Sunday, January 21, 2018

குடலில் உள்ள அழுக்குகள்

குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றி அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்த இத குடிங்க

ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை குடலில் தங்கி, மலச்சிக்கல் ஏற்பட்டு, அதனால் வேறு சில பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடுகிறது. கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு உணவுகள் தான் உதவி புரியும். ஆகவே குடலை சுத்தப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அடிக்கடி உட்கொண்டு வர வேண்டும். மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
கீழே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக குடல் சுத்தமாக இருந்தால், உடல் எடை வேகமாக குறையும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக கொண்ட ஓர் செடி. இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, செரிமான பாதை சுத்தமாகிவிடும். மேலும் இது அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்தும்

நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி நார்ச்சத்துள்ள உணவுகள், குடலில் உள்ள நீரால் மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற உதவும்.

ஆப்பிள் மற்றொரு சிறப்பான குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருள். நீங்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டால், ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் உங்கள் குடல் சுத்தமாகி, கழிவுகள் எளிதில் வெளியேற்றப்பட்டு, குடலியக்கம் சீராக்கப்படும். மேலும் ஆப்பிளில் பெக்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை உள்ளதால், அவை குடலில் நீரை தேக்கி வைத்து, குடலியக்கம் சீராக நடைபெற உதவும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளதோடு, குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே உங்கள் குடல் சுத்தமாக, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டுமானால், தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.

தயிர் கூட குடலை சுத்தம் செய்யும். மேலும் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை சீராக்கவும், உணவில் உள்ள சத்துக்களை குடல் எளிதில் உறிஞ்சவும் உதவும். எனவே தினமும் ஒரு கப் தயிரை உட்கொண்டு, உங்கள் குடலை தினமும் சுத்தம் செய்து வாருங்கள்.

பால் குடலில் உள்ள செரிக்கப்படாத உணவுகளை எளிதில் செரித்து, டாக்ஸின்களை வெளியேற்றும். எனவே இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வாந்தால், குடல் சுத்தமாகும். மேலும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரோட்டீன்களும், இதர சத்துக்கள் வளமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வெண்ணெய் பழம் குடலில் நீரைத் தக்க வைத்து, குடலியக்கத்தை சீராக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் பழ மில்க் ஷேக் குடித்து உங்கள் குடலை சுத்தப்படுத்துங்கள்.

பூண்டு சாப்பிடுவதால், உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும். குறிப்பாக பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது பாலுடன் சேர்த்தோ எடுத்து வரலாம்.

அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி?

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விபரங்கள்:
*****************************************************
அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.

பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன.

ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.

டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ, மோசடியானதாகவோ, இருக்கக்கூடாது.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும், கூட இருக்கக்கூடாது.

ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம். எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள். டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

வளர்பிறை பாரம்பரிய உணவுகள்

200 பொருட்களோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

ஒரு சில பொருட்கள் விலை மாற்றத்துடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

மரபுவழி விதைகளின் வாழ்வியல் கூட்டமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் பாரம்பரிய விதைகளக் கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைப்பு பணியும்,புதிய விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வைக்கும் வேலைகளையும்,பாரம்பரிய விதைகளை பாதுகாப்பு, பரவலாக்கும் வேலைகளையும் செய்து வருகிறோம்

விவசாயிகளின் இயற்கை விளைபொருட்களை மதிப்பு கூட்டி தமிழ்நாடு,பாண்டிசேரி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கு வளர்பிறை பாரம்பரிய உணவுகள் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
வளர்பிறை பாரம்பரிய உணவுகள் விவசாயிகள் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது

வளர்பிறை பாரம்பரிய உணவுகள்
41,7 வது தெரு
ஜவஹர் நகர்
திருமங்கலம்
மதுரை மாவட்டம்
9443563853

