Friday, August 22, 2014

தேநீர் A to Z


தேநீர் A to Z

From local politics to global politics, the tea shop is a place where all things dealing. And the history of politics inverter

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை சகலத்தையும் அலசுகிற ஒரு இடம் டீ கடை. அரசியலையே புரட்டிப் போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைச் சம்பவம் பற்றித் தெரியுமா?‘பாஸ்டன் தேநீர் விருந்து’ என்கிற அந்த நிகழ்வு உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்று.

அதென்ன பாஸ்டன் தேநீர் விருந்து?

அமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஐரோப்பாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர்.  புதிய கண்டத்தில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடியின மக்களை அவர்கள் இடத்திலிருந்து விரட்டி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். அதே நேரம் காலனிகள் அரசுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.  இங்கிலாந்தின் பொருளாதாரக் கொள்கையில் குடியிருப்புகளுக்கு பெரும் அதிருப்தி. வணிகத்தில் இங்கிலாந்து கப்பல்களையே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டது. புகையிலை, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. 

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் தொடர்ந்து ஏற்பட்ட போரினால் இங்கிலாந்தில் கடும் வரி சுமை அதிகரித்தது. வருமானத்தைப் பெருக்கும் எண்ணத்தில் 1965ல் முத்திரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு காலனிகளில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து பொருட்களை  மக்கள் புறக்கணித்தனர்.  இங்கிலாந்து பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு முத்திரைச் சட்டத்தை விலக்கிக் கொண்டது. ஆனால், பொருட்களின் மீதான வரியை அதிகரித்தது. 

இறக்குமதி பாதியாகக் குறைந்ததன் விளைவாக வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு தேயிலை மீதான வரி மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1773ல் இங்கிலாந்து கப்பலில் வந்த தேயிலையை இறக்க அமெரிக்கர்கள் மறுத்தனர். இரவோடு இரவாக காலனிவாசிகள் தேயிலையைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகளுக்குள் நுழைந்து, தேயிலை சுற்றி வைத்திருந்த பாக்கெட்டுகளை கிழித்து எல்லாத் தேயிலையையும் கடலில் எறிந்தனர். 
கடலில் எறியப்பட்ட தேயிலைக்குரிய விலையைக் கொடுக்கவில்லை என்றால் பாஸ்டனோடு வணிகம் செய்வதில்லை என்று இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.

தேயிலையை பாஸ்டனில் கடலில் எறிந்த சம்பவமே பாஸ்டன் டீ பார்ட்டி (ஙிஷீstஷீஸீ ஜிமீணீ றிணீக்ஷீtஹ்). அமெரிக்க காலனிவாசிகள் இங்கிலாந்தை முழுமையாக எதிர்க்கத் தொடங்கி, அமெரிக்க காலனிகள் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற, இந்தச் சம்பவம் ஆரம்பமாக அமைந்ததால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் ஒரு தினம் கொண்டாடுகிறோம். தேயிலைக்கும் அப்படி ஒன்று உண்டு. 

டிசம்பர் 15ம் தேதியை ‘சர்வதேச தேயிலை தினமா’கக் கொண்டாடுவது   பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் தேதி ‘சர்வதேச தேயிலை தினமா’க உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. தேயிலை வணிகமானது சிறு வியாபாரிகள், நுகர்வோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற கவன ஈர்ப்பு தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகிறது. தேயிலை வணிகத்துடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களும், சிறு உற்பத்தியாளர்களும் தங்களது ஊதிய உரிமை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தினத்தை அறிவிக்கிறார்கள்.

இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, கென்யா, மலேசியா, இலங்கை, நேபாளம், தான்சானியா, உகாண்டா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் சர்வதேச தேயிலை தினத்துக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும், தேயிலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிற மாநிலங்களில் தேயிலை தொடர்பான வணிகச் சங்கங்கள் மற்றும் சிறு வியாபாரிகளால் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மீட்டிங்குகள், ஊர்வலம், போராட்டம் எனப் பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த தினம்!

