Saturday, July 13, 2019

சிந்தனை அரும்புகள

*ஏ.ஆா்.தாஹாவின்*
*சிந்தனை அரும்புகள்*
--------------------------------------------------------------
*வரம்பு மீறலும்......விழி பிதுங்களும்*
---------------------------------------------------------------
*மனிதன் ஆடம்பரமாக வாழ ஆசைப்*
படுகிறான்.தன்னிடம் தகுதியிருக்கிறதோ
இல்லையோ மற்றவர்களைப் போன்று
தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறான்,
அல்லது தானும் அவர்கள் போல் வேஷம் போடவாவது முயல்கிறான்.

*நன்கு உழைத்து முன்னேறி ரொக்கம்*
கொடுத்து பொருள் வாங்குவது ஒருபுறம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தவணை முறையில் இரு சக்கர வாகனம் வீட்டின் முன்னே வந்து நிற்பது மற்றெரு புறம்.சில ஆயிரங்களை அள்ளி வீசினால் நான்கு
சக்கர வாகனம் (கார்) கூட நமது வீட்டு வாயிலில் வந்து நின்று அலங்கரிக்கிறது.

*அதன்பின்தான் பிரச்சினைகளும்*,
தன்மான இழப்புகளும் ஆரம்பிக்கிறது.
விசுக்...விசுக்கென்று இரண்டு மாத
தவணைகள் அடைக்கப்படும். மூன்றாவது
தவணைக்கு மனைவியின் நகை வங்கிக்
கோ, விற்பனைக்கோ, அல்லது அடுத்த
வீட்டில் நகையை வைத்து கடன் கேட்டோ
அந்த தவணை கட்டப்படும்.அடுத்தடுத்த
தவணைக்கு விழி பிதுங்கி நிற்கப்படும்.
ஐந்தாவது மாதம் கம்பெனிக்காரன் வீட்டு
வாசலில் வந்து நின்று கத்துவதும்,அதைத்
தொடர்ந்து வாகனத்தை திருப்பி எடுத்துச்
செல்லும் நடவடிக்கைகள் நடக்கும்.

*எல்லோராலும் ரொக்கம் கொடுத்து*
வாங்க முடியாதுதான்.ஆனால் தகுதிக்கு
மீறி ஆசைப்பட்டு வீட்டுப் பொருட்களை
தவணை முறையில் வாங்கியதின்பின்
தடுமாறுவதுதான் நமது பிரச்சினையே.
தவணைப் பணம் கட்ட வழியின்றி விழி
பிதுங்கி தவித்து நிற்பதில், ஆண்களை
விட பெண்களே அதிகம் எனலாம்.

*அடியா...ஆயிரம் ரூபாய் கொடுத்தால்*
போதுமாம். ஐஸ் பெட்டி, குளிர் சாதனப்
பெட்டி (ஏ.ஸி) எல்லாம் தாரானாம் என்று
பெண்கள் மத்தியில் பரப்புரைகள்.நம்மை
அறியாமலே அதில் நாம் வீழும் சூழலும்,
வட்டியின் பிடியில் நம்மை மூழ்க வைக்கும் அபாயமும் அங்கே ஏற்படுகிறது.

*வீட்டுக்குத் தேவையோ இல்லையோ*
அடுத்த வீட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்றால் அதே போல் தாமும் வாங்கியே ஆகனும் என்ற பெண்களின் பிடிவாத
குணம்,கணவனை கடனாளியாக்குகிறது.
ரொக்கம் கொடுத்து வாங்க வழி இல்லா விட்டாலும் தவணை முறையிலாவது வாங்குவது கடமை போல் ஆகி விட்டது.

*கணவனின் வருமானத்தை மனதில்* கொள்வதில்லை. உன்னை விட நான்
ஒன்றும் எதிலும் குறைந்தவளல்ல
என்பதை அடுத்த வீட்டுக்காரிக்கு எடுத்து காட்டுவதிலேயே குறி. தவணைக் கட்டத்
தவறும் போது, வியாபாரி வீட்டு வாசலில்
வந்து கத்துகிறான், சில சமயம் பொரு
ளை அவன் திரும்பப் பிடுங்கிக் கொண்டு
செல்கிறான்.அப்போது நாம் கூனிக் குறுகி
அவமானப்பட்டு நிற்கிறோம்.

*தனது தகுதி, வருமானம், இவைகளை* கணக்கிடாமல், மற்றவர்களைப் பார்த்து
நாமும் அது போல் வாழ நினைப்பது,
நமக்கு அவமானத்தைத்தான் தேடித்
தரும் என்பதை உணர மறுக்கிறோம்.
எதற்காக இந்த பேராசையும், பிறரைப்
போல வாழ நினைக்கும் பெருமையும்.?

*அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும்*
எந்த அளவு தந்துள்ளானோ அதைக்
கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தி,
அந்த வரையறைக்குள் வாழ முற்படு வோமேயானால், நமக்கு ஒரு சிரமமு
மில்லை. அதை மீறி நாம் வழி் மாறும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது.

*பிள்ளைகளை வளர்க்கும் போதே*
வீட்டின் சிரமங்களையும், கஷ்டங்களை
யும், தந்தை நமக்காக படும் பாட்டையும்
பிள்ளைகள் உணரும் வண்ணம் வளர்க்
கனும்.பிற்காலத்தில் அவர்கள் நல்ல
பொறுப்பான பிள்ளைகளாக வளர அது
ஏதுவாக அமையும். அதல்லாமல் பிள்ளை
கள் கேட்பதையெல்லாம் கடன் பட்டாவது வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி விட்டோ மென்றால், மக்களுக்கு நாம் படும் கஷ்டம் கண்டிப்பாக புரியாது.

*ஆகவே நமது வருவாய் அறிந்து*
செலவு செய்து குடும்பத்தை வழி நடத்து
வதும், பெருமைக்காக தவணை என்ற படுகுழியில் வீழ்ந்து கண்டதை வாங்கி கடனின் பிடியில் சிக்கி விடாமலும் வாழ,
நாம் முயற்சிப்போமாக.

*ஏ.ஆா்.தாஹா(ART)14-09-2019*

No comments:

Post a Comment