Thursday, March 28, 2019

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்.:

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்.:

கிர்ணி ஜூஸ்.:
தேவையான பொருட்கள்.:
கிர்ணிப்பழம் - 1,
பால் - 500 மில்லி,
சர்க்கரை - 100 கிராம்.

செய்முறை.:
கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு:
கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

மாதுளை ஜூஸ்.:
தேவையான பொருட்கள்.:
மாதுளம் பழம் - 1,
சர்க்கரை - 100 கிராம்,
தேன் - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்.

செய்முறை:
மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு:
இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

3. ஜிஞ்சர் மோர்.:
தேவையான பொருட்கள்.:
மோர் - 500 மில்லி,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

No comments:

Post a Comment