Saturday, June 28, 2014

எந்தக் கீரையில் என்ன சத்து?


பொன்னாங்கன்னி / அரைக்கீரை / மணத்தக்காளிக்கீரை


பொன்னாங்கன்னி

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓரளவு உண்டு. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ஃப்ளோமின் நிறைந்தது. மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், சல்பர் ஆகியவை ஓரளவு உண்டு. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் மற்றும் கலோரி ஓரளவு உண்டு. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.

அரைக்கீரை

கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம். ஓரளவு பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச் சத்து இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் கலோரி மிகக் குறைந்த அளவே இருந்தாலும் இது எல்லோருக்கும் ஏற்றது. அரைக்கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம்.

மணத்தக்காளிக்கீரை

ஓரளவுப் புரதச் சத்தும் இரும்பு, கால்சியம், நார்ச் சத்துக்களும் உண்டு. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், வாய்ப் புண்ணைக் குணமாக்கும்

Source Vikatan

No comments:

Post a Comment