Saturday, February 24, 2018

கொய்யா மரங்களில் மகசூல்

சேலம்: கொய்யா மரங்களில் மகசூல் அதிகரிக்க, மணல் நிரம்பிய பைகளை, மரக்கிளைகளில், விவசாயிகள் தொங்க விட்டுள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், கொய்யா மரங்கள் அதிகம்உள்ளன. மகசூல் அதிகரிக்க, மரத்தை கவாத்து செய்தல், நுண்ணுாட்டம், மக்கிய தொழு உரம் இடப்படுகிறது.

காளியாக்கோவில்புதுார் விவசாயிகள், உற்பத்தியை அதிகரிக்க, புது, 'டெக்னிக்'கை செயல்படுத்தி உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மரத்தின் கிளைகள் உயரமாக சென்று விடுதால், காய், பழங்களை அறுவடை செய்வதில் சிரமம் உள்ளது. உச்சியில் மட்டும் பூக்கள் தோன்றி, பிஞ்சு உற்பத்தியாகிறது.

அதனால், மணல் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளை, கிளைகளில் தொங்க விடுவதால், உயரமாக செல்லாமல், கீழ் நோக்கி வளைகிறது. அந்த குச்சிகளில், பல இடங்களில், அதிகமான புது துளிர்கள் தோன்றி, மேல் நோக்கி வளரும். அதில், பூக்கள், பிஞ்சுகள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment