Monday, January 14, 2019

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாண

தலப்பாக்கட்டு  சிக்கன்  பிரியாணி செய்வது எப்படி...???

சிக்கன்  - 1 கிலோ

பாசுமதி  அரிசி.- 1 கிலோ

பெரிய வெங்காயம் – 6

தக்காளி  - 5

பச்சை மிளகாய் – 6

மிளகாய்த்தூள்  - 2 டேபிள் ஸ்பூன்

கரம்மசாலாத்தூள்  - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை  - 2 கிராம்பு , ஏலக்காய்  - தலா  - 6

சீரகம்  - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்

முந்திரி பருப்பு  - 15

கெட்டியான தேங்காய்ப்பால்  -  ½ கப்

எலுமிச்சம் பழம்  - 2

தயிர் – ½ கப்

எண்ணெய் – 100 கிராம்

நெய் – 100 கிராம்

புதினா  , கொத்தமல்லி – தலா 1 கப்

உப்பு  - தேவையான அளவு

பிரியாணி அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து , ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறவைக்க வேண்டும். வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நீளமாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறி வைக்க வேண்டும்.

ஒரு அடிகனமான அகலமான பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் வெங்காயத்தையும் பொன்னிறமாக முறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே நெய்யுடன் எண்ணெயும் ஊற்றி காய்ந்ததும் சீரகம் , பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து வதக்கி , மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் தயிர் , தக்காளி , உப்பு , பச்சை மிளகாய் , கரம்மசாலாத்தூள் , மிளகாய்த்தூள் , சிக்கன் துண்டுகளை சேர்த்து , மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் வதக்கி , தேங்காய்ப்பால் ஊற்றி வேகவைக்க வேண்டும்.

சிக்கன் வெந்து கிரேவி பதம் வந்ததும் எலுமிச்சை சாறு கலந்து , நறுக்கிய புதினா,கொத்தமல்லி சேர்த்துக் கிளறி , சிக்கன் கலவையோடு வேகவைத்த  சாதத்தைக் கலந்து ,

வறுத்த முந்திரி பருப்பு , வெங்காயம் ஆகியவற்றையும் கலந்து, பிரியாணியின் மேலே சிறிதளவு புதினா , கொத்தமல்லி , எலுமிச்சை சாறு , நெய் சிறிதளவு விட்டு பாத்திரத்தை மூடி , தம் போட்டு இருபது  நிமிடங்கள் அப்படியே வைத்து  பின்னர் கிளறி வெங்காயப் பச்சடியுடன் பரிமாறலாம்.


No comments:

Post a Comment