Friday, July 21, 2017

ஸ்வர்மா (அரபிய சாண்ட்விச்

#ஸ்வர்மா (அரபிய சாண்ட்விச்)

இன்று அரபிய உணவுகளின் கிங் என்று சொல்லக் கூடிய அளவுக்கு பிரசித்திப்பெற்ற ஸ்வர்மா நம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் ..
நான் எப்போதும் வீட்டில் தான் இதை செய்து சாப்பிடுவது வழக்கம்..
சென்னையில் சிறிய கடை முதல் பெரிய ரெஸ்ட்டாரண்ட் வரை இதை ருசி பார்த்து விட்டேன் ..அனைவருமே ஸ்வர்மா என்ற பெயரில் அதன் ஒரிஜினல் டேஸ்டையே கெடுக்கிறார்கள் ..இப்போது சென்னையில் எங்குமே நான் ஸ்வர்மா சாப்பிடுவதில்லை.
நான் ஒரு ஸ்வர்மா பைத்தியம்..சார்ஜா போனால் அங்கு ஸ்வர்மா வுக்கு பிரபலமான ஒரு லெபனானி ரெஸ்ட்டாரண்ட்டில் தான் வழக்கமாக சாப்பிடுவேன்...ரியல் டேஸ்ட்..
சென்னைக்கு திரும்பி வரும்போது எனது. மகன் 5,6 ஸ்வர்மா வாங்கி கையில் தந்து அனுப்புவார் ..

தேவையானப் பொருட்கள்:
ரொட்டி(குபூஸ்)– நான்கு..இது ரெடிமேடாக பெரிய ரெஸ்ட்டாரண்ட்களில், சென்னை சிட்டி செண்டரில், கிடைக்கிறது ..
போன்லெஸ் சிக்கன்- 250 கிராம்
தயிர் – அரை கப்
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் -1 மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
Paprika powder கொஞ்சம் (கடையில் கிடைத்தால் மட்டும்)

ஷவர்மா சாஸ் செய்ய :

வெள்ளை எள் – ஐம்பது கிராம்
தயிர் – ஐம்பது மில்லி
பூண்டு. விழுது – அரை தேக்கரண்டி
எலுமிச்சை – இரண்டு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் – முன்று தேக்கரண்டி
பார்ஸ்லி இலைகள் –நறுக்கியது கொஞ்சம்
உப்பு – தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி
ஃபிரஞ்ச் ஃபிரைஸ் தேவைக்கு
வெள்ளரி – வினிகரில் ஊற வைத்தது

செய்முறை:
முதலில் குபூஸ்  ரெடி மேடாக கடைகளில் வாங்கி கொள்ளவும்..குபுஸ் செய்முறை குறிப்பு பின்பு தருகிறேன்

ஷவர்மா சாஸ் செய்முறை –
பூண்டுடன் எள்,தயிர் சேர்த்து அரைத்து அத்துடன் உப்பு,வெள்ளை மிளகு தூள், பார்ஸ்லி இலைகள்,எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்...

செய்முறை:
சிக்கனை கழுவி, சிறு சிறு ஸ்ட்ரிப்புகளாக கட் பண்ணி,  தயிர், மிளகு தூள், உப்பு, ஆலிவ் ஆயில், ஏலக்காய் தூள்,paprika தூள், இவைகளுடன் சேர்த்து  பிரிட்ஜில் நான்கு  மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை ஓவனில் கிரில் செய்து கொள்ளலாம். ஓவன் இல்லையெனில்  தவ்வாவில் போட்டு நல்ல வறுத்து கொள்ளுங்கள்.

பிரென்ச் பிரைஸ்...உருளைக் கிழங்கை நீளவாக்கில் ஸ்ட்ரிப்புகளாக வெட்டி. கொஞ்சம் நேரம் உப்பு நீரில் ஊற்றி வைத்து  பொரித்து வைத்து கொள்ளவேண்டியது.

வெள்ளரிக்காயை நீள வாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி வினிகரில் ஊற வைத்துக் கொள்ளவும் ...

குபூஸை நடுவில் இரண்டாக பிரித்து தவாவில் சூடு பண்ணிக் கொள்ளவும் அதில் ஷவர்மா சாஸ் நன்கு தடவி, அதில்
வறுத்த சிக்கன் சிறு சிறு துண்டுகளை பரப்பி,வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் துண்டுகள் 2,3 வைத்து, அதனுடன் கொஞ்சம் ஃபிரஞ்ச் ஃபிரைஸ் நடுவில் வைத்து, கொஞ்சம் தக்காளி சாஸ், சில்லி சாஸ்,மையோனைஸ் இவற்றையும் அதில் வைத்து ரொட்டியை ரோல் செய்தால். நைஸ், ருசி மிகுந்த ஸ்வர்மா ரெடி ...

No comments:

Post a Comment