Sunday, June 29, 2014

கிரைண்டரில் மாவரைக்கும் போது கவனிக்க வேண்டியவை

கிரைண்டரில் மாவரைக்கும் போது கவனிக்க வேண்டியவை
முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனால், ஒரே நேரத்தில் அதிகமான தானியத்தை போட்டு கிரைண்டர் ஓவர் லோடு ஆவதைத் தடுக்கலாம்.
கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைப்பதால் உளுந்தும் கணிசமாக இருக்கும். உளுந்து மாவு கல்லோடு வீணாவது தவிர்க்கப்படும். வழவழப்பான கிரைண்டரை கழுவுவதில் இருந்தும் தப்பிக்கலாம்.
கிரைண்டருக்கு என இருக்கும் அளவுக்கு தானியத்தைப் போடுங்கள். அதை விட சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ போடலாம். ஆனால் மிகவும் குறைவாகவும், மிகவும் அதிகமாகவோ போட வேண்டாம்.
******************************************************************
******************************************************************

கிரைண்டரை கையாளும் வழிகள்
உரலுக்கு பதிலாக மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் மின் சாதனம் கிரைண்டர். பொதுவாக கிரைண்டரை தக்க விதத்தில் பயன்படுத்தினால் அது பல காலம் பழுதின்றி பயன்படும்.
அந்த வகையில், கிரைண்டரில் அதற்கு தக்க அளவுக்கு பொருட்களைப் போட்டு அரைக்க வேண்டும். கூடுதலாகவோ, குறைவாக பொருட்களைப் போட்டு அரைப்பதால் கூட கிரைண்டர் விரைவில் தேய்வு அடையும்.
கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை சுற்றும் டிரம்மில் படாதபடியும், ஆட்டும் கல்லில் படாதபடியும் சிறிது இடைவெளி விட்டு இருந்தால் பலகை விரைவில் தேய்வதை தடுக்கலாம். மேலும் தள்ளுப்பலகை இறுக்கமாக மாட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டல், மாவு எளிதாக அரைபடும்.
கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் அதிக நாட்கள் பயன்படுத்துவதால் வழவழப்பாக மாறும். அப்போது, இரண்டுக் கல்லிலும் குழிபோடும் ஆட்களைக் கொண்டு கொத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் கிரைண்டர் குழவிக் கல்லை கழுவும் போது அதன் கைப்பிடியில் உள்ள சிவப்பு வாசரின் உள்ளே தண்ணீர் சென்று விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், விரைவில் கைப்பிடி தனியாகக் கழன்றுவிடும்.

No comments:

Post a Comment