Friday, August 22, 2014

துள்ளும் இளமைக்கு நடைபயிற்சி

துள்ளும் இளமைக்கு நடைபயிற்சி

The man who is now living in the wild within the building. Has a 90 percent decrease in body movement. It diabetes, blood


காடுகளில் வாழ்ந்த மனிதன் இப்போது கட்டிடத்திற்குள் வாழும் நிலை உள்ளது. உடல் இயக்கம் என்பது 90 சதவிகிதம் குறைந்து விட்டது. இது  நீரழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. இவற்றை தவிர்க்க உடற்பயிற்சி அவசியமாகும். யோகா,  நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் கூட போதுமானவை. அதுவும் 40 வயதுக்கு மேல் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு  பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு  பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. தினமும் குறைந்தது 20 நிமிடம்  நடைபயிற்சி மேற்கொண்ட முதியவர்கள் யார் உதவியும் இன்றி நீண்டதூரம் நடக்கும் திறனுடன் இருந்தனர். ஆனால் நடைபயிற்சி மேற்கொள்ளாத  முதியவர்களின் திறன் குறைந்திருந்தது. அவர்களால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை. 

அவர்களின் கால்கள், உடல் உறுப்புகள் வலு குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் நிலை  இருந்தது. எனவே தினமும் அருகில் உள்ள பூங்காக்கள், மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது வீட்டை சுற்றி நடக்கலாம்.
வீட்டு மொட்டை மாடிகளில் கூட நடக்கலாம். தினமும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருவதை பழக்கப்படுத்திக் கொள்லலாம். இது  முதியவர்கள் உடல், மனம் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருக்க வழி வகுக்கும்.

No comments:

Post a Comment