விலைப் பட்டியல்

1) வரகு அரிசி ( பச்சை)  1 கிலோ ரூ60/

2) குதிரைவாலி அரிசி( பச்சை) 1 கிலோ ரூ 65/

3) சாமை அரிசி( பச்சை) 1 கிலோ ரூ 70/

4) தினை அரிசி( பச்சை) 1 கிலோ ரூ 65/

5) பனி வரகரிசி( பச்சை) 1 கிலோ ரூ 75/

6) சிகப்பு சோள அரிசி 1 கிலோ ரூ 70/

7) வரகரிசி( புழுங்கல்) 1 கிலோ ரூ 65/

8) குதிரைவாலி அரிசி( புழுங்கல்) 1 கி ரூ 70/

9) சாமை அரிசி( பழுங்கல்) 1 கி ரூ 75/

10) தினை அரிசி( புழுங்கல்) 1 கி ரூ 70/

11) பனி வரகரிசி( புழுங்கல்) 1 கி ரூ 80/

12) கேழ்வரகு அரிசி( புழுங்கல்) 1 கி ரூ 60/

13) கைக் குத்தல் அரிசி( பச்சை) 1 கி ரூ 60/

14) கைக்குத்தல் சிகப்பரிசி( புழுங்கல்) 1 கி ரூ 65/

15) சிகப்பரிசி( பச்சை) 1 கி ரூ 50/

16) கேரளா மட்டை சிகப்பரிசி( புழுங்கல்) 1 கி ரூ 60/

17) கைக்குத்தல் பொன்னி அரிசி( புழுங்கல்) 1 கி ரூ 65/

18)  வெள்ளை சோளம்  1 கி ரூ 32/

19) கேழ்வரகு 1 கி ரூ 32/

20)நாட்டுக்கம்பு( தீட்டியது) 1 கி ரூ 65/

21) கொள்ளு 1 கி ரூ 50/

22) கருப்பு கொள்ளு 1 கி ரூ 80/

23) நரிப் பயறு 1 கி ரூ 100/

24/ கொண்டக் கடலை 1 கி ரூ 110/

25) தட்டை பயறு 1 கி ரூ 100/

26) மொச்சை 1 கி ரூ 70/

27) பாசி பயறு 1 கி ரூ 100/

28) கருப்பு உளுந்து 1 கி ரூ 140/

29) மூங்கில் அரிசி 1 கி ரூ 230/

30) கருப்பு கவனி அரிசி 1 கி ரூ220/

31) குதிரைவாலி சேமியா1 கி ரூ 120/

32) வரகு சேமியா 1 கி ரூ 120/

33) சாமை சேமியா 1 கி ரூ 120/

34) கம்பு சேமியா 1 கி ரூ 120/

35) தினை சேமியா 1 கி ரூ 120/

36)ராகி சேமியா 1 கி ரூ 120/

37) கொள்ளு சேமியா 1 கி ரூ 120/

38) சோள சேமியா 1 கி ரூ 120/

39) கோதுமை சேமியா 1 கி ரூ 120/

சேமியா அனைத்தும் 250 கிராம் பாக்கெட்டுகளில் வரும்.

40) குதிரைவாலி நூடுல்ஸ்

41) வரகு நூடுல்ஸ்

42) சாமை நூடுல்ஸ்

43) கம்பு நூடுல்ஸ்

44) தினை நூடுல்ஸ்

45) ராகி நூடுல்ஸ்

46) கொளளு
நூடுல்ஸ்

47) சோள நூடுல்ஸ்

48) கோதுமை நூடுல்ஸ்

49) சிகப்பரிசி நூடுல்ஸ்

50) பனிவரகு நூடுல்ஸ்

நூடுல்ஸ் அனைத்தும் மசாலாவுடன் 200 கிராம் பாக்கெட்டாக இருக்கும்
  1 கிலோ ரூ 150/

51) குதிரைவாலி சில்லி புரோட்டா

52) வரகு சில்லி புரோட்டா

53) சாமை சில்லி புரோட்டா

54) கம்பு சில்லி புரோட்டா

55) தினை சில்லி புரோட்டா

56) ராகி சில்லி புரோட்டா

57) கொள்ளு சில்லி புரோட்டா

58) சோள சில்லி புரோட்டா

59) கோதுமை சில்லி புரோட்டா

60) பனிவரகு சில்லி புரோட்டா

61) சிகப்பரிசி சில்லி புரோட்டா
 
அனைத்து சில்லி புரோட்டாவும் மசாலுடன் 200 கிராம் பாக்கெட்டுகளாக இருக்கும்
1 கிலோ ரூ 150/

