Showing posts with label Govt. Show all posts
Showing posts with label Govt. Show all posts

Wednesday, October 30, 2019

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

🔅ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

🔰 *வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?*

🔅ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

🔰 *வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?*

🔅நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

🔰 *எங்கே விண்ணப்பிப்பது?*

🔅வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

🔰 *என்னென்ன ஆவணங்கள் தேவை?*
🔅இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் 
🔅வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்
🔅இறப்பு சான்றிதழ்
🔅ஏதேனும் ஒரு அடையாள அட்டை
🔅குடும்ப அட்டை (அ) முகவரி சான்று

🔰 *எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?*

🔅ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

🔅ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 
🔅அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.

🔅ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

🔰 *விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?*

🔅விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.

🔰 *எப்போது மறுக்கப்படும்?*

🔅இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம்.

🔅 நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

🔅எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். 

🔅இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

🔰 *ஒருவர் காணாமல் போயிருந்தால்..?*

🔅ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்..

🔰 *வாரிசு சான்றிதழ் பெற இறந்தவரது ஆதார் அட்டையும் அவசியம்* எனவும், விண்ணப்பிப்பவர் மற்றும் வாரிசுகளும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் தமிழக அரசு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

🔰 *வாரிசு சான்றிதழ் பற்றிய பொதுவான தகவல்கள்*

🔅விண்ணப்பங்களுடன் அரசு கட்டணமாக ரூ. 60 செலுத்தப்பட வேண்டும்.

🔅விண்ணப்பங்கள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

🔅 பொதுசேவை மையத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் வழியாக 15 நாள்களுக்குள் விண்ணப்பித்தவருக்கு கிடைக்கும்.

🔅சான்றிதழ்களை பொதுசேவை மையங்கள் மூலமாக குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரப் பெற்றவுடன் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔅இறந்தவருக்கு ஒன்றுக்கு மேல் மனைவி அல்லது கணவர் இருந்தாலோ, இறந்தவரின் சொத்துகள் சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தாலோ, இறந்தவராக சொல்லப்படும் நபர் ஏழு ஆண்டுகள் காணாமல் போயிருந்து அல்லது குடும்பத்தில் இருந்து தள்ளியிருப்பவராக இருந்தாலோ, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் விஷயமாக இருந்தாலோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1925-இன்
படியோ இருந்தால் வாரிசு சான்றிதழை குறிப்பிட்ட நீதிமன்றங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். வட்டாட்சியர் அளிக்கக் கூடாது.....

Monday, October 7, 2019

வார்டு திருத்தம்*

[10/7, 11:11 AM] 🅰LEEM☣: 🔵🔴 *பொது அறிவிப்பு* 🔴🔵

*அய்யம்பேட்டை பேரூரட்சிக்கு உட்பட்ட வாக்காளர்  2019 தேர்தல் வார்டு திருத்தம்*

*1வது வார்டு*
*2வது வார்டு*
*3வது வார்டு*
*4வது வார்டு*

*5வது வார்டு*
ஹாஜியார் தெரு, ஜாகிர் உசேன் தெரு, சுல்தானியா 1,2 தெரு, மைதீன் நகர் பாக்கு தோப்பு, சாலைத் தெரு, கொத்தனார் தெரு, உப்புகடை சந்து.

*6வது வார்டு*
ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஹைரோடு, பாவாஜி நகர், மைதீன் நகர், ரயில்வே பீடர் ரோடு, S.K காடர்ன் 1 & 2, A.A.K நகர் 1 & 2, எம்சன் சாலை, கனி நகர், சல்மா நகர்.

*7வது வார்டு*
கருபட்டியான் குளம், ஈயக்கார ஜானாத் தெரு, லப்பா ராஜா தெரு, காதிரிய தெரு, K.J.A நகர், அல் மதினா தெரு,  மேல வாணியாத் தெரு, கோமுட்டி ததெரு, செட்டித் தெரு, ஜமீல் நகர், கிரவுன் நகர், ஈயக்கார சபுரா தெரு, JHCA அப்துல் சமது நகர் 1,2,3,5வது குறுக்கு தெரு, கம்பளி அப்துல் ஹமீது நகர், DM நகர்.

*8வது வார்டு*
உமர் தெரு 1,2, அபுபக்கர் தெரு, அம்பலகாரா தெரு, மேலப்பட்டை தெரு, எருத்துகாரா தெரு, சின்னத்தைகால் தெரு.

*9வது வார்டு*
*10வது வார்டு*
*11வது வார்டு*

*12து வார்டு*
நேரு நகர் வடக்கு 1,2,3,4,5,6 தெரு, நேரு நகர் தெற்கு 1,2,3 தெரு.

*13வது வார்டு*
பாரதிதாசன் தெரு, ஆசாத் நகர் 1,2,3 தெரு, KM கமாலியா நகர், ராஜா நகர்.

*14வது வார்டு*
ரிஜ்வான் நகர், ரோஸ்லின் நகர், ராஜீவ் காந்தி நகர் 1,2,3, உலக நாதன் தெரு, பசுபதி கோயில் ரயிலடி தெரு, சீனிவாச நகர், சூலமங்கல சாலை.

