Friday, August 22, 2014

இனிது இனிது வாழ்தல் இனிது!

இனிது இனிது வாழ்தல் இனிது!

Starting from the first point where tampatikkul problems? Anyone getting fixed. It tampatikkul


தம்பதிக்குள் பிரச்னைகளுக்கான முதல் புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது?யார் சரி என்பதில்தான். இது தம்பதிக்குள் என்றில்லை. நண்பர்களுக்குள்,  வேறு உறவுகளுக்குள், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் பரவலாகக் காணப்படுகிற மனநிலைதான். தம்பதிக்குள்  இந்த மனநிலை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே இருப்பதுதான் பிரச்னை.அதிலும் கணவர்களுக்கு இந்த மனோபாவம் எப்போதும் அதிகமாகவே  இருப்பதைப் பார்க்கலாம். படித்த, பெரிய பதவியில் இருக்கிற கணவர்களுக்கு அதைவிட அதிகமாக இருக்கும். அதற்காக மனைவிகள் விதிவிலக்கு  என்று அர்த்தமில்லை. கணவரை விட அதிகம் படித்த, அவரை விட உயர்ந்த பதவியில் இருக்கும் மனைவியிடமும் இந்த மனநிலையை சகஜமாகப்  பார்க்கலாம்.

வாழ்க்கைத்துணையிடம் இந்த மனோபாவம் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

• எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். துணை சொல்கிற விஷயத்துக்குக் காது கொடுக்காமல், எதிர்த்துப் பேசி, தன் தரப்பை சரி என  நிரூபிப்பதில்தான் அவரது கவனம் இருக்கும்.

• இந்தப் போக்கு தவறானது என்று தெரிந்தாலும், அதனால் கெட்ட பெயர் வருமென உணர்ந்தாலுமே அந்த மனநிலையைத் தொடர்வார்கள்.

• தன் துணையின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனத் தோன்றினாலும், அந்த எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு, தன் தரப்பை  சரியென நிரூபிப்பதற்கான புள்ளி விவரங்களைப் பற்றியே பேசுவார்கள்.

• தவறு செய்கிறோம் என உணர்ந்தாலுமே இவர்களால் மன்னிப்பு கேட்க முடியாது.

• எப்போதும் எந்த விஷயத்தையும் தனக்குத் தெரிந்த ஒரு கோணத்திலிருந்து மட்டுமே பார்ப்பார்கள். மற்றவர் பார்வையிலிருந்து வேறு வேறு  கோணங்களில் இருந்தும் அதைப் பார்க்கலாம் என அறியாதவர்களாக / அறிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்த விரும்பாதவர்களாக இருப்பார்கள்.  இந்த மனநிலை கொண்டவர்களுக்கு தான் தன் துணையிடம் விவாதிக்கிற விஷயத்தில் உள்ள உண்மைத் தன்மையை விட, தன் தரப்பை சரியென  நிரூபிக்கிற நோக்கமே முக்கியமாகத் தெரியும்.

• தான் மட்டுமே சரியென நினைக்கிற இந்த மனநிலை கிட்டத்தட்ட போதை போன்றது. நம்மைச் சுற்றிலும் பலரும் இத்தகைய மனநிலையில்  இருப்பதைப் பார்க்கலாம்.

• நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்கிற, அப்படி வாழ நினைக்கிற தம்பதிக்குள் பெரும்பாலும் இந்த மனப்போக்கு இருக்காது. காரணம்... அவர்களில்  ஒருவர் தேவையற்ற வாக்குவாதங்களுக்குள் நுழைவதை விரும்பமாட்டார்கள் அல்லது துணையின் பேச்சை ஏற்றுக் கொள்ளப் பழகுவார்கள்.  தனது  வாக்குவாதத்தில் தவறாகப் போவது தெரிந்தால், அதை ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

தம்பதியிடம் காணப்படுகிற இந்த மனப்போக்கின் பின்னணி என்ன?

