Friday, July 21, 2017

ஃப்ரைட் ரைஸ்

ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்:
அரிசி – கால் கிலோ
தக்காளி – 2
பள்ளாரி – 2
முட்டை – 2
முட்டைகோஸ் – 100 கிராம்
காரட் – 2
பச்சை மிளகாய் – 4
வெங்காயத்தழை – 4
பூண்டு -10 பல்
பீன்ஸ் – 10
சோயா சாஸ் – சிறிதளவு
அஜினமோட்டோ – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி முக்கால் பாகம் வெந்தபின் கிளறிவிட்டு காற்று படும் படி திறந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு அது காய்ந்த பின் பொடியாக நறுக்கிவைத்த பூண்டு போட்டு அது பொன்னிறம் வந்தபின் நறுக்கி வைத்த காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.(தக்காளியைத் தவிர). தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு அஜின மோட்டோ சேர்த்துக்கொள்ளவும். பச்சைக்காய்கறிகள் பாதி அளவு வேந்தபின் அத்துடன் ஆறிய சாதத்தை சேர்த்து மேலும் கீழுமாக நன்றாக புரட்டவும். பின்னர் அத்துடன் தேவைக்கேற்ப சோயா சாஸ் சேர்த்து மீண்டும் கிளறிவிடவும். (சோயாசாஸில் உப்புத் தன்மை இருப்பதால் சுவைக்கு ஏற்ப கலந்து கொள்ளவும். அதிகம் சேர்த்தால் சாதம் இருண்டு பிசுபிசுத்து விடும்).

முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து ப்ளைன் ஆம்லெட்டாக பரத்தி எடுக்கவும். அதை நேர்கோட்டில் மற்றும் பக்க வாட்டில் வெட்டி சிறுசிறு துண்டுகளாக வைத்துக்கொள்ளவும். தக்காளியை நான்காக வெட்டி அதன் விழுதினை அகற்றி தடிமனான தோல் பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும். சாதக் கலவையில் நறுக்கிய தக்காளி மற்றும் முட்டையை தூவி இலேசாக கிளறி விடவும். பார்வைக்கு அழகாகவும் மணமும் சுவையுடன் கூடிய ஃப்ரைட் ரைஸ் தயார்.
குறிப்பு: ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் ஆசையோடு வாங்கி உண்ணும் உணவில் எந்த அளவிற்கு சுத்தமும் சுகாதாரமும் இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல இயலாது. எனவே சத்து மிக்க காய்கறிகளை சேர்த்து நாம் நமது வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இத்துடன் வேக வைத்த சிக்கன், இறால், ஆகியவற்றை தத்தம் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி என்றாலே முகம் சுழிக்கும் சிறார்களுக்கு நல்ல கலர்ஃபுல்லான இந்த கலவை சோறு நிச்சயம் பிடிக்கும். வீட்டில் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

Rabiya Rafeeq.
Faiza Kayal Samayal

No comments:

Post a Comment