Saturday, April 13, 2019

பொன்னாங்கண்ணிக்கீரை

*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*

*📆14-04-2019📆*

*🥬ருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி🥯*

*🍱தேவையானப் பொருட்கள்*

🥗கோதுமை மாவு - 500 கிராம்

🥗பொன்னாங்கண்ணிக்கீரை - 2 கப் (பொடியாக நறுக்கியது)

🥗வெண்ணெய் - 4 டீஸ்பு+ன்

🥗வெள்ளை எள் - 2 டீஸ்பு+ன்

🥗ஓமம் - 2 டீஸ்பு+ன்

🥗எண்ணெய் - தேவையான அளவு

🥗உப்பு - தேவையான அளவு

🥗தண்ணீர் - தேவையான அளவு

*🍴செய்முறை*

🍘 முதலில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் பொன்னாங்கண்ணிக்கீரையில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி வதக்கி, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

🍘 பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

🍘 பிறகு, பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.

🍘 கடைசியாக, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சு+டானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுத்தால் வித்தியாசமான சுவையில் பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி தயார்!!!

*🕹குறிப்பு*

🥙பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தியில் இஞ்சி பேஸ்ட், பு+ண்டு பேஸ்ட் சேர்த்துப் பிசைந்தும் தயாரிக்கலாம். இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதற்கு சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்

*════*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆14-04-2019📆*

*🥬பொன்னாங்கன்னி கீரையின் மருத்துவப் பயன்கள்💊*

🥬மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

🥬பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

🥬வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலும், தோலும் பளபளவென்று மாறிவிடும்.

🥬பொன்னாங்கன்னி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

🥬அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

🥬பொன்னாங்கன்னி கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

*════♢வானவில்♢════*

No comments:

Post a Comment