Monday, March 4, 2019

இனாம்கள்(மானியங்கள் )பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

இனாம்கள்(மானியங்கள் )பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

நிலத்திற்காக அரசுக்கு தீர்வை(வரி) கட்டுகிறவர்களின் ‘A” ரெஜிஸ்டரிலும் , தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை(வரி) கட்டாமல் நிலரிசர்வேசனையும் , வரிசலுகையையும், அனுபவித்து கொண்டு இருப்பவர்களை “B” ரெஜிஸ்டரிலும் அரசு தாலுகா கணக்கில் பராமரித்து வந்தது.

ஜமீன் கிராமங்களில் PERMANANT SETTLEMENT கணக்கு முறையிலும் இரயத்துக்கள் கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் A REGISTER கணக்கு பராமரிக்கப்பட்டது.

அதேபோல் ஜமீன் கிராமங்களிலும் , இரயத்து கிராமங்களிலும் , இலவச நிலங்களையும் நில ஒதுக்கீடுகளையும் , தனிநபர் பெயராலும் , கோயில்கள் பெயராலும் , அனுபவித்து வந்தவர்களின் பெயர்களை தாலுகா கணக்கின்“B” ரெஜிஸ்டரில் பராமரித்து வந்தனர்.

1953 களில் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தனி நபர் பெயர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் கிராமங்களை ஒழித்து அதில் குடிவார உரிமையில் யாரெல்லாம் அந்த நிலத்தில் பாடுபட்டு கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கியது அரசு .

அப்படி இனாம்களை ஒழிக்கும் போது அங்கே இரயத்துக்கள் யாரும் இல்லாத நிலையில் மேற்படி நிலங்களை அனாதீனம் என்று வகைபடுத்தி வைத்தது.
மேலும் இனாம் ஒழிப்பின் போது ஆன்மீக மடங்கள், ஆதீனங்கள், பெயரில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தற்போதைய ARegistrar கணக்கு பட்டா கொடுக்கப்பட்டு தீர்வை மட்டும் கட்டும் நிலங்களாக மாற்றி இருக்கிறார்கள்.

நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள் மானியம் எல்லாம் ஒழிக்கப்பட்டது. அப்போ ஏன் இன்றும் கோயில் மானியம் ன்னு சொல்கிறீர்கள் என்று , அதாவது மானியத்தை , இனாம்நிலத்தை அரசு கைப்பற்றவில்லை , அதனை வரி மானியமாக இருந்தநிலையில் இருந்து வரி வாங்ககூடிய நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறது.அதனால் இன்னும் பேச்சு வழக்கில் மானியம் என்ற சொல்லாடல்

மேலும் மானியம் பெறப்பட்ட கிராம ஊழியர்கள் , பூசாரி மானியம், தலையாரி மானியம், வெட்டியான் மானியம், என்று கொடுக்கப்பட்டதை ஒழித்து அதனை அவர்களிடமே ஒப்படைத்து வரிகட்ட வைத்து இருக்கின்றனர்.

அதாவது B Registrar கணக்கை முடித்து அனைத்தையும் ‘A” ரெஜிஸ்டர்க்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. ஆக இப்பொழுது மானியமோ, இனாம்களோ(வடமொழியில் மானியம் உருது மொழியில் இனாம்)கிடையாது. அனைத்து நிலங்களும் தீர்வை செலுத்த கூடிய நிலங்களே!

தற்பொழுது இடம் வாங்க போகும்போது மேற்படி நிலங்கள் இனாம் நிலங்கள் என்று விசாரிக்கும் போது சொல்லப்பட்டால் அல்லது மானியம் என்று பேச்சுவழக்கில் சொன்னால் அது A REGISTER கணக்குக்கு B Registrar இல் இருந்து வந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மேலும் தற்போது நிலம் விற்பவருக்கு எந்த வழியில் நிலம் வந்து இருக்கும் என்று யூகித்து கொள்ள முடியும். எனவே அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த இனாம்களை அல்லது மானியங்களை பார்ப்போம் .
மேலும் இந்த இனாம்கள் எல்லாம் வெள்ளையர்கள் கொடுத்தது அல்ல அதற்குமுன் இருந்த இந்திய ராஜாக்கள் தானமாக கொடுத்ததை வெள்ளையர்கள் ஆவணபடுத்தி இருகிறார்கள், எப்படிஎன்றால்,
பொதுவாக இனாம்கள் ஆதினங்களுக்கும் மடங்களுக்கும் அதிக அளவிலும், முஸ்லிம் மசூதிகளுக்கும் சர்ச்களுக்கும் குறைந்த அளவில் என்று பல லட்சம் ஏக்கரகள் கொடுக்கப்பட்டு B Register பதிந்து இருப்பது முதல்வகை இனாம்.

