Friday, August 22, 2014

மக்காச்சோளம்

ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

One of grain sorghum varieties. Corn dishes that can guarantee the best natural food for the body


தானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்.. இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும். அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. 

சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தத்தை தடுக்கிறது. மஞ்சள் நிற கர்னல்களை கொண்ட சோளம் குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது,  மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. 

கர்ப்பிணிபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று. கர்ப்பிணிபெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது. 

சோளமாவாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

No comments:

Post a Comment