Friday, June 8, 2018

வாழைப்பூ வடை

சுவையான சத்தான வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை, பருப்பு வடை போலவே தான் செய்முறை, வாழைப்பூவை சேர்த்து அரைப்பது தான் சற்று  வித்தியாசம்.ஆனால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். வாழைப்பூவின் சற்று துவர்ப்பு, வாசனை இந்த வடையின் தனிச்சிறப்பு.

வாழைப்பூவை ஆய்வது, சற்று நேரம் பிடிக்கும். அதனால், உங்கள் விருப்பமான டிவி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துவிட்டால், பிறகு இது எளிதாகிவிடும்.😛😂

தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)
கடலை பருப்பு-1/4 கப்
துவரம்பருப்ப-1/4 கப்
சின்ன வெங்காயம் - 1 கப் பொடியாய் நறுக்கியது(அ) பெரிய வெங்காயம்
சோம்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
அரிசி மாவு-1 கப்
கடலைமாவு-1 கப்
வரமிளகாய்-2
உப்பு - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது
கருவேப்பில்லை  - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 1 கப் பொடியாக நறுக்கியது
செய்முறை:
வாழைப்பூவை உரித்து நடுவில் இருக்கும் நரம்பையும்,சிறு இதழ் போன்ற பகுதியையும் நீக்கவும்.
பருப்புகளை நன்கு களைந்து, 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
பின்  அதனில் உள்ள தண்ணீரை வடித்து மிக்ஸ்சி ஜாரில் எடுத்து வரமிளகாய் ,சோம்பு ,பெருங்காயம் ,தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய வாழைப்பூ மற்றும்  சேர்க்கவும்.இதனை மறுபடியும் லேசாக அரைக்கவும்.
வாழைப்பூ வடைக்குள் விழுது கரகரப்பாக இருக்க வேண்டும்

அரைத்த விழுதை ஒரு பத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் , சீரகம்,அரிசி மாவு,கடலை மாவு ,கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலந்த பின்பு ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடை போல் தட்டவும்.

எண்ணெய் சூடாகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன உருண்டையை எண்ணெயில் போட்டு பார்க்கவும் அது உடனே மேலே வந்தால் எண்ணெய் சூடாகி விட்டதென்று அர்த்தம்.

அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மீதமுள்ள மாவு அனைத்திலும் இவ்வாறு ஒரு தடவையில் 4-5 வடைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

சத்தான சூடான சுவையான வாழைப்பூ வடை தயார் 😊😋👍

வாழைப்பூவை சிறிதாக நறுக்கியும் சேர்க்கலாம்.

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக
அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவை உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்😊🙌👍


No comments:

Post a Comment