Sunday, February 18, 2018

உங்களுக்கு அடிக்கடி குசு தொல்லை ஏற்படுகிறதா?

உங்களுக்கு அடிக்கடி குசு தொல்லை ஏற்படுகிறதா?

குசு தொல்லைக்கு முக்கிய காரணம் மென்று தின்னாமல் அப்படியே விழுங்குவது தான். உணவுகளை உட்கொள்ளும் போது காற்று உணவுகளுடன் குடலுக்கு செல்கிறது. மென்று தின்றால் உள்ளே செல்லும் காற்று குறைகிறது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை இந்த குசு தொல்லை இருக்கிறது. குசு தான் வெளியேற்றினேன் என்று யாரும் ஒதுக்க மாட்டார்கள். குசு நாற்றம் மற்றும் சத்தம் ஏற்பட்டால் கிண்டல் கேளி செய்வது வழக்கம்.இவை சிலருக்கு சங்கத்தை ஏற்படுத்தலாம். குசு நாற்றம் அதிகரித்தால் உடல் நிலை சரியில்லை என்று அர்த்தம். குசு நாற்றம் இல்லாமல் ஏற்படுவது தொல்லை இல்லை. ஆனால் குசு ஏற்படுவதை தவிர்க்க சில வழிமுறைகள்.

குசு தொல்லைக்கு முக்கிய காரணங்கள்:

குடலில் அதீத பாக்டீரியாக்கள் வளர்ச்சி
மலச்சிக்கல் பிரச்சனை
க்ரோன் நோய் பிரச்சனை
நொதித்தல்
மன அழுத்தம்
உணவு விஷத்தன்மை.
நீண்ட நேரமாக குசு அடக்கி வைத்தால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று அசிடிட்டி. சில நாட்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குசு ஏற்படலாம். இவை உடல் நலக்குறைவின் அறிகுறியாக இருக்கலாம்.

உணவுகளை மென்று சாப்பிடாமல் விழுங்குவதை தவிர்த்தால் 90% குசு தொல்லை இல்லை. குடலில் நொதித்தல் நடந்து உணவில் இருந்து உடலுக்கு சத்துக்கள் கிடைக்கின்றது. உணவுகளை அப்படியே விழுங்குவதால் அதிகப்படியான காற்று குடலுக்கு செல்கிறது. இந்த காற்று நொதித்தல் வினையை பாதித்து குசு உற்பத்தியை அதிகரிக்கிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் குசு தொல்லைக்கு முற்று புள்ளி வைக்கும். கெஃப்பைன் உள்ள பானங்கள் குசு ஏற்பட காரணமாக உள்ளது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. வாயுக்கள் நிறைந்த பானங்களை தவிர்ப்பதும் நல்லது.

குறிப்புகள்:

குசு என்பது அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒன்று, குசு விட்டால் அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம்.
மென்று தின்றால் குசு தொல்லை இல்லை
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் குசு தொல்லை தீர உதவுகிறது

No comments:

Post a Comment