62) முளைக் கட்டிய கம்பு மாவு 1 கி ரூ 60

63) முளை கட்டிய கேழ்வரகு மாவு 1 கி ரூ 60/

64) முளை கட்டிய சோள மாவு1 கி ரூ 60/

65) முளை கட்டிய தினை மாவு 1 கி ரூ 80/

66)கம்பு தோசைமிக்ஸ் 1 கி ரூ 100/

67)ராகி தோசைமிக்ஸ் 1 கி ரூ 100/

68) சோள தோசை மிகஸ் 1 கி ரூ 100/

69)வரகு தோசை மிக்ஸ் 1 கி ரூ 100/

70)சாமை தோசை மிக்ஸ் 1 கி ரூ 100/

71)) குதிரைவாலி தோசை மிக்ஸ் 1 கி ரூ 100/

72) தினை தோசை மிக்ஸ் 1 கி ரூ 100/

73) பனிவரகு தோசை மிக்ஸ் 1 கி ரூ 100/

74) நவதானிய தோசை மிக்ஸ் 1 கி ரூ 120/

75) நவதானிய அடை மிக்ஸ் 1 கி ரூ 120/

76) கொள்ளு கஞ்சி மிக்ஸ் 1 கி ரூ 120/

77) சிறு தானிய கஞ்சி மிக்ஸ் 1 கி ரூ 120/

78) வரகு களி் மிக்ஸ் 1 கி ரூ 100/

79)குதிரைவாலி களி மிக்ஸ் ரூ 100/

80) சாமை களி மிக்ஸ் 1 கி ரூ 100/

81) பனிவரகு களி மிக்ஸ் 1 கி ரூ 100/

82) தினை களி மிக்ஸ் 1 கி ரூ 100/

83) சிறுதானிய களி மிக்ஸ் 1 கி ரூ 100/

84) குழந்தைகள் சத்து மாவு 1 கி ரூ 200/

85)பெரியவர்கள் சத்துமாவு 1 கி ரூ 150/

எல்லா மாவுகளும் அரை கிலோ பாக்கெட்டுகளில் வரும்

86) வரகு மிக்சர்

87) வரகு காரா சேவு

88) ராகி மிக்சர்

89) ராகி மிளகு சேவு

90) குதிரைவாலி காராசேவு

91) குதிரைவாலி மிக்சர்

92) சாமை மிக்சர்

93) பனிவரகு ரிப்பன பக்கோடா

94) வரகு முருக்கு

95) சாமை முருக்கு

96) தினை முறுக்கு

97) குதிரைவாலி முறுக்கு

97) தினை முறுக்கு

98) பனிவரகு முறுக்கு

99) வரகு ஓம பொடி

100) பனிவரகு ஓம பொடி

சிறுதானிய காரங்கள் அனைத்தும் 200 கிராம் அளவுகளில் standing pouch ல் வரும்

1 கிலோ ரூ 200/
Mrp. RS 300/

101) சுக்குமல்லி காபி 1 கி ரூ 350/

102) ஆவாரம்பூ தேநீர் 1 கி ரூ 400/

103) துளசிமல்லி காபி 1 கி ரூ 400/

104) நன்னாரி காபி 1 கி ரூ 600/

105) தான்றிக்காய் காபி 1 கி ரூ் 600/

106) தேற்றான் கொட்டை காபி 1 கி ரூ 600/

107) கருங்காலி பட்டை தேனீர் 1 கி ரூ 600/

108) நத்தை சூரி காபி 1 கி ரூ 600/

109) தாமரைப் பூ தேநீர் 1 கி ரூ 700/

110) செம்பருத்தி தேனீர் 1 கி ரூ 600/


மூலிகை தேனீர்கள் அனைத்தும் 100 கிராம் அளவுகளில் வரும்

111)கொள்ளு இட்லி பொடி 1 கி ரூ 250/

112)பனங்கருப்பட்டி 1 கி் ரூ 180/

113) பனங்கற் கண்டு 1 கி் ரூ 300/

114)நாட்டு சர்க்கரை 1 கி ரூ 65/

115) கூந்தல் பனங்கற் கண்டு 1 கி ரூ 800/

116) சில்லு் கருப்பட்டி 1 கி 300/

117) சிகப்பு அவல் 1 கி ரூ 65/

118) முழு பொரி கடலை 1 கி ரூ 150/

