Thursday, January 3, 2019

இட்லி #பொடி

#செட்டிநாடு #இட்லி #பொடி

செட்டிநாடு சமையல் என்றாலே அனைவர் நாக்கிலும் நீர் ஊரும். அதிலே இந்த இட்லி பொடியும் ஒன்று.

இந்த இட்லி பொடி பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும்

#தேவையான #பொருட்கள்:

உளுந்து -1/2 கப்

கடலைப்பருப்பு -1/2 கப்

வரமிளகாய் – 1 கப்

கருவேப்பிலை – 1 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

பெருங்காயம் – தேவையான அளவு

#செய்முறை:

முதலில் கடாயில்1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.

கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதையும் ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும் .

கடாயில்1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதையும் ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும் .

கடாயில்1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதையும் ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.

இவை அனைத்தும் நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு அரைக்கவும்..

அவற்றுடன் தேவையான அளவு உப்பும், பெருங்காயமும் சேர்த்து அரைக்கவும்.

இப்பொழுது சுவையான இட்லி பொடி தயார்.

இந்த பொடியுடன் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும். மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment