Tuesday, January 22, 2019

பரோட்டா சால்னா | Parotta Salna

பரோட்டா சால்னா | Parotta Salna

பரோட்டா சால்னா, ரொம்ப சுவையான மற்றும் சீக்கரம் செய்ய கூடிய ஒரு வெஜ் சால்னா. இந்த சால்னாவின் சுவை  தென் தமிழகத்தில் பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னா போலவே இருக்கும்.உங்களுக்கும் கடையில் கிடைக்கும் சால்னா பிடிக்குமென்றால் கண்டிப்பாக இத ட்ரை பண்ணி பாருங்க,ரொம்ப சூப்பரா இருக்கும்.  பரோட்டா-க்கு மட்டுமல்ல இட்லி ,தோசைக்கு கூட அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பரோட்டா சால்னா | Parotta Salna
Preparation Time : 5 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெங்காயம்(சிறியது ) - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பட்டை - 1 அங்குல துண்டு
கிராம்பு  - 2
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 & 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
கொத்தமல்லி இலை  - சிறுதளவு
எண்ணெய்  - 2 டீஸ்பூன்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
வேர்க்கடலை(வறுத்து  & தோல் நீக்கியது ) - 3 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 4

செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய்  மற்றும் தக்காளி-யை பொடியாக அரிந்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெயை  சூடு பண்ணி பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்,

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.கூடவே பச்சை மிளகாய் கறிவேப்பில்லை மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வெங்காயம் நன்கு வதக்கும் வரை வதக்கி கொள்ளவும்.

அடுத்து தக்காளி மற்றும் மசாலா பொடிகளை (மஞ்சள்,மிளகாய்,கொத்தமல்லி) சேர்த்து வதக்கி கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.அரைத்த விழுதை வெங்காய தக்காளி மசாலாவில் சேர்த்து கூடவே தேவையானளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.பின் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

கடைசியாக கரம் மசாலா சேர்த்து,எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான பரோட்டா சால்னா தயார்.

குறிப்புக்கள்:

சால்னா கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நல்லாயிருக்கும், அதனால் தண்ணீர் கொஞ்சம் கூடவே சேர்த்து கொள்ளவும்.

உங்கள் சுவைக்கேற்ப கரம் சேர்த்து கொள்ளவும்.

வேர்க்கடலை பச்சை வாசம் போக கொஞ்சம் நேரமாகும்,அதனால் மற்ற குழம்பை விட இதை கூட கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

No comments:

Post a Comment