• அவரவர் வளர்ப்பு முறையே அடிப்படை. சாதி, மதம், கடவுள் போன்ற விஷயங்களில் ஒவ்வொரு வருக்கும் இருக்கும் நம்பிக்கை இன்னொரு காரணம்.  கணவனும் மனைவியும் வேறு வேறு நம்பிக்கைகளுடன், வேறு வேறு பழக்கவழக்கங்களுடன் வளர்கிறார்கள். வாழ்க்கையில் இணைகிற போது,  இருவரில் ஒருவர் தனக்கெதிராகவோ, முரண்பட்டோ யோசிப்பது அதிர்ச்சியைத் தரலாம். ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல் தலைவரைப் பற்றியோ  ரசிகர்களுக்கு மாறுபட்ட அபிப்ராயங்கள் இருப்பதைப் போன்றதுதான் இதுவும். சிறு வயது முதல் நம் ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளே வளர்க்கின்றன.

• அந்த நம்பிக்கைகள் அவரவர் இனம், மதம், வளர்ப்பு முறை, வாழும் சூழல் எனப் பல்வேறு விஷயங்களால் தீர்மானிக்கப்படுபவை. நமது சிந்தனை,  செயல், பேச்சு என எல்லாம் அவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். உதாரணத்துக்கு... சில ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பீடு மிகத்  தாழ்ந்ததாக இருக்கும். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என தனக்குள் ஒரு பிம்பத்தை, அளவுகோலை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தாம் சந்திக்கிற, தம் வாழ்க்கையில் வருகிற எல்லாப் பெண்களிடமும் அந்த  லட்சணங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள். எந்தப் பெண்ணாவது அதற்கு முரண்படும் போது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தம்  நம்பிக்கை தான் சரி என வாதம் செய்வார்கள். 

• தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற இத்தகைய மனிதர்களை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முட்டாள்கள் போலத் தெரியலாம்.  ஆனால், உண்மையில் இவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள். தன் தரப்பை நிரூபிக்க கை நிறைய புள்ளி விவரங்களுடனும்  தகவல்களுடனும் ஒரு வக்கீல் அளவுக்குத் தயாராகவே இருப்பார்கள். தன்னுடைய இந்தப் போக்கு தவறு என்பதையும் உணர்ந்திருப்பார்கள். ஆனால்,  அதிலிருந்து வெளியில் வர அவர்களது ஈகோ அத்தனை சீக்கிரத்தில் அனுமதிக்காது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஆண்கள் எப்போதும்  இடது பக்க மூளையிலிருந்து யோசிப்பார்கள். 

• அதில் உணர்வுகளுக்கு இடமிருக்காது. பெண்கள் எப்போதும் வலது பக்க மூளையிலிருந்து பேசுவார்கள். அதில் உணர்வுகள் மட்டுமே  ஆக்கிரமித்திருக்கும். தான் சொல்வதுதான் சரியென நம்புவதிலும் அப்படி நம்ப வைப்பதிலும் சம்பந்தப்பட்டவரின் சுயமரியாதை அடங்கியிருப்பதாக  உணர்வார்கள். அதுவே அவர்கள் அந்த மனநிலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் காரணம். இவர்களால் புதிய கருத்துகளை ஒருபோதும் யோசிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. கொள்கை ரீதியான சிந்தனைகள் எனச் சிலதைப்  பிடிவாதமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். 

• உண்மையில் அந்த எண்ணங்கள் முட்டாள்தனமானவையாகவே இருக்கும். விஞ்ஞானம் உண்மையென நிரூபித்த விஷயங்களைக் கூட இவர்களால்  ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்... அவர்களது போலியான சுயமரியாதை. தன்னுடைய இந்த மனப்பான்மையின்  மூலம் மற்றவர்களைக்  கட்டுப்படுத்தி விடலாம் என்கிற தவறான, ஆழமான எண்ணம் பதிந்து போயிருக்கும். இவர்கள், திறந்த மனத்துடன் மற்றவர்களது கருத்துகளுக்குக்  காது கொடுக்கவோ, அவை நல்லவையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவோ முடியாமல் தவிப்பார்கள். முதல் பத்தியில் சொன்னது போல  படித்தவர்களிடமும் வசதியானவர்களிடமும் காணப்படுகிற இந்த மனநிலையை, ஒழுக்கமின்றி வாழும் மனிதர்களிடமும் பார்க்கலாம். 

