Wednesday, April 10, 2019

கேழ்வரகு இடியாப்பம

*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*_

*📆10-04-2019📆*

*🍿 கேழ்வரகு இடியாப்பம்🍕*

*🍱தேவையான பொருட்கள்*

🥙கேழ்வரகு மாவு1 கப்

🥙கோதுமை மாவு1 கப்

🥙கடலை மாவுகால் கப்

🥙உப்புதேவைக்கேற்ப

🥙சுடு தண்ணீர்மாவு பிசைய

*🍴செய்முறை*

  🍲கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்க வேண்டும். ஆவியில் கோதுமை மாவை வேக வைக்க வேண்டும்.

 🍲 வறுத்த மாவுகளோடு ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்.

 🍲 இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.

🍲இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காய்கறி மசாலா.

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*_

*📆10-04-2019📆*

*🍿கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்💊*

🍟தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

🍟இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.

🍟கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.

*◆◇◆◇◆வானவில்◇◆◇◆◇*

No comments:

Post a Comment