அரசியலை ஆட்டிப்படைத்த தேயிலைக்கு, மென்மையான இன்னொரு முகமும் உண்டு. யெஸ்... அழகுப் பராமரிப்பிலும் தேயிலைக்கு முக்கிய இடமுண்டு. அதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

‘‘சீனர்களோட ஒல்லியான உடல் வாகுக்கும், பளிங்கு மாதிரியான சருமத்துக்கும் காரணம் அவங்களோட டீ பழக்கம். மல்லிகை சேர்த்த கிரீன் டீயை குழந்தைகள்லேருந்து பெரியவங்க வரைக்கும் அரை மணி நேரத்துக்கொரு முறை குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. டீ மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். அது மட்டுமில்லாம, நம்ம உடம்புல உள்ள அதிகப்படியான கெட்ட நீரை வெளியேத்தவும் உதவுது. மல்லிகை, ரோஜா, சாமந்தினு பூக்கள் சேர்த்த டீ வகைகள் எல்லாமே அழகை மேம்படுத்தக் கூடியவை. துளசி சேர்த்த கிரீன் டீ ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும்.
டீயை உள்ளுக்குக் குடிக்கிறதன் மூலம் கிடைக்கிற அதே பலன்கள், வெளிப்புற அழகு சிகிச்சைகள்லயும் கிடைக்கும்.

உபயோகிச்ச டீ பைகளைக் குளிர வச்சு, கண்களுக்கு அடியில வச்சுக்கிட்டு ஓய்வெடுத்தா, கண்களுக்கடியில தெரியற வீக்கமும், கரு வளையங்களும் மறையும். டீ பைகள் இல்லைன்னா, டீ டிகாக்ஷன்ல பஞ்சை நனைச்சும் கண்கள் மேல வச்சுக்கலாம்.வெயில்ல போயிட்டு வந்ததால கைகள் கருத்துப்போயிருந்தா, டீ டிகாக்ஷனோட முல்தானி மிட்டி கலந்து பேக் மாதிரி போட்டுக் கழுவினாலே, கருமை மாறும். இதையே முகத்துக்குப் போடும்போது, சருமம் கொஞ்சம் வறண்டு போகலாம். அதனால கை, கால்களுக்கு மட்டும் ட்ரை பண்றது நல்லது. நரைமுடியை மறைக்க தலைக்கு ஹென்னா போடும் போதும் டீ பயன்படுத்தறோம். 

வெறும் ஹென்னாவை தடவும் போது, அது சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். காபி டிகாக்ஷன் ரொம்ப அடர்ந்த நிறத்தைக் கொடுக்கும். ஹென்னாவுடன் டீ சேர்க்கும் போது பிரவுன் ஷேடு கிடைக்கும். ரொம்ப இயற்கையான நிறத்துல கூந்தல் பளபளக்கும். கால் கிலோ ஹென்னாவுல ஒரு கப் அளவுக்கு (ரெண்டாவது டிகாக்ஷன்) டீ டிகாக்ஷன் கலந்து தலைக்குத் தடவலாம். கிரீன் டீயைக் கொதிக்க வச்ச தண்ணீரை, தலைக்குக் குளிச்சு முடிச்சதும், கடைசியா ஒரு முறை அலச உபயோகிச்சா, கூந்தலுக்கு ஒருவித பளபளப்பு கிடைக்கும். பருக்களை நீக்கவும், சுற்றுப்புற மாசுக்களால சருமம் பாதிக்கப்பட்டு, கரும்புள்ளிகளும், தழும்புகளும் உள்ளவங்களுக்கும் இப்ப லேட்டஸ்ட்டா ‘ஆன்ட்டி பொல்யூஷன்’ சிகிச்சை வந்திருக்கு. அதுல பிரதான பொருளே கிரீன் டீதான். சருமத்துல உள்ள மாசு, மருக்களை நீக்கி, சுத்தப்படுத்தற அளவுக்கு அது அவ்வளவு சக்தி வாய்ந்தது.’’
*********************************************************************************************

தேநீர் A to Z

மாற்றம் செய்த நேரம்:3/11/2014 2:58:29 PMWhen vitiyatu putumoliye say that without tea. So more people awaken enthusiasm is transferred to the dawn of the first drink tea!



டீ இன்றி விடியாது பொழுது எனப் புதுமொழியே சொல்லலாம். அந்தளவுக்கு அனேக மக்களின் விடியலை உறக்கத்திலிருந்து உற்சாகத்துக்கு மாற்றும் முதல் பானம் தேநீர்!