தனிப்பட்ட சேவைகளை , ராணுவ வீரர்களுக்கு,படைத்தளபதிகளுக்கு ,ஆசை நாயகிகளுக்கு , தேவதாசிகளுக்கு , கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிராமங்களை இனாம்களாக கொடுத்து இருக்கிறார்கள்.
வெள்ளையர்கள் வருவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும் நொடிந்து போன ராஜ குடும்பங்களுக்கும் கிராமங்களை இனாமாக கொடுத்து இருப்பார்கள்.

கிராமத்தில் ஊழியம் செய்யும் நாபிதர், தச்சர், கருமான், சோழியர், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி, போன்ற சேவைகளை செய்வதற்கு சேவை மானியம் (SERVICE மானியம்) கொடுப்பது என்று நான்காக இருக்கிறது.

தேவதாயம் : தமிழகத்தில் இந்த வார்த்தை இன்றளவும் புழங்கப்படுகிறது . தேவதானம் என்றும், மலபார் பகுதிகளில் தேவசம் என்றும் சொல்லுவர். ஏக்கர் கணக்கான நிலங்களை கோவில் பெயரில் வைத்து கொண்டு பட்டர்கள் , குருக்கள், பூசாரிகள், மற்றும் கோவில் வழிபாடுகளில் பொறுப்பு எடுத்து கொள்பவர்கள் அனுபவித்து கொள்ள வழங்கபடுகிறது. காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை போன்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களின் கடவுளின் பெயரில் பரந்து விரிந்த இனாம்கள் இருக்கின்றன. தஞ்சாவூர், திருநெல்வேலி, இஸ்லாமிய , கிறிஸ்துவ, கோவில்களுக்கு இனாம்களுக்கு இருக்கின்றன. இருந்தாலும் தமிழகம் முழுவதும் சிறிய அளவில் எல்லா கடவுள்களுக்கும் இனாம்கள் இருக்கிறது.

தர்மதாயம்:
வேத பாடசாலைகள் அமைக்க கோவிலுக்கு விளக்கு எரிக்க , கிணறு-குளம் கோவிலுக்கு வெட்ட, பக்தர்களுக்கு சத்திரம், அன்னதானம் செய்ய , மண்டபங்கள் கட்ட அறகட்டளைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிக அளவிலான இனாம் நிலங்கள் , இதில் தர்மதாயம் ! அதனுடைய முக்கிய நபரின் பெயரில் இந்த இனாம் இருக்கும்.

பந்த் விருத்தி :
பந்த் என்பது பிராமணர்களை குறிக்கும். விருத்தி என்பது வாழ்வதற்காக கொடுக்கப்பட்டு இருக்கும். இதுபோற இனாம்கள் தமிழகம் முழுதும் இந்த அதிக அளவில் பார்க்கலாம்.

ஸ்தோதிரியம்:
வேதம் கற்று வேதம் பரப்பும் பிராமணர்களுக்காக கொடுக்கப்படும் நிலங்களை ஸ்தோதிரியம்,ஸ்மிருதியம் என்பார்கள் ! இந்நிலங்களை ஸ்ரீவைகுண்டம் அருகில் பார்த்து இருக்கிறேன்.