119) நிலக்கடலை 1 கி ரூ 120/

120) எள் 1 கி ரூ 100/

121) சீமை அத்திப் பழம் 1 கி ரூ 900/

122) தேன் நெல்லி 1 கி ரூ 240/

123) குளுக்கோஸ் நெல்லி 1 கி ரூ 300/

124) வெள்ளரி விதை 1 கி ரூ 400/

125) பூசனி விதை 1 கி ரூ 500/

126) பாதாம் பருப்பு 1 கி ரூ 950/

127) பிஸ்தா 1 கி ரூ 1800/

128) முழு முந்திரி 1 கி ரூ 950/

129) சாரைப் பருப்பு 1 கி ரூ 1000/

130) அக்ரூட் 1 கி ரூ 1000/

131)இந்துப்பு 1 கி ரூ 80/

132) சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ் 1 கி ரூ 100/

133) சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ்(டயாபடிக்) 1 கி ரூ 100/

134) கொள்ளு சப்பாத்தி மிக்ஸ் 1 கி ரூ 100/

135)சுண்டை வற்றல் 1 கி ரூ 250/

136) மணத்தக்காளி வற்றல் 1 கி ரூ 290/

137) மிதுக்க வற்றல் 1 கி ரூ 200/

138) வென்டை வற்றல் 1 கி ரூ 130/

139) பாகற்காய் வற்றல் 1 கி ரூ 210/

140) மிளகாய் வற்றல் 1 கி ரூ 160/

141) சர்க்கரை நோய்க்கான மூலிகைக் கசாயம் 1 கி ரூ 500/

142) சர்க்கரை நோய்க்கான இயற்கை உணவு 1 கி ரூ 240/

143) ரோஜாப்பூ கசாயம் 1 கி ரூ 500/

144) நாற்கீரை சத்து மாவு 1 கி ரூ 200/

145) முருங்கை கீரை கஞ்சி மாவு 1 கி ரூ 200/

146) பிரண்டை சத்து மாவு 1 கி ரூ 240/

147) அஸ்வா சத்து மாவு 1 கி ரூ 600/

148) நாயுருவி ஊட்டச் சத்து மாவு    1 கி ரூ 240/

149) தினை ஊட்டச் சத்து மாவு 1 கி ரூ 240/

150) பார்லி கஞ்சி மிக்ஸ் 1 கி ரூ 200/

151) தினை உருண்டை

152) கம்பு உருண்டை

153) கேழ்வரகு உருண்டை

154) சோள உருண்டை

155) வரகு உருண்டை

156) குதிரைவாலி உருண்டை

157) சாமை உருண்டை

158) பனிவரகு உருண்டை

159) கொள்ளு உருண்டை

160) கருப்பு உளுந்து உருண்டை

161) பாசிபயறு உருண்டை

162) முழு பொரிகடலை உருண்டை

163) சிகப்பு அவல் உருண்டை

164) சிகப்பரிசி உருண்டை

165) கோதுமை உருண்டை

உருண்டைகள் அனைத்தும் 5 நம்பர்ஸ் 1 box ரூ 40/

இந்த மதிப்பு கூட்டுதல் வேலை செய்வதால் கிராம்ப் புற விவசாயப் பெண்கள் ஒரு 10 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கறது

நண்பர்களே நீங்களும் உங்கள் மாவட்டங்களில் இது போன்று செய்ய முடியுமா என்று யோசித்து பாருங்கள்.
ஆலோசனை தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள்

இயற்கை அங்காடி நடத்துபவர்கள், இயற்கை அங்காடி புதிதாய் தொடங்க நினைப்பவர்கள், சிறுதானிய வாரச் சந்தை தொடங்க நினைப்பவர்கள் ஆலோசனை களுக்கு தொடர்பு கொள்ளவும்