உதாரணத்துக்கு... குடிகாரர்கள், தாம் குடிப்பதற்குக் காரணமாக தமக்கென ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள். லஞ்சம் வாங்குவோர் அதற்கு தம்  தரப்பு நியாயம் என ஒன்றைப் பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்போர், ஆசிரியர்கள், பெற்றோர், கணவர்கள் போன்றோர் இந்த ‘நானே சரி’  மனநிலைக்குப் பழகிப் போகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்த மனநிலை வேறு என்ன செய்யும்?

தான் சொல்வதே சரியென்கிற இந்த மனப்பான்மை,  நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் தொலைக்க வைக்கும்.

சந்தோஷத்தையும் நிம்மதியையும் காணாமல் போகச் செய்யும்.

ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுகிற பழமானது நேரேதான் விழுமாம். தள்ளிப் போய் விழாது. அதைப் போல இந்த மனப்பான்மையால் உடனடியாக  பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாராகவே இருப்பார்கள். துணையையும் குழந்தைகளையும்தான் அதிகமாக பாதிக்கும். 

என்னதான் தீர்வு?

எல்லா விஷயங்களுக்கும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருக்காமல், அமைதியாக அவற்றை உற்றுநோக்கப் பழகலாம்.

தள்ளி நின்று நம்மையே நாம் கவனிக்கலாம். ‘நாம் பரந்த மனப்பான்மையுடன் இந்த விஷயத்தைப் பார்க்கிறோமா’ அல்லது ‘நாம் சொல்வது தான்  சரியென நிரூபிக்கத் துடிக்கிறோமா’ என தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். இந்த சுய கேள்வியின் மூலம் தனக்கிருக்கும் அகந்தையையும்  ஒருவர் உணர முடியும்.

தான் செய்வது தவறு எனத் தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கலாம். தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பிரச்னைகள் குறித்த பார்வையும் புரிதலும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டேதான் இருக்கும். ஒரு விஷயம்  குறித்து, குழந்தைப் பருவத்தில் ஒருவிதமான கருத்து இருக்கும். பதின்ம வயதில் அது வேறு மாதிரி மாறலாம். அதற்கடுத்தடுத்த வயதிலும் இந்த  மாற்றம் தொடரும். ஒரு பிரச்னை பற்றிய பிடிவாத மும் நம்பிக்கையும் மாறலாம்... தளரலாம். இந்த அடிப்படை புரிதல் இருந்தாலே ‘நான் சொல்வது  தான் சரி’ என்கிற மனப்பான்மை மாறுவதோடு, தம்பதிக்கிடையிலான சகிப்புத் தன்மை வளர்வதோடு, சந்தோஷங்களும் பெருகும். 

(வாழ்வோம்!)

*********************************************************************************************

இனிது இனிது வாழ்தல் இனிது!

மாற்றம் செய்த நேரம்:8/1/2014 3:15:17 PMPassing of the great power that can be put back in your life. Somewhat critical practice.



உறவுகள்: சகிப்புத்தன்மை...

போகிற போக்கில் உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக் கூடிய மாபெரும் சக்தி. பழகுவதற்கு சற்றே சிரமமானதுதான். ஆனால், பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை பெரிய மந்திர சக்தி என்பது!

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சகிப்புத்தன்மை அவசியம். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் வெளிப்பார்வைக்கு புத்திசாலிகள் மாதிரிக் காட்சியளிப்பார்கள். மேல்தட்டு மனோபாவம் கொண்டவர்கள் போலவும் வலிமையானவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள். சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு போலியான முகமூடியுடன் இருப்பார்கள்.இந்தப் போலித் தோற்றத்தையும் பொய்யான புத்திசாலித்தனத்தையும் பல கணவர்களிடம் காணலாம். பேச்செல்லாம் பெருந்தனத்துடன், அதிமேதாவித்தனத்துடன் இருக்கும். அகம் முழுக்க அவர்களுக்கு அகந்தையும் வெறுப்புமே ஆக்கிரமித்திருக்கும்.

