Friday, June 29, 2018

காலிஃபிளவர் தக்காளி சாப்ஸ்..

#காலிஃபிளவர் தக்காளி சாப்ஸ்...

தேவையான பொருட்கள்
காலிஃபிளவர்                 -      2 கப்,
துருவிய தக்காளி            -      2 கப் (விழுதாக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்                   -      2 கப் (பொடியாக நறுக்கியது),
இஞ்சி, பூண்டு விழுது        -      2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா                 -      1 டீஸ்பூன்,
உப்பு                           -      தேவையான அளவு,
மஞ்சள் தூள்                -      1 டீஸ்பூன்,
மிளகாய் தூள்               -      2 டீஸ்பூன்,
தனியா தூள்                -      2 டீஸ்பூன்,
கசகசா விழுது             -      2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்                 -      1/4 கப்,
சீரகம்                       -      2 டீஸ்பூன்.

செய்முறை:
*காலிஃபிளவரை வெந்நீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*அடுப்பில் எண்ணெய் காய வைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் இஞ்சி, பூண்டு விழுது, கச கசா விழுது மற்ற தூள் வகைளை சேர்த்து வதக்கி தக்காளி விழுதும் உப்பும் சேர்க்கவும்.
*கொதிக்கும் போது காலிஃபிளவரையும் சேர்த்து கலந்து 10 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும்.
*நன்றாகக் கிளறிவிடவும். தேவைப்பட்டால் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்கும் போது கீழே இறக்கி பரிமாறவும்.
இப்போது சுவையான காலிஃபிளவர்  தக்காளி சாப்ஸ்  ரெடி.!!!!!

Engr Sulthan


No comments:

Post a Comment