அக்ரஹாரம்:
இந்த வார்த்தை அனைவரும் அறிந்ததே ! அக்ரஹாரம் அனைத்தும் மானியமாக கொடுக்கப்பட்டது தான் . முதலில் சொன்ன பந்த் விருத்தியும் , ஸ்தோதிரியமும் தனிப்பட்ட பிராமணர்களுக்கு அக்ரஹாரம், ஒரு குறிப்பிட்ட பிராமண குழுக்களுக்கு தானமாக வழங்கபடுவது ஆகும் . மேலும் அக்ரஹாரம் இனாம் நான்கு வகையாக பிரிப்பர்.
சர்வ அக்ரஹாரம் : 100% வரி இல்லாதது.
பிலுமுக்த அக்ரஹாரம் : வரியில் சலுகையுடன் ஒருமுறை கட்டினால் இருக்கும் போதும்
ஜோடி அக்ரஹாரம் : குறைவான வரி தொடர்ந்து கட்டுதல்.

கைரதி;
இது முஸ்லிம் பூசாரிக்கு முஸ்லிம் அரசர்கள் கொடுத்த தனிப்பட்ட இனாம்.
ஜாகிர்:
இது முஸ்லிம் படைத்தளபதிகளுக்கு , வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இனாம். ஜாகிர் இனாம்கள் தமிழகத்தில் பரவலாகவே இருக்கிறது.
அல்தாங்க் இனாம் :
சிவப்பு முத்திரை இனாம் என்று சொல்லுவார்கள். இது முஸ்லிம் கோவில்களுக்கும் , அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அனுபவித்து கொள்ள கொடுக்கபடுகின்ற இனாம்.
தேஷ்முக் & தேஷ்பாண்டே இனாம்:
இந்த இனாம் மும்பையில் பார்க்கலாம். தேஷ்முக் வருவாய் துறையினருக்கு , தேஷ்பாண்டே காவல்துறையினருக்கு கொடுக்கப்படும் இனாம்.

அமாம் & கட்டுபாடி இனாம்:
இந்த இனாம்கள் சித்தூர், திருப்தி பகுதிகளில் பார்க்கலாம். ராணுவ வீரர்களுக்கு இனாமாக கொடுத்தது.

தேசபந்தம் இனாம்:
நீர்காவல், நீர்பிடிப்பு காவல், மடைகாவல் பார்க்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் இனாம் , தமிழகத்தில் இந்த இனாம் பரவலான சிறிய பரப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
கிராம தலைவர் (கர்ணம் ) கிராம கணக்கர், தலையாரி, வெட்டியான், கொடுப்பது களிங்குல மானியம் என்பர். கிராம மருத்துவர் , கருமான், தச்சர், வண்ணான், ஜோசியர், ஆகியோருக்கு கொடுக்கும் மானியம் தேசபந்த மானியம்.

இப்படி பல மானியங்கள் பெற்று ஆண்டனுபவித்து வந்து இவைகள் பத்திரபதிவுகளில் ஆவணமாகி , பிறகு மானிய முறைகள் ஒழிக்கப்பட்டு B கணக்கும்A கணக்கும் ஒன்றாக்கி அவைகள் எல்லாம் வருவாய் கணக்கில் பட்டாவாகி இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.பெங்களூரில் இன்னும் A கணக்கு தனியாகவும் B கணக்கு தனியாகவும் இருப்பதை காணலாம்.A கத்தா B கத்தா என்று சொல்வதை கேள்விபடலாம்.

பொதுவாக ஒரு சொத்து வாங்கும் போது பூர்விக வரலாறையும் சொத்து வரலாறையும், தொடர்பு படுத்தி பார்க்கும் போதுதான் நமக்கு மெய்தன்மை புரிய ஆரம்பிக்கும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
#agricultureland#auctions#authority#bangalore#chennai#cuddalore #flood #help #team #praptham #2015 #chennai #நிவாரண #பொருட்கள் #adangal#DMDA#document#DTCP#EMIplot#fake#FMB#highcourtplan#home#investment#land#maduratakam #chennai #நுழைவாயில் #gateway #மதுராந்தகம் #a.pathivedu#online#patta#plot#realtor#registrationplan#tamilnadu#valar #thozhil #வளர்தொழில் #பஞ்சாயத்து #approved #dtcp #article #அங்கீகாரம்#இனாம்கள் #மானியம்#உயில்#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடலூர்#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்#கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்#பத்திரபதிவு#பத்திரபதிவு #online#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்#வருவாய் #துறை #ஆவணங்கள் #legal #documents #rights
மேலும் விபரங்களுக்கு : www.paranjothipandian.in

No comments:

Post a Comment