எந்த விஷயத்தையும் பற்றி மோசமாக விமர்சிப்பார்கள். ஜனநாயகக் கூறு என்பதே இருக்காது. மனைவி என்பவள் தனக்கு இணையானவள் என்பதை உணராமல், எப்போதும் அவளது செயல்களை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். சகிப்புத்தன்மை அற்றவர்களின் பார்வையில் தன்னைத் தவிர எல்லோரும் முட்டாள்கள், திருத்தப்பட வேண்டியவர்கள் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கும். அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்து விஷயங்களைப் பற்றியும் இவர்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகள் இருக்கும். பரந்த மனத்துடன் எதையும் பார்க்க மாட்டார்கள். தான் சந்திக்கிற, எதிர்கொள்கிற மனிதர்களின் கருத்துகள் தனது கருத்துகளுடன் ஒத்துப் போகாததை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளே தவறானவை என நினைப்பார்கள்.

சகிப்புத்தன்மை இல்லாத மனிதர்கள், பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்றவர்கள். துணையின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், உண்மை அப்படி இருக்காது. துணையின் சிந்தனைகளையும் செயல்களையும் மதிக்கத் தெரியாதவர்கள். தன் துணை வித்தியாசமாக சிந்திப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். துணைக்கு சரி எனப்படுகிற ஒரு விஷயத்தை ஒருக்காலும் அப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் சில நேரங்களில் மிகச் சாதுவாகவே தெரிவார்கள். அவர்களுக்கென ஒரு எல்லை இருக்கும். எலெக்ட்ரிக் ஃபென்ஸ் போன்ற அந்த எல்லை மீறப்படுகிற போது, ருத்ர தாண்டவமே ஆடித் தீர்த்து விடுவார்கள்.

சில வீடுகளில் கணவன் - மனைவிக்குள்ளேயோ, மாமியார் - மருமகளுக்குள்ளோ சண்டை நடக்கும். ஒருவர் உரத்த குரலில் கத்திக் கொண்டிருக்க, இன்னொருவர் அமைதியாகவே இருப்பார். அமைதி காப்பவரின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கும். அது அவர் மட்டுமே அறிந்தது. அந்த எல்லை தாண்டப்படும் போது, அமைதி காத்தவர் ஆக்ரோஷமாகி, அந்த இடத்தையே துவம்சம் செய்து விடுவார். தனது பொறுமையின் எல்லை இதுதான் என்பதை அவர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். படித்தவர்களிடம் இந்தக் குணம் இன்னும் மோசமாகவே இருக்கும். தனது சகிப்புத்தன்மை இன்மையை ரொம்பவே நியாயப்படுத்திப் பேசுவார்கள்.

இவர்களுக்கு இந்தக் குணம் சிறுவயது முதல் வளர்ந்திருக்கும். அது அவர்களுக்குள் ஊறி ஊறி, திருமணத்துக்குப் பிறகு துணையிடம் அந்தக் குணத்தைக் காட்ட வைக்கும். ஒரு கட்டத்தில் சகிப்புத்தன்மை இன்மை என்பதே அவர்களது இயல்பு மாதிரி மாறிவிடும். சகிப்புத்தன்மை இன்மை என்கிற இந்த இயல்பானது எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் வெளிப்படுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அலுவலகத்தில் தனது மேலதிகாரியிடமோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ காட்டத் தோன்றாது. சகிப்புத்தன்மை இன்மையை யாரிடம் காட்ட வேண்டும் எனத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...’ என சொல்லிக் கொண்டு, மோசமாகவே நடந்து கொள்வார்கள். மற்றவரின் உள் நோக்கங்களை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்வதும், தான் ரொம்பவே விசேஷமானவர் என்கிற நினைப்பில் வலம் வருவதும் இவர்களுக்குக் கை வந்த கலை. தம்மைப் பற்றிய சுயமதிப்பீடு குறைவாக உள்ளதன் வெளிப்பாடுதான் இவை அனைத்தும். சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய இழப்புகள் ஏற்படும். அவர்களுக்கு சாதனைகள் எதுவும் சாத்தியமாகாது. எப்படிப்பட்ட விஷயத்தையும் பார்த்துப் பாராட்டவோ, வியக்கவோ, சந்தோஷப்படவோ மாட்டார்கள். துணை செய்கிற அசாதாரண விஷயங்களைக் கூட, எல்லோராலும் செய்யப்படக்கூடிய இயல்பான, எளிதான விஷயமாகப் பார்ப்பதும், அதிலும் குறைகள் கண்டுபிடித்து பெரிதாக்குவதுமாக நடந்து கொள்வார்கள்.

