகிலா டீச்சரிடம் கேட்டபோது அவர் வைட்டமின் A சப்ளிமெண்ட்டைக் கொடுத்தைத் தெரிவித்தார். உடனடியாக வைட்டமின் Aவைக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னவுடன் சில மாதங்களில் ஆரம்பித்து இரண்டு வருசத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளும் சரியானது.

ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும் ஆபத்து. அதிகமாகப் போனால் அதை விட ஆபத்து. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் கொடுக்கும் அளவுகளில் மட்டுமே வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகப் பிரச்சினைகள்தான் வரும்.

வைட்டமின் A வை உணவு மூலம் எடுக்கும்போது வைட்டமின் A நச்சுத்தன்மை உடலில் உருவாக பெரும்பாலும் வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு ஈரலை மட்டும் தினசரி முழு நேர உணவாக உண்டு கொண்டிருந்தால் மட்டுமே வைட்டமின் அதிகமாகி நச்சுத்தன்மை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இந்த வைட்டமின் A உடலில் அதிகமாகி நச்சானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

.  பசி உணர்வின்மை
.  முடி கொட்டிப் போதல்
.  அடிக்கடி தலை வலி
.  மூட்டுகளில் வலி
.  எடையிழப்பு
.  எரிச்சலான மனநிலை

வைட்டமின் A வின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு:

0-3 வயது:  2000 IU அல்லது 600 mcg
4-8 வயது:  3000 IU அல்லது 900 mcg
9-13 வயது:  5610 IU அல்லது 1700 mcg
14-18 வயது:  9240 IU அல்லது 2800 mcg
19 வயதுக்கு மேல்:  10000 IU அல்லது 3000 mcg

கீழ்க்கண்ட உணவுகளில் வைட்டமின் A உள்ளது.

அசைவ உணவுகள்: ஈரல், மீன்கள், முட்டை, சிக்கன்.

சைவ உணவுகள்: கேரட், மிளகாய், கீரைகள், ஆப்ரிகாட் பழங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெங்காயத்தாள், பால், பப்பாளிப் பழம், வெண்டைக்காய் தர்பூசனிப் பழம் போன்ற அனைத்துக் காய்கறி பழங்களிலும் கரோடினாய்டுகள் வடிவத்தில் வைட்டமின் A உள்ளது.

தாவர உணவுகளில் உள்ள கரோடினாய்டுகள் 700க்கும் மேல் உள்ளன. அவற்றில் 60 வகையான கரோடினாய்டுகள் உணவுப் பொருட்களில் உள்ளன. அதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், கிரிப்டோசாந்தின், லைகோபீன், லூட்டின் மற்றும் ஜீசாந்தின் போன்ற ஆறு வகைகள் நாம் சாதாரனமாக உண்ணும் உணவில் உள்ளன. (Alpha - carotene, beta - carotene, cryptoxanthin, lucopene, luetin and zeaxanthin - உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது பற்றி மேலதிக தகவல்களை கூகுள் மூலமாகப் பெறுவதற்காக இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்).

இவற்றில் கிரிடோசாந்தின் வகை கரோடினாய்ட் கேன்சர் ஆபத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது வெண்ணெய், ஆரஞ்சுப்பழம், முட்டை மஞ்சள் கரு, பப்பாளிப் பழம் போன்றவற்றில் உள்ளது. இது கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

லைகோபீன் என்ற வகை கரோடினாய்டும் சில வகையான கேன்சரைத் தடுப்பதில் உதவுகிறது. LDL கொலஸ்டிராலைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை அடர்த்தியான பச்சை நிறமுள்ள கீரைகள், கொய்யா, தர்பூசனிப் பழம், தக்காளி போன்றவற்றில் உள்ளது. இவற்றை கொழுப்புடன் சேர்த்து உணவாகத் தயாரிக்கும் போதும் சீஸுடன் சாப்பிடும் போதும் இதன் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது.

லூட்டின் மற்றும் ஜீசாந்தின் வகை கரோடினாய்டுகள் கண்கள் ஒளியை சரியாக கிரகிக்கவும் ஃபிரீ ராடிகல்ஸ்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நுரையீரல், வயிறு மற்றும் பல இடங்களில் உருவாகும் புற்று நோயை வர விடாமல் தடுப்பதுல் வைட்டமின் A முக்கியப் பங்காற்றுகிறது.  தொடர்ச்சியாக தினமும் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள காய்கறிகளை உண்பது, கேன்சர் வருவதைத் தடுக்கும்.