Saturday, July 20, 2019

அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகை

தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகைகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அதில் ஒன்று தான் TRUST (Tamilnadu Rural Students Talent Search Examination) டிரஸ்ட் என்ற தேர்வு.

இந்த தேர்வை யார் எழுதலாம்: 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.

எதற்காக இந்த தேர்வு: இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ₹1000 (ஆயிரம்) உதவித்தொகை பெறலாம்.

எப்படி தேர்வு செய்வார்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக தேர்வெழுதிய 50 மாணவர்கள், 50 மாணவிகள் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வெழுத நிபந்தனைகள் என்ன :

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தேர்வெழுதலாம்.

கிராமப்புற, நகர பஞ்சாயத்து பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிக்க என்ன தேவை:

கட்டணம் -₹ 10 மட்டுமே

பெற்றோர் ஆண்டு
வருமானம் ₹ 1,00,000(ஒரு லட்சம்) மிகாமல் இருக்க வேண்டும்.
(வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும்)

எப்படி விண்ணப்பிப்பது:

தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.  நிரப்பிய விண்ணப்பங்களை பள்ளியிலேயே கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 - 07 - 2019 (வியாழன்)

தேர்வு நடைபெறும் நாள்: 25 - 08 - 2019 (ஞாயிறு)

இறைவனின் அருளால்... 

என்றும் கல்விப் பணியில்

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் மாணவர் அணி

#TNTJSW
#TRUST_Examination

https://m.facebook.com/story.php?story_fbid=2116655205107492&id=207212969385068

No comments:

Post a Comment