Saturday, March 23, 2019

ஹைதராபாத் மட்டன் பிரியாணி

*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*

*📆24-03-2019📆*

*🐐ஹைதராபாத் மட்டன் பிரியாணி🍲*

*🍱தேவையான பொருட்கள்*

🐐பிரியாணி அரிசி 2 கப்

🐐மட்டன் கால் கிலோ

🐐பெரிய வெங்காயம் 2

🐐பச்சை மிளகாய் 4

🐐இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்

🐐சின்ன வெங்காயம் 5 (நைசாக அரைக்கவும்)

🐐பப்பாளி 1 சிறிய துண்டு(நைசாக அரைக்கவும்)

🐐தயிர் அரை கப்

🐐மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்

🐐கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்

🐐பட்டை 2

🐐கிராம்பு 4

🐐ஏலக்காய் 3

🐐புதினா 1கைப்பிடி

🐐பிரிஞ்சி இலை 3

🐐எலுமிச்சம் பழ சாறு 1 டீஸ்பூன்

🐐ஜாதிக்காய்த்தூள் கால் டேபிள் ஸ்பூன்

🐐பால் 2 டேபிள் ஸ்பூன்

🐐குங்குமப்பூ சிறிது

🐐மஞ்சள் தூள்அரை டீஸ்பு+ன்

🐐முந்திரி 6

🐐எண்ணெய் தேவைக்கேற்ப

🐐நெய் தேவைக்கேற்ப

🐐உப்பு தேவைக்கேற்ப

*🍴செய்முறை*

 🍲வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

 🍲பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியை எடுத்து அரைத்து வைக்கவும்.

🍲 ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டன், அரைத்த பொடி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது புதினா, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

 🍲மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வேக வைத்து வடித்து சிறிது உப்பு கலந்து வைக்கவும்.

 🍲வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

 🍲பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை அப்படியே கொட்டி வதக்கவும்.

 🍲நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்கு வேக வேண்டும்.

 🍲கொஞ்சம் கிரேவியாக இருக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம், வதக்கிய வெங்காயம், மீதி புதினா, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.

 🍲பிரியாணி வெந்ததும் பாலில் குங்குமப் பூவை கரைத்து தௌpத்து மூடி வைக்கவும்.

 🍲முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாற சூப்பர், சுவையான ஹைதராபாத் பிரியாணி ரெடி.

 🍲தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.

 🍲கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பறிமாற சுவை கூடும்.

*☾V☽☾A☽☾N☽☾A☽☾V☽☾I☽☾L☽*

No comments:

Post a Comment