*15வது வார்டு*
ரயிலடி சானார தெரு, ரயிலடி உச்சி மேடு, வாணக்கார ஆதம் நகர், வாணக்கார அஹமது நகர், வாலன் ஆதம் நகர், KTR நகர் 1,2, EMS நகர், அரியமங்கை ரோடு, இன்ஜினியர் நகர், SPJ நகர் 1,2, SPJ முபாரக் நகர், ORJ நகர், தானிஸ் நகர், ரகுமான் நகர், கோம்பை இப்ராஹிம் நகர், ஹிசாம் நகர், பீர்பகாவூதின் தெரு.

http://www.tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php

*பொது நலன் கருதி வெளியிடுவர்*

*பாசமலர் வெல்ஃபேர் அசோசியேசன்*

88 708 808 28

www.paasamalar.in

*துபை-சவூதி-குவைத்-புருனை மண்டலங்கள்*
[10/7, 11:11 AM] 🅰LEEM☣: அய்யம்பேட்டையில் வார்டுகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய வார்டு நம்பரில் உங்களது வாக்காளர் பெயர் வந்துள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு *ஸ்மார்ட் ரேஷன் கார்டு அவசியம்* அதிலுள்ள முகவரியின் படி சரியான வார்டில் உங்களது வாக்காளர் அட்டையை இணைத்து விடுவார்கள். அலுவலர்கள் பகுதி வாரியாக நேரடியாக வீடுகளுக்கு வந்து செய்து வருகிறார்கள் என்று தகவல்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டையும் வாக்காளர் அட்டையையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். வரும்போது அலுவலர்கள் கதை கொடுத்து சரியான முறையில் அவர்கள் பதிவு செய்தார்களா என்பதையும் அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பின்பு தேவையில்லாமல் நாம் அலைவதை தவிர்க்கலாம். - வெளியீடு: நம் கடமை 07-10-2019.

Sunday, September 29, 2019

வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி

வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி? விரிவான விளக்கம்!!!

வெளியீடு:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி.

Community, Income, and Residential Certificates. சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிகாரி அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.

தற்போது உள்ள நடைமுறையில் 2 விதத்தில் இந்த சான்றிதழ்களை வாங்கலாம்
1. E.Seva நடைமுறை(புதியது)

2. அரசு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சமர்பித்து சிலநாட்களில் சான்றிதழ்கள் வாங்குதல்(பழைய நடைமுறை)

*E-Sevai முறை*

மேற்கண்ட மூன்று சான்றிதழ்களையும் வாங்குவதற்கு ஏறக்குறைய ஒரே மாதிரியான நடைமுறை தான்

🛡நீங்கள் இ சேவை மையத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் ஆவணங்கள்

1. குடும்ப அட்டை
2. ஆதார் கார்டு
3. போட்டோ(பாஸ்போட் சைஸ்)
4. சாதி சான்றிதழ்

🔰ஒருவேளை உங்களுக்கு ஜாதி சான்றிதழ் எடுக்க வேண்டும் என்றால் உங்களது தந்தையரின் ஜாதி சான்றிதழை கொண்டு செல்லவும்...

மேற்கண்ட ஆவணங்களை கொண்டு சென்றால் இ சேவை மைய அதிகாரிகளை உங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பதிந்து மற்றும் ஆன்லைனில் பெற்று தந்து விடுவார்கள்

➖➖➖➖➖➖➖➖➖➖

*பழைய நடைமுறை*

🔅நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம்.

🔅வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.

🔅இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான நீதிமன்ற வில்லைகள் (stamp) ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்த விண்ணப்பத்தை இங்கே பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

🔅ஆண்டு வருமானம் 12,000க்கும் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும் நீதிமன்ற  ஸ்டாம்ப் ஓட்ட வேண்டும். தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த ஸ்டாம்ப் ஓட்ட வேண்டியது இல்லை. வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

🔅ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத் துணை வட்டாட்சியர்களும்,

🔅அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர். இச் சான்றிதழுக்காக அரசு அளித்துள்ள விண்ணப்பப் படிவமும் முழுமையாக இல்லை. 

உதாரணமாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எவருக்கேனும் வருமானம் இருந்தால் அதைக் குறிக்க எந்த வசதியும் இல்லை. குறைந்தது, 'கூடுதல் தகவல்களுக்கு கூடுதல் தாள்கள் இணைக்கவும்' என்ற குறிப்பாவது இருக்க வேண்டும், அல்லது விளக்கமாக, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் வருமானம் பெறும் உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் வயது, வருமானத்திற்கான காரணிகள் என்று சில கேள்விகள் இடம் பெறலாம். இதனால், பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து, சான்றிதழ் பெறத் தேவையான, மேலும் விவரங்களை அளிப்பது வரை மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால், வருமானச் சான்றிதழ் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ் வாங்கப்படுகிறதோ, அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நம்மை பொறுத்தளவில், வருமானச் சான்றிதழ் வாங்கும் தேதி, வருமானம் உள்ளிட்ட தகவல்களை, விண்ணப்பதாரரின் ஏதாவது ஒரு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, குடும்ப அட்டையில் பதிவுசெய்யலாம். ஏனென்றால், பொதுமக்களில் சிலர், அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால், குறைந்த அளவு வருமானத்தையும், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக வருமானத்தையும் குறிப்பிட்டுச் சான்றிதழ் கேட்கின்றனர்.

இது அரசை முற்றிலும் ஏமாற்றுவதோடு இல்லாமல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களையும் ஏமாற்றுவதாகும். வருமானச் சான்றிதழ் வழங்கும் போது, அதைத் தகுந்த வகையில் பதிவு செய்யும்பொழுது, அதே நபர் மீண்டும் வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், முந்தைய விண்ணப்பத்திற்கும் தற்போதைய விண்ணப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, ஏமாற்றுவதைத் தவிர்க்கலாம்.

#வருமான_வரி_சான்றிதழ்
#income_certificate
#TNTJSW