கணவன்-மனைவிக்கிடையே சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறபோது, அது அவர்களது உறவுக்குள் பெரிய பிளவுக்குக் காரணமாகிறது.  ‘எனக்கென எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்து இருக்கிறது. அவற்றை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் எரிச்சலடைவேன்... கஷ்டப்படுவேன்... வருத்தப்படுவேன்...’ என்று சொல்லாமல் சொல்வதே சகிப்புத்தன்மையின்மையில் மறைந்திருக்கிற உள்நோக்கம். காதலித்தோ, காதல் இல்லாமலோ கல்யாணம் செய்கிற தம்பதியரில், இருவரில் ஒருவர், குறிப்பாக பெண், ஆணைவிட புத்திசாலியாக இருப்பதை துணையால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியாது. யாருடைய கை ஓங்கியிருக்கிறது, யார் தலைவர் என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழும். தம்பதிக்குள் இப்படியொரு கேள்வியே அனாவசியமானது.

இருவரும் ஒருவருக்கொருவர் இணை. ஒருவர் ஒரு விஷயத்திலும் மற்றவர் வேறொரு விஷயத்திலும் சிறந்து விளங்குவது தவறில்லை என்கிற எண்ணம் வேண்டும். அதிகாரத்தைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, உண்மையில் அப்படியொரு அதிகாரமே அவசியமில்லை என்பதை இருவரும் உணர வேண்டும். கணவன் - மனைவிக்குள் இருக்க வேண்டியது பகிர்தல்தானே தவிர, ஆதிக்கமோ, அதிகாரமோ அல்ல. நல்ல திருமண வாழ்க்கைக்கு நம்பர் ஒன் இடத்துக்கான போட்டியோ, ஆசையோ அவசியமுமில்லை.

சரி... இந்தப் பிரச்னைக்கான சாவி எது?
 

வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு பாடமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் எந்த விஷயத்தையும் பிரச்னையாகவே பார்க்கிறார்கள். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்கிறவர்களுக்கு எது நடந்தாலும் அது ஒரு அனுபவம்.

சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள விரும்புவோர், தம்மை ஒரு குழந்தையாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். குழந்தை எல்லா விஷயங்களையும் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனுமே எதிர்கொள்ளும். சளைக்காமல் வியப்படையும். உற்சாகம் கொள்ளும். வயதாக, ஆக நாம் அந்த குணத்திலிருந்து வெளியே வந்து விடுகிறோம். மீண்டும் குழந்தை மனநிலைக்கு மாறுவது சகிப்புத்தன்மையை வளர்க்கும்.

வாழ்க்கையில் கிடைக்காத விஷயங்களுக்கு ஏங்கித் தவிப்பதைத் தவிர்த்து, கிடைத்த விஷயங்களுக்கு நன்றியுடன் இருக்கப் பழக வேண்டும்.

குடும்பம் என்பதை சகித்துக் கொள்ள முடியாத சுமையாக நினைக்காமல், சந்தோஷமான அனுபவம் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


(வாழ்வோம்!)

படம்: மது இந்தியா போட்டோகிராபி

No comments:

Post a Comment