மருத்துவர் விக்டர்

வளர்பிறை பாரம்பரிய உணவுகள்
மரபுவழி விதைகளின் வாழ்வியல் கூட்டமைப்பு

9443563853

அனைத்து விவசாய சொந்தங்களுக்கும் மீண்டுமாய் பசுமை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த புதிய பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்

166) கொடம்புளி 1 கி ரூ 400/

167) கருப்பு திராட்சை( விதை உள்ளது) 1 கி ரூ 450/

168) மாப்பிள்ளை சம்பா அரிசி 1 கி ரூ 90/

169) குழி வெடிச்சான் சம்பா அரிசி 1 கி ரூ 80/bv

170) சண்டிகார் அரிசி 1 கி ரூ 80/

171) ஆளி விதை 1 கி ரூ 200/

172) பார்லி அரிசி 1 கி ரூ 65/

173) எள் உருண்டை

174) நிலக் கடலை உருண்டை

175) பொரிகடலை உருண்டை

இந்த மூன்று உருண்டைகளும் எட்டு எண்ணம் standing pouch கவரில் வரும்

1 பாக்கெட்டின் விலை ரூ 20/. Mrp RS 30/

நன்றி

வளர்பிறை பாரம்பரிய உணவுகள்
41,7வது தெரு,ஜவஹர் நகர்,
திருமங்கலம்
மதுரை மாவட்டம்
9443563853

176) உளுந்தப் பருப்பு 1 கி  ரூ. 160/

177) துவரம் பருப்பு 1 கி  ரூ. 160/

178) பாசிப் பருப்பு 1 கி ரூ  120/

179) கடலைப் பருப்பு 1 கி ரூ 140/

180) மொச்சை பருப்பு 1 கி ரூ 95/

வளர்பிறை பாரம்பரிய உணவுகள்
திருமங்கலம்
9443563853

வடகங்கள்

181) அரிசி முறுக்கு வடகம்.  1 கிலோ ரூ 200/

182) சோயா குழம்பு வடாம் 1கிலோ ரூ 200/

183) சிகப்பு அவல் வடகம் 1கிலோ ரூ 200/

184) வேப்பம் பூ வடகம் 1கிலோ ரூ 200/

185) புதினா அரிசி வடகம் 1கிலோ ரூ 200/

186) சாம்பார் வடகம் 1கிலோ ரூ 200/

187) வெங்காய வடகம் 1கிலோ ரூ 200/

188) பேரீட்சை வடகம் 1கிலோ ரூ 250/

189) வாழைப் பூ வடகம் 1கிலோ ரூ 250/

190) கருப்பு உளுந்து வடகம் 1 கிலோ ரூ 250/

எல்லா வடகங்களும் 100 கிராம் பாக்கெட்டுகளில் வரும்

191) மஞ்சள் 1கிலோ ரூ 210/

192) மிளகாய் 1கிலோ ரூ160/

193) நாட்டுமல்லி 1கிலோ  ரூ 140/

194) கடுகு 1கிலோ ரூ 130/

195) வெந்தயம் 1கிலோ ரூ130/

196) மிளகு 1 கிலோ ரூ1000/

197) சீரகம் 1கிலோ ரூ 300/

198) சோம்பு 1கிலோ ரூ 230

199) புளி 1கிலோ ரூ 120/

200) கசகசா 1 கிலோ ரூ550/

           தொடரும்

நாட்டு விதைகள்

10-/ ரூபாய் மட்டும் ஒரு பாக்கெட்.கீழ்கண்ட நாட்டு விதைகள் பாக்கெட்.
தொடர்புக்கு 8110037898.

கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.

கத்தரி               
பச்சை கத்தரி           
ஊதாகத்தரி        
முள் கத்தரி       
வெள்ளை கத்தரி 
மனப்பாறை கத்தரி   
மிளகாய்   
தக்காளி           
வெண்டை        
கொத்தவரை  
பீன்ஸ்                 
செடி அவரை    
வெ .முள்ளங்கி
சி. முள்ளங்கி  
கேரட்                 
பீட்ரூட்               
வெங்காயம்    
அகத்திகீரை    
அரைக்கீரை    
சிறு கீரை         
சி.தண்டு கீரை
ப.தண்டு கீரை
பருப்பு கீரை    
பச்சை புளிச்சைக் கீரை
சிகப்பு புளிச்சைக் கீரை
பாலக்கீரை     
மணத்தக்காளி கீரை
கொடி அவரை 
நீட்டபுடலை 
பாகல்       
பீர்க்கன்   
பூசனிக்காய்
தர்பூசணி
நீட்டசுரை   
குண்டு சுரை
வெள்ளரி
பட்டை அவரை
குட்டை புடலங்காய்
தமட்டை   
கொடி காராமணி 
செடி காராமணி  
பப்பாளி     
காளிபிளவர் 
முட்டைக்கோசு 
முருங்கை கீரை
வெந்தய கீரை  
கொத்தமல்லி கீரை

