Monday, March 25, 2019

சமையல் குறிப்பு♨*_

இன்றைய சமையல் குறிப்பு♨*_

*📆25➖03➖2019📆*

*🍿பொட்டுக்கடலை முறுக்கு🥨*

*🍱தேவையான பொருட்கள்*

🥦பொட்டுக்கடலை அரை கப்

🥦அரிசி மாவு 2 கப்

🥦ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன்

🥦எள் ஒரு டேபிள் ஸ்பூன்

🥦பெருங்காயம்5 சிட்டிகை

🥦எண்ணெய்தேவைக்கேற்ப

🥦உப்பு தேவைக்கேற்ப

*🍴செய்முறை*

🍲  பொட்டுக்கடலையை நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும்.

 🍲 ஒரு தட்டில் அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, ஓமம், எள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தௌpத்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

 🍲 வாணலியில் எண்ணெய் ஊற்று காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். பின்பு முறுக்கு வெந்தவுடன் எடுத்து விடவும்.

🇻 🇦 🇳 🇦 🇻 🇮 🇱
[3/25, 1:08 PM] 🅰LEEⓂ: _*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*_

*📆25➖03➖2019📆*

*🥒கருவளையத்தை நீக்கும் வெள்ளரி💊*

🥒வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.

🥒வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும்.

🥒வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது.
மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவ வேண்டும்.

🥒வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசிய பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.

🥒கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வளையத்தை நீக்க, வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

🇻 🇦 🇳 🇦 🇻 🇮 🇱
[3/25, 1:08 PM] 🅰LEEⓂ: *❇🅾இன்றைய சமையல் குறிப்பு⛔*
        *(25.03.2019)*

*🥗அம்மா சமையல் 🥗*

*காலை சிற்றுண்டி: ரவா கிச்சடி*

*தேவையானவை:*

ரவை - ஒரு டம்ளர், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 8 பல், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, தண்ணீர் - 2 டம்ளர், உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:*

அடுப்பைப் பற்ற வைத்து வாணலியில் ரவையை லேசாக வறுத்து, தனியாக வையுங்கள். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து... நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பூண்டு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது... ரவையை அதில் தூவி கிளறி, அடுப்பை சிம்மில் வைத்தால்... தளதளவென வெந்து, சற்று நேரத்தில் உதிரி உதிரியாக ரவா கிச்சடி ரெடி!

இதற்கு பெஸ்ட் சைட் டிஷ் தேங்காய் சட்னி.

*Tasty group 😍🍔🍪🍤*

No comments:

Post a Comment