Saturday, February 24, 2018

அல்வா செய்வது எப்படி...

அல்வா செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்..!!

1.முழுக்கோதுமை - 2 கப்.

2. சர்க்கரை - 7-8 கப்.

3. நெய் - 4 கப்.

4.முந்திரி பருப்பு - 50 கிராம்.

செய்முறை.
**********

கோதுமையை 4-5 மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.. பின்னர் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்..

அரைத்த கோதுமையுடன் நீர் சேர்த்து நன்றாக கலக்கி.. துணி ( வடிகட்டி )  வைத்து பாலை பிரித்தெடுக்க வேண்டும்.. சக்கையை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும்.. 

பிரித்தெடுத்த பாலை 2-3 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.. பின்னர் கட்டியான பால் அடியிலும் தெளிந்த தண்ணீர் மேற்புறமும் இருக்கும்..

மேற்புறம் உள்ள தண்ணிரை கீழே கொட்டி விட்டு தனி பாலை வைத்துக்கொள்ளவும்..

# இப்போது அடுப்பில் ஒரு அலுமினிய சட்டியை வைத்து 1/2 கப் சர்க்கரையை போட்டு சூடு பண்ணவும்.. அது கேரமல் கலர் வந்த உடன் மீதமுள்ள சர்க்கரையை கொட்டி  அரை கப் அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இப்போது சர்க்கரை பாகு கேரமல் கலரில் இருக்கும் இதுவே அல்வாவின் கலர் ஆகும்..

சர்க்கரை பாகு கம்பி பதம் வந்த உடன்.. மெதுவாக சிறிது சிறிதாக கோதுமை பாலை சேர்த்து கிளற வேண்டும்.. பால் கொதிக்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற வேண்டும்.. இடையில் சிறிதளவு ஏலக்காய் தூளும் முந்திரி பருப்பு 50 கிராமையும் சேர்க்கவும்.. மெதுவாக கிண்டவும்... அல்வா சட்டியில் திரண்டு வரும் போது அடுப்பை ஆஃப் செய்து விட்டு நெய் தடவிய தட்டில் கொட்டி விடவும்....!!

சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி..!!

No comments:

Post a Comment