மேற்கண்ட நாட்டு விதைகள் கிடைக்கும்.
தொடர்புக்கு
கமல்  8110037898 மேட்டூர் டேம்

Thursday, January 18, 2018

சாப்பிடவேண்டிய உணவுகள்

தினமும் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்

நம்முடைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டுமென்று பால், முட்டை, கீரை போன்ற கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் பொட்டாசியம், மக்னீசியம், ஜிங்க் போன்றவற்றைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

ஆனால் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை நம்முடைய உடலுக்கு அவசியம் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் ஆகும். அவை நிறைந்துள்ள உணவுகளை நம்முடைய தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. அப்படி என்னென்ன உணவுகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எவற்றை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

🔘 பழங்களிலேயே வேறு எந்த பழத்துக்கும் இல்லாத சிறப்பு வாழைப்பழத்துக்கு உண்டு. ஆம் வாழைப்பழம் மட்டும் தான் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. அதோடு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் இருந்து மட்டுமே நமக்கு 422 மில்லிகிராம் வரையிலும் பொட்டாசியம் கிடைக்கிறது.

🔘 சர்க்கரை வள்ளிக்கிழங்கை பொதுவாக எல்லோருமே விரும்பிச் சாப்பிடுவதுண்டு. ஆனால் அடிக்கடி சாப்பிடுவதில்லை. அதற்கு இன்னொரு காரணம் அதுவும் சில சீசன்களில் மட்டுமே கிடைக்கும். நாம் வெறும் சுவைக்காக மட்டுமே சாப்பிடுகிற சர்க்கரை வள்ளிக்கிழங்கில் முழுக்க முழுக்க புரதமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. ஒரேயொரு சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மட்டுமே நமக்கு 542 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.

🔘 பட்டர் ஃபுரூட்டை நமக்குக் கிடைத்த அதிசயப் பழம் என்று கூட சொல்லலாம். நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம் என அத்தனை சத்துக்களும் இதில் உள்ளன. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்து டயட்டில் இருப்பவர்கள் தினமும் தாராளமாக பட்டர் ஃபுரூட்டை நிறையவே எடுத்துக் கொள்ளலாம். பாதி பழத்திலேயே நமக்கு 487 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது.

🔘 பீன்ஸ் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, வெள்ளை நிற பீன்ஸ் விதைகளில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. அரை கப் வெள்ளை பீன்ஸில் கிட்டதட்ட 502 மில்லிகிராம் பொட்டாசியம்  நமக்குக் கிடைக்கிறது. 

🔘 தயிர் மிகச்சிறந்த, ஆரோக்கியமான சிற்றுண்டிகளுள் ஒன்று. சாதாரண தயிரைவிடவும் சிறந்த உணவு இருக்க முடியாது. அதனால் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நம்முடைய உணவோடு தாராளமாக தயிரைச் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் 8 அவுன்ஸ் தயிருக்குள்ளேயே நமக்கு 579 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது. தயிரில் பொட்டாசியம் மட்டுமல்லாது புரதம், கால்சியம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

🔘 கீரையில் வெறுமனே வைட்டமின் ஏ மட்டும் இருக்கிறதென நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கீரையில் தாராளமாக பொட்டாசியம் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக, ஸ்பின்னாக்கில் மற்ற எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத அளவுக்கு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. ஒரு கப் ஸ்பின்னாக் கீரையிலிருந்து மட்டுமே நமக்கு 839 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கிறது.

அதனால் இந்த உணவுகளை நாம் நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.