தேயிலையின் பூர்வீகம் சீனா. தேயிலையை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவுக்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு. 800களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.  1840-50களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென் கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் பருகுவதற்காக வைக்கப்பட்ட சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்து வந்து விழவும், அந்த நீரைப் பருகிய சக்கரவர்த்தி ஒரு வித உற்சாகமான சுகானுபவம் கிடைப்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்துதான் டீயை ஒரு பானமாகக் குடிக்கிற பழக்கம் அறிமுகமானது என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு. இந்தியாவின் தேயிலைத் தொழிலுக்கு வயது சுமார் 180 ஆண்டுகள். உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்.

காபியுடன் ஒப்பிடும்போது, தேநீருக்கு மருத்துவக் குணங்கள் சற்று அதிகம் என்பது தெரிகிறது. டீ குடிப்பவர்களுக்கு புற்றுநோய், இதய நோய், அல்சீமர் நோய், கல்லீரல் நோய் போன்றவை பாதிக்கிற வாய்ப்புகள் குறைவு என்கிறது ஒரு புள்ளிவிவரம். சீனர்களின் சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நீண்ட வாழ்வுக்கும் அவர்கள் தண்ணீர் மாதிரி நாள் முழுக்க கிரீன் டீ பருகுவதே காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட். தேயிலைத் தகவல்களுக்கு மறுபடி வருவோம்.

அதற்கு முன் தேநீர் ருசிக்கிற டீ டேஸ்ட்டிங் செரிமனிக்கு சென்று வரலாமா?


மேல்தட்டு பெரிய மனிதர்கள் சூழ, ஒரு நட்சத்திர ஓட்டலில், பிரபல டீ டேஸ்ட்டர் முன்னிலையில் பலவிதமான தேநீர் சுவைகளை ருசிக்கும் இந்த நிகழ்ச்சி யில் உண்மையில் என்னதான் நடக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும்.  ஸ்ப்ளென்டா சார்பில் தென்னிந்தி யாவின் முன்னணி டீ டேஸ்ட்டர்களில் ஒருவரான ஸ்ரீராம் நாராயண ஸ்வாமி முன்னிலையில் நடத்தப்பட்ட டீ டேஸ்ட்டிங் செரிமனியை நேரில் காண்கிற வாய்ப்பு அமைந்தது. 4 விதமான தேநீரை நம் கண் முன்னே தயாரித்து ருசித்துப் பார்த்து வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொன்னார் ஸ்ரீராம்.

முதலில் ஒயிட் டீ.  ஒயிட் டீ என்பது தேயிலை இனமல்ல... அது ஒரு பிராசஸ். இரண்டு இலைகளுடன் ஒரு மொட்டும் சேர்த்துப் பறிக்கப்படுகிற இந்த ஒயிட் டீ மிகவும் விலை உயர்ந்த தேயிலைகளில் ஒன்றாம். மிகவும் மிதமான வாசனை மற்றும் சுவையில் இருக்கிற அந்த டீயை எப்படிப் பருக வேண்டும் என்றும் விளக்கினார் ஸ்ரீராம்... ‘‘உங்க பலத்தையெல்லாம் திரட்டி, ஆழமா உறிஞ்சி, ஒரு நொடி தொண்டையில நிறுத்தி, அப்புறம் விழுங்குங்க. அப்பதான் டீயோட உண்மையான மணமும் சுவையும் தெரியும்!’’ அடுத்ததும் ஒயிட் டீ வகைதான்.

ஆனால், இது இலைகளைத் தவிர்த்து வெறும் மொட்டுக்களை மட்டுமே பறித்துத் தயாரிக்கப்பட்டதாம். முதல் வகையில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் என்றால், இதிலோ அது மிகமிக அதிகமாம். விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். ஒரு கிலோ ஒயிட் டீயின் விலை ரூ.10 முதல் 12 ஆயிரங்கள்... இந்த டீ, சரும நிறத்தைக் கூட்டும் குணம் கொண்டதாம்.அதனால்தான் சிவப்பழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த டீயை கிலோ கிலோவாக அள்ளிச் செல்கின்றனவாம்.

