Friday, July 21, 2017

ஹமூஸ் - hummus

ஹமூஸ் - hummus
(அரபிய உணவுகள் )

ஹம்மூஸ் என்ற உணவு வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் ..இதுவும் செய்வது மிகவும் எளிது..

அரபு நாடுகளில் அலுவலகத்தில் காலை உணவாக குப்ஸ், பல சுவை கொண்ட பாலாடை கட்டிகள், அருமையான கீரையுடன் கூடிய சாலட், இவற்றுடன் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்மூஸ் .. இவைகளை வாங்கி 5,6 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம் ..இடையில் சுலைமானி டீ யும் உண்டு..மறக்க முடியாத காலை உணவு இது...

அரபிய உணவு களில் குபூஸ் மற்றும் சமோலி,பிலாபிலுக்கு இந்த ஹமூஸ் இல்லாமல் இருக்காது.

ஹம்மூஸ்:

தேவையானவை
வெள்ளை கொண்டை கடலை - 100 கிராம்
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
வெள்ளை எள் - மூன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது( இது இப்போது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது )
ஆலிவ் ஆயில் - மூன்று மேசை கரண்டி

செய்முறை
1.வெள்ளை  கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து .வேகவைத்து கொள்ளவும்.
2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து
பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்
5. சுவையான ஹமூஸ் ரெடி. ஒரு பிங்கான் பாத்திரத்தில் ஹம்மூஸை நிரப்பி நடுவில் குழி அமைத்து அதில் ஆலிவ் எண்ணையை ஊற்றி பரிமாறவும் ..
வெரி சிம்பிள்..

குப்ஸ் ஹோட்டல்களில் ரெடிமேடாக கிடைக்கும் ..வீட்டிலும் செய்யலாம்( பிறகு குறிப்பு தருகிறேன்).குப்ஸுடன் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடலாம் ..
இங்குள்ளவர்களுக்கு ஹம்மூஸ் ஒரு மாற்றமாக புதுமையாக கூட இருக்கலாம்.
சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்லுங்க!
இது அரபு நாடுகளில் டின்களில் ரெடிமேடாகவே கிடைக்கும் ..
இங்கு நமக்கு வீட்டில் தான் செய்தாக வேண்டும்..

1 comment: