Sunday, June 24, 2018

நீதிமன்றங்களைப்பற்றி

நீதிமன்றங்களைப்பற்றி கொஞ்சம் விபரமாக அறிந்து கொள்வோம்.

கிரிமினல் கோர்ட் என அழைக்கப்படும் குற்றவியல் நீதிமன்றம்.

சிவில் கோர்ட் என அழைக்கப்படும் உரிமையியல் நீதிமன்றம்.

இந்த இரண்டு வகைகளை பல பிரிவுகளாக கொண்ட நீதிமன்றங்கள் உள்ளன.

இதில், குற்றவியல் பிரிவில் மாவட்டம் மற்றும் மாநகரம் என பிரிக்கப்பட்டு அதிலும் பல பிரிவுகள் அடங்கிய நீதிமன்றங்கள் உள்ளன.

1. மாவட்ட நீதிமன்ற வகைகள்:
_______________________________

1. மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்

2. நீதித்துறை நடுவர் மன்றம்.

3. சிறப்பு நீதித்துறைக்குற்றவியல் நடுவர் மன்றம்.

4. முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம்.

2. மாநகர‌ நீதிமன்ற வகைகள்:
_______________________________

1. மாநகர குற்றவியல் நீதிமன்றம்.

2. மாநகர சிறப்புக்குற்றவியல் நடுவர் மன்றம்.

3. பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம்.

அது என்ன “நீதிபதி” என்றும் “நடுவர்” என்றும் இரு பெயர்கள்?

கீழமை நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்றங்களில் நீதிபதி என்றே அழைக்கபடுவார்கள்.

கீழமை நீதிமன்றங்களில்... கிரிமினல் வழக்குகளை விசாரிப்பவர் "நடுவர்"" என்றும், "சிவில்" வழக்குகளை விசாரிப்பவர் "நீதிபதி" என்றும் அழைக்கபடுவார்கள்.

பா.வெ.கட்டுரை எண் _76

நன்றி: திருமிகு. Mahendran

No comments:

Post a Comment