Saturday, June 28, 2014

நலம் தரும் நாவல் பழம்

நலம் தரும் நாவல் பழம்


“ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.

நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.

“கால்சியம், எலும்பு-களுக்கு உறுதியைக் கொடுப்-பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்திய-டையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள ‘ஜம்போலினின்’ எனும் ‘குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லா-மல் மருந்தாக பத்திய--மிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

Source Vikatan

No comments:

Post a Comment