அடுத்து ஸ்ரீராம் நமக்கு ருசிக்கக் கொடுத்தது கிரீன் டீ. இதிலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதாம். கிரீன் டீயை குடித்த பிறகு நாவில் தங்கும் லேசான கசப்பும் கடுப்பும்தான் அதன் ஸ்பெஷலே!கடைசியாக ஆர்த்தோடாக்ஸ் வகை டீ. 6 ஆயிரம் அடிகள் உயரத்தில் விளைவிக்கப்படுகிற இதை பிளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ விருப்பப்படி பருகலாம். டீ சுவைக்கிற நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீராம் சொன்ன விஷயங்கள் டீ பிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

‘‘தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை மக்கள்ல பலரும் காபி பிரியர்களா இருக்காங்க. டீ குடிக்கிறவங்களுக்கும் அது நல்ல கலரா இருக்கணுங்கிற விருப்பம் இருக்கு. அப்படி சேர்க்கப்படறது செயற்கையான கலர். அதனால உங்க மக்களுக்கு நல்ல, தரமான டீ வகைகளைப் பத்தி அதிகம் தெரியலை. பிரபலமான பிராண்ட் பலதும் ரெண்டாம்தர தேயிலையைத்தான் விற்பனைக்கு அனுப்பறாங்க. டீயோட உண்மையான மணம் மற்றும் சுவையோட குடிக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பிரத்யேக டீ விற்பனைக் கடைகள்ல குடிச்சுப் பாருங்க. சென்னையிலயேகூட ‘டீ பொக்கே’ கான்செப்ட் வந்திருச்சு. அந்த மாதிரி இடங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேத்தும்’’ என்றார்.

சுவை பார்க்கும் படலம் முடிந்ததும், ஸ்ரீராமிடம் சில தேநீர் கேள்விகளை முன் வைத்தோம். ஒரு நாளைக்கு 200 கப் தேநீரை சுவைக்கிறதும், அத்தனை ருசியையும் நினைவுல வச்சுக்கிட்டு, சரி, தவறு களைச் சொல்றதும் எப்படி சாத்தியம்? ‘‘அது 35 வருஷ அனுபவம் தந்த திறமை. எத்தனை கப் குடிச்சாலும், எந்த கப்ல என்ன கோளாறு, குறைங்கிறதை எங்களைப் போல டீ டேஸ்ட்டர்களால மிகச்சரியா சொல்லிட முடியும். எங்களோட சுவை நரம்புகள் அதுக்கேத்தபடி பழகியிருக்கும். அந்தக் கோளாறு தயாரிப்பு சம்பந்தப்பட்டதாங்கிற வரைக்கும் துல்லியமா கண்டுபிடிக்க முடியும். இதுக்காக பிரத்யேக படிப்பே இருக்கு.

பெங்களூருல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளான்ட்டேஷன் மேனேஜ்மென்ட், டீ டேஸ்ட்டிங் படிப்பை சொல்லிக் கொடுக்கிறாங்க. விருப்பமிருக்கிற யார் வேணாலும் படிக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்...டீ டேஸ்ட்டர்ஸ் ஸ்மோக் பண்ணக் கூடாது, மசாலா சேர்த்த சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்பதான் அவங்களோட சுவை நரம்புகள் ஷார்ப்பா இருக்கும்!’’

கலப்பட டீயை எப்படி கண்டு பிடிக்கிறது?


‘‘ரொம்ப சிம்பிள். நீங்க உபயோகிக்கிற டீ தூளை கொஞ்சமா எடுத்து அரை டம்ளர் பச்சைத் தண்ணியில போடுங்க. கலப்பட டீயா இருந்தா, டீ தூளோட கலர், தண்ணிக்குள்ள இறங்கறதைப் பார்ப்பீங்க. கலப்படமில்லைன்னா, அப்படியே நிறம் மாறாம இருக்கும்.’’

சுவையான டீ தயாரிக்கிறது எப்படி?

‘‘100 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வையுங்க. கொதிச்சதும் அதுல 1 டீஸ்பூன், அதாவது, 5 கிராம் டீ தூளைச் சேர்த்து நல்லா கொதிக்க வையுங்க. தளதளனு கொதிச்சதும், அதுல பால் சேருங்க. ஒரு நிமிஷம் கொதிக்கவிட்டு இறக்கி, சர்க்கரை சேர்த்துக் குடிச்சுப் பாருங்க... பிரமாதமா இருக்கும். சிலர் டீ டிகாக்ஷனை தனியா தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல பால் சேர்த்துக் குடிப்பாங்க. அதுல டீயோட உண்மையான மணமும் சுவையும் மட்டுப்பட்டு, பாலோட சுவைதான் ஆதிக்கம் செலுத்தும்...’’ 

No comments:

Post a Comment