Friday, July 21, 2017

மயோனைஸ்(home made mayonnaise )

மயோனைஸ்(home made mayonnaise )

ஐந்து நிமிடங்களில் வீட்டிலேயே தயார் செய்யலாம் மயோனைஸ்(home made mayonnaise )
செலவும் மிச்சம்.. சூப்பர் மார்க்கெட்டில் போய் வாங்கினால் அநியாய விலையாக இருக்கிறது . வீட்டில் நீங்களே செய்துப் பாருங்களேன் ..வெரி வெரி சிம்பிள் ..

இரண்டு முட்டையின் மஞ்சள் கரு( வெள்ளைக் கருவை வீணாக்காமல் கார்லிக் சாஸ் செய்ய பயன்படுத்தலாம்.ஒரே நேரத்தில் இரண்டு சாஸையும் தயாரிப்பது நேரம் மிச்சம்).
ஒரு கப் சனோலா அல்லது ரீபைண்ட் ஆயில்
கொஞ்சம் உப்பு மிளகுத் தூள்.
2 ஸ்பூண் வினிகர் ..
அரை ஸ்பூண் சர்க்கரை ..
மிக்ஸியில் உள்ள சிறிய பிளண்டரில் முட்டை மஞ்சள் கரு, வினிகர் ,உப்பு,மிளகுத் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்ததும் கால் கப் எண்ணெய் சேர்த்து high speedல் அரைத்து கொண்டிருக்கும் போதே மீதி எண்ணெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும் ..இப்படியே சிறிது இடைவெளி விட்டு ஐந்து நிமிடங்கள் வரை அரைத்து எடுக்கவும்.

இப்பொழுது மயோனிஸ் ரெடி..ரெம்பவும் கட்டியாக இருந்தால் சிறிது வெண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கார்லிக் flavour வேண்டும் என்றால் முதலில் அரைக்கும் போது 2 பல் பூண்டு சேர்த்து கொள்ளவும் ...

குறிப்பு : மயோனிஸ்ஸும் கார்லிக் சாஸும் நான் கடையில் வாங்குவதில்லை ..பல வருடங்களாக சொந்த தயாரிப்பு தான்..

No comments:

Post a Comment